30 July 2016

இடுப்புக்காக குடமா ,குடத்துக்காக இடுப்பா :)

           ''பிரம்மன் கூட ஆணாதிக்கவாதின்னு  ஏன் சொல்றீங்க ?'' 
           ''குடம் வைப்பதற்கு என்றே உருவாக்கி  இருக்கானே , பெண்ணின் இடுப்பை  !''  
திருஷ்டிப் பூசணிக் காய்க்கு பதிலாய் ?
            'புதுசா வாங்கின கேமரா செல்போனில்  ,எங்க அம்மா போட்டோவை   'ஸ்க்ரீன் போட்டோவாய் 'வைத்துக்கச் சொல்றீயே ,அம்புட்டு பாசமா ?''
           ''அட நீங்க வேற ,திருஷ்டி கழியும்னு சொல்ல வந்தேன் !''

இவர் வேகம் யாருக்கு வரும் :)        
             ''பரவாயில்லையே, ஒரு வார வேலையை  ஒரேநேரத்திலா ...அப்படியென்ன செய்வீங்க ?''
             ''  தினசரி ...காலண்டர் தாளை கிழிக்கிறதுக்கு பதில் ,வாரம் ஒரு தடவைக் கிழிப்பேன் ! ''

உபயம் எனும் பேரில் வரும் அபாயம் :)
            'கோவிலில் உள்ளஎல்லா உண்டியல்களுக்கும்  பூட்டு வாங்கித் தர்றேன்னு தலைவர் சொன்னாலும் ஏன் வேண்டாங்கிறீங்க ?''
            ''டூப்ளிகேட் சாவிகளை ரெடி பண்ணிக்கிட்டு கொடுத்து விடுவாறோங்கிற பயம்தான் !''

போர்த்துக் கொண்டு படுத்தாலும் ....:)
சொந்தக் காசிலே சூனியம் வச்சிக்கிறது ...
இது காதல் திருமணத்திற்கும் பொருந்தும் !

14 comments:

  1. படம் சூப்பர்ஜி.

    ReplyDelete
    Replies
    1. பிரம்மனின் படைப்பு பிரமிக்க வைக்குதே :)

      Delete
  2. இடுப்பு இப்படித் துடிக்கிது... அவளின் இதயம் என்ன இடுப்பிலா இருக்கிறது...? உன்னைச் செய்த பிரம்மனே உன்னைப் பார்த்து ஏங்குவான்...!

    நீ வேற... அம்மா போட்டாவை வச்சாத்தான் பேட்டா செலவுக்குத் துட்டு கிடைக்கும்...!

    நல்லாத்தான் கிழிச்சீங்க...! எனக்கு கிழிக்கிற அந்த வேலையெல்லாம் இல்ல... மாதக் காலண்டர்தான்...!

    டூப்ளிகேட் சாவிகளை ரெடி பண்ண வேண்டியதில்லை... மூணு சாவியில ரெண்டத்தானே கொடுப்பாரு... கொடுத்து வைத்தவர் அவர்தான்...!

    காசில்லாததால்... சூனியக்கார சூத்ரதாரி... காசு வாங்கத்தானே கல்யாணமே...!

    த.ம. 3





    ReplyDelete
    Replies
    1. துடிப்பைப் பார்த்தால் ,ஹார்ட் அட்டாக் நமக்கு வந்து விடும் போலிருக்கே :)
      பிரம்மன் ,மனித வடிவில் வந்து தாலி கட்டாமல் போனால் சரி :)

      பிறகெதுக்கு என்னை கட்டிகிட்டே :)

      அப்படின்னா ,ஒரு வருஷ வேலையை ஓரு நிமிஷத்திலே செய்வீங்க ,அப்படித்தானே :)

      எதை யாரிடம் கொடுத்து வச்சிருக்காரோ:)

      காசு இல்லேன்னா காதல் கூட காணாமல் போய்விடுமே :)

      Delete
  3. 01. அப்படீனாக்கா.. குழந்தைகள் உட்காரும் சேர் இல்லையா ?
    02. மாமியார் மீது இப்படியாவது பாசம் இருக்குதே....
    03. வருடம் ஒருமுறை கிழிக்கலாமே....
    04. அரசியல்வாதிமீது இம்’’பூட்டு’’ நம்பிக்கை.
    05. எல்லோருக்குமா... ?

    ReplyDelete
    Replies
    1. அதுவும்தான் ,உண்மையில் பிரம்மன் தீர்க்கதரிசி தான் :)
      கழுதைப் படத்துக்கு பதிலாய் மாமியார் படத்தை சுவரில் தொங்க விட்டவராச்சே :)
      அதையேன் கிழிக்கணும் ,தூக்கி எறிய வேண்டியதுதான் :)
      பூட்டாத பூட்டுக்களா என்று பார்த்து வாங்கிக்கணும் :)
      சூனியம் அனைவருக்கும் பொது:)

      Delete
  4. பகவானே அனைத்தும் அருமை,,,

    காசு தான் காதல் இப்போ,,

    ReplyDelete
    Replies
    1. காதல் கசக்குதையா என்று பாடத் தோன்றுகிறதே :)

      Delete
  5. ஆண்களின் இடுப்பில் குடம் உட்காராதா.?
    விருப்பப்பட்டதைத்தான் ஸ்க்ரீன் சேவராக வைத்துக் கொள்வது வழக்கம் என்று கேள்வி
    ஒரு வாரம் சோம்பி இருந்து.......
    அரசியல் வாதி என்றாலேயே பூட்டவிழ்ப்பவரா
    காதல் என்றால் பிடிக்காதோ

    ReplyDelete
    Replies
    1. இருந்தாலும் அது நல்லாவா இருக்கு :)
      மருமகள் வைத்துக் கொள்ளச் சொல்கிறாள் என்றால் ...:)
      இப்போ பீற்றிக் கொள்கிறார் :)
      அடிப்படைத் தகுதி என்று நான் சொல்லவில்லை :)
      ஏன் பிடிக்காது ?நானே ...:)

      Delete
  6. வேகம் பிரமிக்க வைக்கிறது!

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. இந்த வேகத்தில் போனால் சீக்கிரமே நாடு வல்லரசு ஆயிடும் :)

      Delete
  7. ஆமாங்கய்யா... சத்தியமா..'பிரம்மன்என்பவன் ஆணாதிக்கவாதிதான் அய்யா...

    ReplyDelete
    Replies
    1. பெண்ணின்இடுப்புக்கு நிறைய வேலை இருக்கும் என்று அதற்கென்றே டிசைன் செய்த தீர்க்கதரிசியாச்சே :)

      Delete