5 July 2016

உண்மையை மறைக்காத மனைவி :)

அதே தொழில்தான் ,பெயர்தான் வேறு :)           
               ''கொள்ளை அடித்த காசிலே  மருத்துவக்கல்லூரியைக் கட்டி இருக்காராமே,அவர் ?'' 
             '' சட்டத்துக்கு உட்பட்டு இனிமேல் கொள்ளை அடிப்பார்னு சொல்லுங்க !''

எங்கும் இருப்பது காக்கா மட்டுமா ,காக்கா பிடிக்கிற ஆட்களும்தான் :)
              ''மரத்தடியிலே பைக்கை நிறுத்தினாப் போதும் ,காக்கா அசிங்கம் பண்ணிடுது !''
             ''ஆமா ,காக்கா இல்லாத இடமும் இல்லை ,அது 'கக்கா 'பண்ணாத பைக்கும் இல்லை  போலிருக்கே ! ''

உண்மையை மறைக்காத மனைவி :) 
           ''மனிதனைப் போலவே  கரடி குறட்டை விடும்னு,  ஆராய்ச்சி செஞ்சு கண்டுபிடிச்சு  இருக்காங்களாமே  ?''
           ''இதுக்கு ஏன் ஆராய்ச்சி ? நீங்க தூங்குறதைப் பார்த்தா அப்படித்தானே இருக்கு ?''

 அதிசயப் பிறவிகள் !
                ''என்னடி சொல்றே .உன்  இரட்டைக் குழந்தை போல் ,  யாருக்கும் இதுவரைப் பொறக்கலையா ,எப்படி ?''
                  ''முதல் குழந்தைப் பிறந்த மூன்று மாதம் கழித்து அடுத்த குழந்தைப் பிறந்தானே !''
இளம் மனைவியின் முதல் வார்த்தை ?
அம்மா என்பது குழந்தையின் முதல் வார்த்தை ...
 தனிக்குடித்தனம் என்பது இளம் மனைவியின் முதல் வார்த்தை !

30 comments:

  1. முதல் ஜோக் பிரமாதம்.

    மற்றவற்றையும் ரசித்தேன்.

    தமிழ்மணம் மற்ற தளங்களில் 503 எரர் என்றது. உங்கள் தளத்தில் பட்டையையே காணோம்!

    ReplyDelete
    Replies
    1. கருப்பு பணம் படம் நினைவுக்கு வரலையா ஸ்ரீராம் ஜி :)

      இரண்டு நாளாகவே தமிழ் மணம் சரியில்லை ,எப்போது அப்டேட் ஆகும்னு சொல்ல முடியலே :)

      Delete
  2. முன்பு வெளியில் அடித்துக் கொன்றார்... இனி உள்ளே அடிக்காமல் கொல்லப் போகிறார்... சட்டம் அவர் கையில்...!

    காக்கா கூட்டத்த பாருங்க... அதுக்கு கத்துக் கொடுத்தது யாருங்க...?

    குறட்டை விட்டதெல்லாம் கோட்டை விட்டதென்று சொல்ல முடியாது...!

    ReplyDelete
    Replies
    1. அவரால் முந்தி மாதிரி தொழில் பண்ண முடியலே ,அதான் இப்படி ஆரம்பித்து விட்டார் போலிருக்கு :)
      ஆய் இருப்பதை எல்லாமா கற்றுக் கொடுக்க முடியும் :)
      கோட்டையைப் பிடித்தோர் ,அதாவது mp ,mla குறட்டை விடுவதை tvல் பார்க்கிறோமே :)

      Delete
  3. யானை வரும் பின்னே... மணியோசை வரும் முன்னே...!

    அம்மாவாக இளம் மனைவியின் முதல் வார்த்தை !
    த.ம.2

    ReplyDelete
    Replies
    1. அதுக்காக மூணு மாசம் முன்னாடியா வரும் :)

      இந்த வார்த்தையில் தப்பேயில்லே:)

      Delete
  4. நண்பர் மணவை ஜேம்ஸ் தம 2 என்று பின்னூட்டமிட்டிருப்பதை மெயில் பாக்சில் பார்த்து வந்து வாங்கிட்டு விட்டேன்!

    ReplyDelete
    Replies
    1. வாங்கிட்டு வந்ததை எனக்கு கொடுத்தமைக்கு நன்றி :)

      Delete
  5. மன்னிக்கவும் வாக்கிட்டு இட்டு விட்டேன். கூகிள் டைப்பிங் தடுமாறுகிறது!

    ReplyDelete
    Replies
    1. டைப்பிங் தடுமாறினாலும் ,சரியாக்வோட்டு விழுந்து விட்டது:)

      Delete
  6. Replies
    1. கரடி குறட்டை உண்மைதானாம் :)

      Delete
  7. அனைத்தும் அருமை... ரசித்தேன் ஜி.

    ReplyDelete
  8. 01. இனி சேர்ப்பது வெள்ளை பணம்
    02. அபுதாபியில் காக்கா குறைவு காக்காமார்கள் அதிகம்
    03. காலை வாறி விட்டாள்
    04. நல்லா இருக்கு கூத்து
    05. உண்மை

    ReplyDelete
    Replies
    1. அப்படித்தான் அரசு சொல்லுது :)
      அங்கே மட்டும்தானா :)
      கரடி சும்மாவா விட்டது :)
      இந்த கூத்து எப்படி சாத்தியமானது:)
      குழந்தைக்கு மட்டுமா முதல் வார்த்தை :)

      Delete
  9. நாய் விற்ற காசு குரைக்காது
    அனுபவம் பேசுகிறதோ காசியில் காக்கா இல்லை என்பார்கள் தெரியுமா.?
    கரடியை மணம் புரிந்தவரா
    இம்மாதிரியும் நிகழுமா
    இப்போதெல்லாம் அந்த முதல் வார்த்தைக்குத் தேவையே இல்லை.

    ReplyDelete
    Replies
    1. பன்றி விற்ற காசும்தான் நாறாது:)
      ஆமாம் என்னை சுற்றி உள்ளவர்கள் ....:)
      கட்டிகிட்ட பிறகுதானே தெரியுது :)
      மெடிக்கல் மிராக்கில் :)
      பெற்றவங்களே துரத்தி விடுகிறார்களா :)

      Delete
  10. Replies
    1. இருந்தாலும் கக்கா அசிங்கம்தானே :)

      Delete
  11. உண்மையைச் சொன்ன தைரிய லெட்சுமி என்ற பட்டத்தை கொடுக்கலாம்...

    ReplyDelete
  12. உண்மையைச் சொன்னதால் அவருக்கு தைரிய லெட்சுமி என்ற பட்டத்தை கொடுக்கலாம்...

    ReplyDelete
    Replies
    1. உண்மையிலேயே கொடுக்கலாம் :)

      Delete
  13. முதல் ஜோக் சூப்பர் ஜி

    ஆஹா குறட்டை...

    அனைத்தையும் ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. பார்க்கவே சகிக்கலே ,இதில் குறட்டை வேறா :)

      Delete
  14. //'' சட்டத்துக்கு உட்பட்டு இனிமேல் கொள்ளை அடிப்பார்னு சொல்லுங்க !''//

    சட்டத்தை உடைப்பவர்களும் இந்தக் கொள்ளைக்காரர்கள்தான்!

    ReplyDelete
    Replies
    1. காசிருந்தா சட்டமாவது ,குஷ்டமாவது:)

      Delete
  15. வழக்கம்போல ரசித்தேன். கரடியின் குறட்டை நல்ல ஜோக்.

    ReplyDelete
    Replies
    1. அம்மாவுக்கு அய்யா மேலே எப்பவும் காண்டுதான் ,அதான் ,நேரம் பார்த்து சொல்லிட்டாங்க :)

      Delete