22 July 2016

கொடாக்கண்ட மாமனாரும் , விடாக்கண்ட மாப்பிள்ளையும் :)

 காரம்  பிடிக்கும் .அதிகாரம் ?       
          ''உங்களுக்கு காரம் பிடிக்கும்னா மனைவிகிட்டே செய்யச் சொல்ல வேண்டியதுதானே ?''
          ''அவளுக்கு என்னை அதி'காரம்'  பண்ணத்தானே  பிடிக்குது ?''

ஆத்திரப் படுவதிலும் நியாயம் இருக்கே :)
           ''பரோல்லெ  வெளியே போய் ,யாரைக் கொலைப் பண்ணிட்டு  உள்ளே வந்திருக்கே ?''
            ''நல்லா வருவேன்னு எனக்கு நேமாலஜிப் படி பெயர் வைத்தவரைத்தான் போட்டு தள்ளிட்டுவந்தேன் !''

காதலியின் கெடுவுக்கு காரணம் ,எதுவா இருக்கும் ?
          ''என்னடா  சோகமா இருக்கே ,உன் காதலி  என்ன சொல்லிட்டு போறா ?''
         ''நாளைக்கே ஓடிப் போறோம் ...தாலிக் கயிறு என்  கழுத்துலே தொங்கணும்...இல்லேன்னா ..கயிறிலே என் கழுத்து  தொங்கும்னு மிரட்டிட்டு போறாடா!''

கொடாக்கண்ட மாமனாரும்   , விடாக்கண்ட மாப்பிள்ளையும்  :)
          ''மாசக்கணக்கா டேரா போட்டிருக்கிற மாப்பிள்ளைக்கு நாசூக்கா புரியவைக்க SMSஅனுப்பினது வம்பாப் போச்சா ,ஏன் ?''
        ''விருந்தும் மருந்தும் மூன்று நாள்னு SMS அனுப்பினது யார்ன்னு தெரிஞ்சுக்காமே வீட்டை விட்டு போக மாட்டேன்னு அடம் பிடிக்கிறாரே !''

பேதை தந்த போதையினால் மிதப்பா ?
விமானம் தரை இறங்கிய பின்பும் மிதந்துக் கொண்டுதான் இருக்கிறேன் ...
விமானப் பணிப்பெண்ணாய் என்னவள் !


19 comments:

  1. எங்க சொந்தக் ‘காரங்க’ யாரும் இருக்கக்கூடாதுங்கிறா...!

    வேற ஒருத்தனோட நேரத்தப் பாத்துச் சரியா கணிக்காம சொல்லிட்டாருங்கிறத நா சரியா கணிச்சிட்டேன்...!

    ஒனக்கு ஆயுசு கெட்டி இல்லைன்னு ஜாதகர் சொன்னப்பவே நெனச்சேன்...!

    தானா கனியலைன்னா... தடியால அடிக்க வேண்டியதுதான்...!

    விமானம் தரை இறங்கியதும்... வி ‘மானம்’ போகமல் கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா... இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா...?!

    த.ம. 1

    ReplyDelete
    Replies
    1. பரவாயில்லை ,வரவே கூடாதுன்னு சொல்லலையே :)

      உங்க கணிப்பு சரிதான் :)

      மிரட்டலே காதலாகி போச்சு :)

      பஞ்சாமிர்தமா செய்யப் போகிறோம் :)

      ஆகாயத்திலேயே தாலி கட்டி வாழ்வோமா :)

      Delete
  2. காரம் நல்லாயிருக்கா :)

    ReplyDelete
  3. 01. அதாவது பிடிச்சுருக்கே...
    02. சோலந்தூர்க்காரரையா ?
    03. ‘’பஞ்ச்’’ ஸூப்பர் ஜி
    04. திருடனுக்கு தேள் கொட்டிய கதைதான்
    05. ஆஹா.... வீடு போய்ச் சேர்ந்திடுவானா ?

    ReplyDelete
    Replies
    1. அவளுக்கு பிடிக்குது ,அய்யாவுக்கு :)
      அவர் தலைஎழுத்து போயிட்டார் :)
      ஏதோ ஒண்ணு தொங்கினா சரிதானே :)
      ஆனா ,மாப்பிள்ளைக்கு உரைக்கிற மாதிரி தெரியலையே :)
      சாக்கடைக்குப் பக்கத்திலே விழந்தே கிடக்கான் :)

      Delete
  4. Replies
    1. பரோல்லெ வெளியே போனவர் செய்தது சரிதானே :)

      Delete
  5. ஆக..ரெண்டு கண்டனும் நம்ள எதுவும் பன்னாமல் இருந்தால் ...சரி நண்பரே......

    ReplyDelete
    Replies
    1. நாம என்ன மாமனா ,மச்சானா :)

      Delete
  6. காரத்தினும் அதிகாரம் சிறந்தது தானே
    பரோல் முடிந்து நல்லாத்தானே வந்திருக்கார்
    கொன்றிடுவேன் என்று சொல்கிறாளோ
    SMS அனுப்பத்தெரிந்த மாமனாருக்கு மருமகனை வீட்டை விட்டுப் போகச் சொல்ல தைரியம் இல்லையே
    ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. அதிக காரம் உடம்புக்கு நல்லதல்ல :)
      இனி இன்னும் நல்லா வருவார் :)
      வயிற்றிலே வளர்வதை சொல்கிறாள்:)
      நேரடியா சொல்லக் கூச்சம் :)
      காதலி மிக உயரத்தில் :)

      Delete
  7. //நேமாலஜிப் படி பெயர் வைத்தவரைத்தான் போட்டு தள்ளிட்டுவந்தேன் !''//

    போட்டுத் தள்ளவேண்டிய ஆள்தான்!

    ReplyDelete
    Replies
    1. நேமாலஜி நிபுணருக்கு .தனக்கு இப்படி சாவு வரும்னு தெரிந்து இருக்குமா :)

      Delete
  8. //கயிறிலே என் கழுத்து தொங்கும்னு மிரட்டிட்டு போறாடா!''//

    “ரெண்டுபேரும் தூக்கிலே தொங்குவோம்”னு சொல்லலையே?

    ReplyDelete
    Replies
    1. வயிற்றிலே வளர்வதைச் சேர்த்தால் மூணு உயிராச்சே :)

      Delete
  9. Replies
    1. படத்தையும்தானே :)

      Delete