17 July 2016

லட்ச லட்சமாய் சம்பாதிக்க பெண் பதிவர் தரும் டிப்ஸ் :)

தூங்கிக் கொண்டே  காரோட்டுவாரோ :)            
         ''என் கூட கார்ல வர பயமாயிருக்கா ,ஏன் ?''
          ''தூக்கத்திலேயே உயிர் போனா  நல்ல சாவுன்னு சொல்றீங்களே !''

இதைக் கேட்ட பிறகும்  உயிரோட இருக்கலாமா ?
            ''உங்க  பையன் , அவன்  நண்பர்கள்கிட்டே உங்களைக் கேவலமா அறிமுகப்படுத்துறானா ,எப்படி ?''
            ''அவங்க அம்மாவை 'மம்மி'ங்கிறான்,என்னை 'டம்மி 'ங்கிறானே !''

சுயநலவாதிகளின் இன்னொரு பெயர் !
நழுவுற தண்ணியிலே நழுவுற மீனாய் நடந்துக் கொள்பவர்களை 
செல்'பிஷ் 'என்பதில் தவறே இல்லை !

 லட்ச லட்சமாய் சம்பாதிக்க பெண் பதிவர் தரும் டிப்ஸ் !
        பார்ப்பதற்கு  ஒயிலாய் காட்சி தரும் இவரை உங்களுக்கு தெரியுமா ?
        நம்மைப் போன்றே ப்ளாக் (ஆனால் ஆங்கிலத்தில் )எழுதிக் கொண்டிருந்த இவர் ,தற்போது முழுநேர எழுத்தாளர் ஆகி விட்டார் ....
  இவர் பிளாக்கில்  எழுதியதை புத்தகமாய் வெளியிட அது சூப்பர் ஹிட் ...தொடர்ந்து 'டைம்ஸ் ஆப் இந்தியா 'வில் மட்டுமல்ல 'ரீடர்ஸ் டைஜஸ்ட் 'டிலும் எழுதி புகழ்பெற்றார் ...
தற்போது பெங்களூரில் கணவர் ,இரண்டு குழந்தைகளுடன்  வசித்து வரும் ...இவர்தான் ப்ரீத்தி செனாய் !
 இவர் எழுதிய புத்தகங்கள் நம் நாட்டில் மிக அதிகம் விற்பனையாகின்றன ...'போர்ப்ஸ் 'பத்திரிக்கை கடந்த ஆண்டு நடத்திய ஆய்வில் ...
'இந்தியாவின் செல்வாக்கான முதல் நூறு பிரபலங்கள் 'பட்டியலில் இவரும் ஒருவர்...இவர் எழுத்தைப் பற்றி இவரே கூறியது ...
'நான் தீவிர இலக்கியமெல்லாம் எழுதாததால் என் புத்தகங்கள் சாதனை புரிகின்றன '
நாமும் .இவரைப் போன்று புகழ் பெற அவரே தந்த டிப்ஸ் ... 
     ஒரு வலைப் பூ என்பது வாசகர்களை ஈர்க்க கூடியதாகவும் .அவர்களுக்கு ஒரு புதிய விஷயத்தை அறிமுகப் படுத்தக் கூடிய தன்மையை கொண்டதாக இருக்க வேண்டும் .எழுத சோம்பேறித் தனம் உள்ளவர்கள் வேலைக்கு ஆக மாட்டார்கள் ,தொடர்ச்சியாக எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் .போலித் தனம் கூடாது .உங்களை உங்கள் எழுத்துக்கள் வாயிலாக வாசகர்கள் நேரில் பார்ப்பதைப் போன்று உணர வைக்க வேண்டும் .எனவே உங்களைப் பற்றி எழுதும் போது 'பில்டப் 'கொடுத்து எழுதவே கூடாது .பொய்யையும் உண்மையையும் பிரித்துப் பார்க்க வாசகர்களுக்கு தெரியும் ,எழுதுபவர்களை விட வாசகர்கள் புத்திசாலிகள் .
உங்கள் நண்பர்கள் உறவினர்கள் தவிர்த்து நிறைய பேர் உங்கள் வலைத் தளத்திற்கு வருகிறார்கள் என்றால் நீங்கள் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம் ,எழுத்தாளர் ஆகி விட்டீர்கள் என்று !வெற்றி பெற்றால் மட்டும் போதாது ,அதை நாளுக்கு நாள் ,வாரத்துக்கு வாரம் ,மாதத்துக்கு மாதம் ,வருடத்துக்கு வருடம் தக்க வைத்துக் கொள்ள உழைக்க வேண்டும் .மற்ற எல்லாமே உங்களை தேடி வரும் !

ப்ரீத்தி செனாய் வழங்கிய டிப்ஸ்களைப் படித்தீர்களா ? நீங்களும் கடைப் பிடிக்கலாமே !

23 comments:

  1. ஆங்கில வலைப்பதிவர் ப்ரீத்தி செனாய் அவர்களின் பதிவை மீளவும் பகிர்ந்து நமக்கு வழிகாட்டியமைக்கு நன்றி. இதனை எனது அடுத்த பதிவில் அறிமுகம் செய்ய, தாங்கள் அனுமதி தாருங்கள் ஐயா!

    "தூங்கிக் கொண்டே காரோட்டுவாரோ" என்ற பதிவைப் படித்ததும் எங்கேயோ நான் படித்த வரிகள் நினைவுக்கு வந்தது.

    ஊர்தி ஓட்டுநர் விழிப்பாக ஓடும் வரை
    பயணிகள் நன்றே தூங்கிப் பயணிக்கலாம்
    ஊர்தி ஓட்டுநர் ஓடும் வேளை தூங்கினால்
    பயணிகள் பயணிக்காது தூங்கி விடலாம்
    "நேரும் விபத்துகளால்..."

    ReplyDelete
    Replies
    1. தாராளமாய் பயன்படுத்திக் கொள்ளுங்கள் !

      இப்படியும் சொல்லலாமா ..நடத்துனர் தூங்கினால் நமக்கு லாபம் ,ஓட்டுனர் தூங்கினால் பெரும் நட்டம் :)

      Delete
  2. டம்மியை அதிகமாக ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. அம்மா என்றால் சிலருக்கு அலர்ஜி ,உங்களுக்கு மம்மியா :)

      Delete
  3. போறதுன்னு முடிவாயிட்டா... கட்டையில போனா என்ன...? கார்ல போனா என்ன...?

    பரவாயில்லை... ஒங்களை ‘டம்மி’ன்னு சொன்னது... அவங்க அம்மாவை ‘மம்மி’ன்னு சடலமாக்கிட்டானே...!

    கழுவுற மீன்லயும் நழுவுற மீனைப் பார்த்தா செல்பி(ஷ்) எடுக்க வேண்டியதுதானே...!

    ப்ரீத்தி செனாயின் ‘சத்திய சோதனை...!’

    த.ம. 5







    ReplyDelete
    Replies
    1. அவர் மட்டுமே போகட்டும் என்றுதானே இந்த முடிவு :)

      ஓ..நீங்க அந்த எகிப்து மம்மியைச் சொல்றீங்களா :)

      ஓடுற மீனோட எப்படி செல்பி எடுக்கிறது :)

      நமக்கு அதானே வேத வாக்கு :)

      Delete
  4. மம்மி/டம்மி, செல்ஃபிஷ் ஹஹஹ் ரசித்தோம்..

    ப்ரீத்தி செனாய் டிப்ஸ் அருமை....

    ReplyDelete
    Replies
    1. டிப்ஸ் அருமைதான் ,ஆனால் தமிழ் பதிவர்களுக்கு பைசா தேறும்போல் தோன்றவில்லையே :)

      Delete
  5. ப்ரீத்தி செனாய் டிப்ஸ்
    ரசித்த பதிவு.
    நன்று சகோதரா.
    https://kovaikkavi.wordpress.com/

    ReplyDelete
    Replies
    1. வென்ற பதிவர் சொல்வதெல்லாம் சரியாத்தானே இருக்கும் :)

      Delete
  6. மம்மியும் டம்மியும்.... ரசித்தேன்..

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. எல்லோர் வீட்டிலும் இப்படித்தானே :)

      Delete
  7. புத்திசாலிகள் அதிகம் இருப்பதால்......ப்ரீத்தி சென்நாய்போல என்னால் ஆக முடியல...போலி இருக்கு.. எதுக்கும் கொடுத்து வைக்காததினால் இந்த நிலம .....

    ReplyDelete
    Replies
    1. போலி இருக்கு ...போலிருக்குன்னு வாசித்தேன் ,உண்மை எழுத்துக்கு என்றும் மதிப்பிருக்கு தோழரே :)

      Delete
  8. அருமையான டிப்ஸ்.
    த ம 9

    ReplyDelete
    Replies
    1. இப்படி டிப்ஸ் கொடுக்க அவங்களுக்கு உரிமையிருக்கு :)

      Delete
  9. 01. கழட்டி விடுவதற்கு நல்லவழி
    02. உண்மைதானே..
    03. சரிதான்.
    04. அருமையான அறிவுரைதான் ஆனால், எழுத சோம்பல் படக்கூடாதாமே.......

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை,முதல்லேயே சொன்னாரே :)
      நீங்களுமா ஆஆ :)
      இந்த மீனும் ஒருநாள் தூண்டிலில் மாட்டும் :)
      அதானே ,அதெப்படி நம்மால் முடியும் :)

      Delete
  10. நீங்கள் முழு உடல் நலம் பெற்று ,கருத்துரை கூற விரைவில் வர விழைகிறேன்:)

    ReplyDelete
  11. இயற்கையாகவே அபார எழுத்தாற்றல் உள்ளவர்களின் திறமை எவ்வகையிலாவது வெளியில் வந்து விடும்.
    தொடர்ந்து எழுதுவது நிச்சயம் அதிக வாசகர்களைப் பெற்றுத்தரும்.

    ReplyDelete
    Replies
    1. நம்ம எழுத்தாற்றலுக்கு மதிப்பு இருக்கா ஜி ? த ம வோட்டு கூட விழ மாட்டேங்குதே ஜி :)

      Delete
  12. Replies
    1. டிப்ஸ் அருமைதானே :)

      Delete