2 July 2016

கவர்ச்சி ஆடை அவசியம்தான் ...யாருக்கு :)

இப்படி சொன்னா என்ன அர்த்தம் :)               
            ''ஏண்டி ,பேய் வர்றது நாய்ங்க கண்ணுக்கு தெரியும்னு  சொல்றாங்களே ,உண்மையா ?''
             ''என் கணவரிடம் கேட்டு சொல்றேண்டீ !''

இதில் கோபப்பட என்ன இருக்கு :)            
              ''போலீஸ்காரங்க  மட்டும் வசிக்கிற காலனியில் என்ன கலாட்டா ?''
             ''மாருதி காலனி  என்பதை யாரோ மாமூல் காலனின்னு அடிச்சு எழுதியிருக்காங்களாம்!''

மனைவி சொல்லே மந்திரம்னு இருந்தது , அந்தக் காலமா ?
          ''இது என்னடி அநியாயமா இருக்கு ,உன் வீட்டுக்காரர் திடீர்னு நாத்திகரா மாறிட்டாரா ,ஏண்டி ?''
          ''நம்ம ஒண்ணு நினைச்சா தெய்வம் ஒண்ணு நினைக்கும்னு சொன்னேன் ...அப்படின்னா,நாம எதுக்கு தெய்வத்தை நினைக்கணும்னு  கேட்கிறார்டி !''

குற்றமுள்ள நெஞ்சு குத்துதோ ?
         ''ரேசன் கடையைப் பூட்டுனோமா ,மாசமா இருக்கிற பெண்டாட்டியைப் போய் பார்த்தோமான்னு இல்லாமே ...தினசரி கோவிலுக்கு போய் என்ன வேண்டீக்கிறே ?''
         ''எடைக் குறைஞ்சாலும் பரவாயில்லை ,குறைப் பிரசவம் ஆகிவிடக்கூடாதுன்னுதான் !''

கவர்ச்சி ஆடை அவசியம்தான்  ...யாருக்கு :)
முழுக்கைச்  சட்டையில்...
கணவன்  அழகாய் இருப்பதாக சொன்னாள் ...
ஜன்னல் ஜாக்கெட்டில் இருந்த இளம் மனைவி !

36 comments:

  1. Replies
    1. ரேஷன் கடைக்காரரின் வேண்டுதல் பலிக்குமா ,கரந்தையாரே :)

      Delete
  2. //''என் கணவரிடம் கேட்டு சொல்றேண்டீ !''//
    அவர் தன் கண்களால் தினமும் பேயைப்[மனவி] பார்ப்பவர் என்பதால்...சரிதான்!

    ReplyDelete
    Replies
    1. ‘மனவி’யை ‘மனைவி’ என்று வாசியுங்கள்.

      Delete
    2. பேய்க்குத்தான் வாழ்க்கைப்பட்டிருக்கேன் என்று வேறு சொல்கிறாரே :)

      Delete
  3. நான் போட்ட ஓட்டு எண் ‘3’ பதிவாகவில்லையே?

    ReplyDelete
    Replies
    1. ‘உங்கள் வாக்கு ஏற்கனவே சேர்க்கப்பட்டுவிட்டது’ என்று வருகிறது!

      Delete
    2. வந்தோரும் மூன்று பேர் ,விழுந்திருப்பதும் மூன்று வோட்டு ..கணக்கு சரிதான்:)

      Delete
  4. 01. நல்ல மனைவிதான்
    02. உண்மைதானே..
    03. இதுதான் காரணமா ?
    04. தொழில் புத்தி
    05. இனி விலைவாசியைப்பார்ரது அவனும் ஜன்னல் வைத்து தைப்பான் போலயே....

    ReplyDelete
    Replies
    1. நல்ல மனைவியா ,நாய்க்கு மனைவியா :)
      அவர்களே மாமூல் காலனி என்றே வைத்திருக்கலாமோ :)
      இதுவும் ஒரு காரணம் :)
      ஆனால் தொழிலில் பயபக்தி இல்லையே :)
      பனியனில் வேண்டுமானால் ஜன்னல் இருக்கும் :)

      Delete
  5. Replies
    1. இரண்டு கே ,கழுத்துக்கு கத்தின்னு தெரியும் ,உங்களின் மூன்று கே ?:)

      Delete
  6. கவர்ச்சி ஆடை அவசியம்தான் ...யாருக்கு ?புரிந்ததா ஜி :)

    ReplyDelete
  7. ஒனக்குத் தெரியுமுன்னு கேட்கா... நீ என்னமோ ரொம்பத்தான்... போ... போ... ரெண்டுல யாரு சொன்னா என்னா...?

    எந்த வானப்படை எழுதிச்சோ தெரியலையே...!

    தெய்வம் நின்னு கொல்லுமுன்னு சொல்லலையா...?!

    குறைஞ்ச எடைக்கு சமமா... எடைக்கு எடை எடைக்கல்லா கொடுத்திடுறேன்னு வேண்டிக்கிட்டேன்...!

    முழுக்கச் சட்டையில்லா இருந்தாத்தான் நீ அழகாய் இருப்பதாக சொன்னான் கணவன்...!

    த.ம. 6



    ReplyDelete
    Replies
    1. ரெண்டும் வாழ்க்கைப் பட்டிருப்பது ஒரே பேய்க்குத்தானா:)
      வானரப் படை வேலையாத் தான் இருக்கும் :)
      உட்கார்ந்து கொல்ல முடியாத அளவுக்கு அவருக்கு என்ன பிரச்சினை :)
      அப்பவும் எடைக் கல்லுதானா :)
      அது இன் டோருக்கு சரி ,அவுட் டோருக்கு சரி வருமா :)

      Delete
  8. அனைத்தையும் ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. குற்றமுள்ள நெஞ்சு குத்துவது சரிதானே :)

      Delete
  9. வழக்கம்போல் அனைத்துமே அருமை.

    ReplyDelete
    Replies
    1. உங்க ஊருலேயும் மாமூல் காலனி இருக்குமே :)

      Delete
  10. அனைத்தும் ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. ஜன்னல் ஜாக்கெட்டை கொஞ்சம் அதிகமாவே ரசித்து இருக்கணுமே :)

      Delete
  11. அனைத்தும் அருமை... ரசித்தோம் ஜி.

    ReplyDelete
    Replies
    1. எடைக் குறைந்த சிசுவை ரசிக்க முடியுதா :)

      Delete
  12. புழுக்கம் அதிகமாக இருந்ததினால் ஜாக்கெட்டில் ஜன்னல் வைத்துவிட்டாரோ....?

    ReplyDelete
    Replies
    1. அப்படியே ஜன்னலில் ஒரு AC மெசினை வச்சுடலாமா :)

      Delete
  13. Replies
    1. ஜன்னலுக்கு கதவு வைக்கச் சொல்லலாமா :)

      Delete
  14. முழுக்கைச் சட்டையில் அவரு
    ஜன்னல் ஜாக்கெட்டில் இவரு
    அழகாய் இருப்பதாக...

    அருமையான பகிர்வு

    கருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
    http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html

    ReplyDelete
    Replies
    1. சொல்லும்முன் மனைவி யோசிக்க வேண்டாமா :)

      Delete
  15. இதைக் கேட்டு கணவன் பேய் முழி முழிக்காம இருந்தாசரி! அருமையான ஜோக்ஸ்! பாராட்டுக்கள் ஜி!

    ReplyDelete
    Replies
    1. 'பேய்முழிமேன்' ஆனதில் இருந்து அப்படித்தானே முழித்துக் கொண்டிருக்கிறார் :)

      Delete
  16. ஜன்னல் ஜாக்கெட்டின் மீது பகவான்ஜிக்கு ஒரு காண்டு :)

    ReplyDelete
    Replies
    1. ஜன்னல் ஜாக்கெட்டை பரவாயில்லை ஆக்கி விட்டது ,ஜட்டி தெரியும் அளவுக்கு இடுப்புக்கு கீழ் இறங்கி விட்ட சில ஆண்களின் பேண்ட்ஃபேஷன்:)

      Delete
  17. ஜன்னல் ஜாக்கெட்டு நல்லாத்தான் இருக்குது...நான் ஜோக்கை சொன்னேன்

    ReplyDelete
    Replies
    1. பெயரில்தான் அந்த கால வில்லன் இருக்கிறானே தவிர ,உங்க நல்ல மனசு எனக்குத் தெரியாதா என்ன :)

      Delete