'' உன் மக... திடீர்னு சேலைக் கட்டிக்க ஆரம்பித்து விட்டாளே,என்ன காரணம் ?''
''அதுக்கு இந்த படம்தான் காரணம் !''
பிறந்ததும் பள்ளியில் சேர்க்கும் காலம் வருமோ :)
''பையன் மூணு வருஷ படிப்பை முடிச்சிட்டான்னு சொல்றீங்க ,வேலைத் தேடுறானா ?''
''அட நீங்க ஒண்ணு,ஃபிரி கே ஜி ,எல் கே ஜி ,யு கே ஜி யை இப்போதானே முடிச்சிருக்கான் !''
பொண்ணைப் பெத்தவர் இப்படி அப்பாவியா இருக்காரே :)
''நல்ல மாப்பிள்ளையா அப்பா தேடித் தரமாட்டார் போலிருக்கா ,ஏம்மா?''
''நீங்க போடுற ஒண்ணரைப் பவுன் நகைக்கு , 'சின்ன வீடாய் ' வச்சிக்கிற வரன்தான் அமையும்னு தரகர் சொல்றார் ,அதுக்கும் சரின்னு சொல்றாரே !''
இவரிடம் மனைவிகூட முடியலேன்னு சொல்லமாட்டா :)
' 'என்னங்க ,நீங்கதான் டாக்டராச்சே ,மரணத்தை உணர முடியுமா ?''
''முடியும்னு என்னிடம் ஆபரேசன் செய்துகிட்டவங்க யாரும் இதுவரை சொல்லலே !''
24 X 7 புரோட்டா மணக்கும் மதுரை :)
கற்புக்கரசி மதுரைக்கு முன்னையிட்ட தீயோ...
இன்றுவரையிலும் அணையாமல் இருபத்து நான்கு மணி நேரமும் ...
புரோட்டா வேகும் கல்லின் கீழே !
|
|
Tweet |
நமக்கு எப்போதுமே வெளிநாட்டுக்காரங்க சொன்னாத்தானே மதிப்பு!அனைத்தையுமே ரசித்தேன் ஜி!
ReplyDeleteஅப்படியே .பிரிட்டன் எம் பி க்கள் வேட்டி கட்டி வந்தால் நல்லது :)
Delete‘சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு... கண்டதுண்டா.. கண்டவர்கள் சொன்னதுண்டா...?’ இந்த உண்மையைக் கண்டு பிடிக்கவா இருக்குமோ...?
ReplyDeletePre KG.யில Free யாவா சேர்க்கிறாங்க... அவன் Kg. தான் ஏறல...! ரொம்ப Low Kg. யா இருக்கு... Upper Kg.யா மாத்த ஒரு வழி தெரியலை...!
சின்ன வீடா இருந்தாத்தான் நல்லது...! கூட்டிப் பெருக்க அதுதான் சரியா வரும்...!
உயிரோட இருந்தா சொல்ல மாட்டாங்களா...? லூசாப்பா...!
‘தீ’ -தும் நன்றும் பிறர் தர வாராங்கிறது பொய்யாயிடுச்சே...!
த.ம. 2
அந்த வாசத்தைக் கண்டவர் விண்டிலர் ,விண்டவர் கண்டிலர் என்று முன்பு ஒரு பதிவு போட்ட ஞாபகம் வருதே :)
Deleteபைசாவை வெட்டுங்க ஹையர் kg யா மாத்திடலாம் :)
நீங்க சொல்றதும் சரிதான் :)
சொல்லிட்டு செத்து இருக்கலாம்தானே :)
noneறும் என்பதையும் சேர்த்துக்குங்க :)
01. பெருமையான விடயம்தான் ஜி
ReplyDelete02. பெரிய விடயம்தான் ஜி
03. கஷ்டமான விடயம் ஜி
04. ஆபரேஷன் செய்தவன் எல்லோரும் சமத்துவபுரம் போயிட்டாங்களே...
05. புரோட்டாவை தேசிய உணவாக்க வேண்டும் ஜி
சுங்குடி சேலை கட்டி வந்திருந்தால் இன்னும் நன்றாய் இருந்திருக்குமோ :)
Deleteமூணு வருஷப் படிப்பென்றால் சும்மாவா :)
இதுக்கு ஓடிப் போறது நல்லது :)
சமத்தா ,ஒரு நல்ல பதிலைச் சொல்லாமப் போயிட்டாங்களே :)
மைதா கெடுதல்னு சொன்னா யார் கேட்கிறா?இப்போ பீட்சா வேறு :)
ரசித்தேன் நன்பரே!
ReplyDeleteத ம 6
சேலையில் பிரதமர் அழகுதானே :)
Deleteஅப்போ..அங்கு சேலை வியாபாரம் துர்ள் பறக்குமே.....!!!
ReplyDeleteஅதென்னமோ தெரியலே ,நாம, நம்ம பிரதமரைப் போல குர்தா ,பைஜாமையா போட்டுக்கிறோம் :)
Deleteபிரிட்டீஷ் பிரதமர் சேலை அணிந்து சென்ற செய்தி படம் உங்க மூலம் அறிந்தேன். அவரை வாழ்த்துவோம்.
ReplyDeleteஅதற்கு முன்பே சேலைகட்ட ஆரம்பித்த எமி ஜாக்சனையும் வாழ்த்துவோம் :)
எமியுமா ,அவசியம் பார்க்கணும் ..எம்மியா இருக்குமே :)
Delete