14 July 2016

பின்னல் சடைப் போட்டு ,பிச்சிப்பூ ?

 ஸ்பூனால் சாப்பிடுவதா  இட்லி :)      
           ''இட்லி  ஆர்டர் பண்ணாதேன்னு ஏன் சொல்றீங்க, தாத்தா ?''
           ''எங்க காலத்திலே இட்லி மேலே சாம்பாரைக் கொட்டிகிட்டு சாப்பிட்டோம் ,இப்போ என்னடான்னா  ...கப்பு சாம்பார்லே  இட்லியை மிதக்க விட்டு கொண்டு வர்றாங்களே !''

லிப் ஸ்டிக் பூசினால் வெற்றி நிச்சயம் தானா :)
          ''அழகிப் போட்டியில் ,லிப் ஸ்டிக் பூசுன அந்த பொண்ணுதான் ஜெயிக்கும்னு தீர்க்கதரிசனமா ,எப்படி தலைவரே  உங்களாலே சொல்ல முடிந்தது ?''
          ''வாய் 'மை'யே ஜெயிக்கும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கே !''
அத்தை வீட்டு மொய்னாலும் அத்தாட்சி வேணும் !
              'அட நீங்க என்னங்க ,மொய்யை எழுதிட்டு அக்னாலேஜ்மென்ட் கேட்குறீங்க ?''
             ''நாளைக்கு  நான் மொய் வைக்கலைன்னு யாரும்  சொல்லக்கூடாதில்லே ?''

பின்னல் சடைப் போட்டு ,பிச்சிப்பூ ?
      எந்த விசேசம் என்றாலும் ...
      பியூட்டி பார்லருக்கு சென்று 
     ஆயிரம் ஆயிரமாய் செலவழித்து 
     அழகழகாய் வலம்வரும் பெண்களைப் பார்க்கையில் 
     அபத்தமாய் பாட்டி சொல் நினைவுக்கு வருகிறது ...
     பெண் தலைவிரிக் கோலம் தரித்திரம் !

12 comments:

  1. 01. காலம் மாறிப்போச்சு
    02. கண்டுபிடிப்புதான்
    03. நியாயம்தானே...
    04. ஸூப்பர் ஜி

    ReplyDelete
    Replies
    1. மாறிப் போகலே ,தலைக்கீழா மாறுது :)
      அற்புதக் கண்டுபிடிப்பு :)
      இது இருந்தால் தானே கழுத்துலே துண்டைப் போட்டு இழுத்து மொய்யை வசூலிக்க முடியும் :)
      கிழவியை விடுங்க ,இதுவும் பார்க்க நல்லாத்தானே இருக்கு :)

      Delete
  2. ஆனால் கேட்டால் சாம்பார் கூடுதலாகத் தருவார்களே...! வாய்மையே ஜெயிக்கும் என்பது உண்மை என்றல்லவா நினைத்தேன்! அக்நாலட்ஜ்மென்ட் கேட்கும் இவர் கட்டாயம் அரசு ஊழியராகத்தான் இருப்பார் - ஆடிட்டில் அடிபட்டவராக இருப்பார்!! பாட்டி அப்படி வேற சொல்லியிருக்காங்களா!

    ReplyDelete
    Replies
    1. அதுக்கும் சேர்த்து பில் போடுவார்களே :)
      இப்பவும் வாய்மைதானே ஜெயித்தது :)
      ரெக்கார்ட் மட்டும் சரியா வச்சுக்கணும் :)
      எதைத்தான் பாட்டி சொல்லாம போனாங்க :)

      Delete
  3. “அதான் ஒங்களுக்குச் சாம்பார்னு பேரா...?”- பேரன் கேக்கிறானோ...!

    ‘வாயுள்ள பிள்ளை பிழைக்கும்...!’ இதுதானோ...?

    மொய் விருந்துக்கும்... இப்ப மெய் விருந்தா இருக்க ரூல்ஸ் போட்டாச்சில்ல...!

    ‘அதோ மேக ஊர்வலம்... அதோ மின்னல் தோரணம், அங்கே!’ பா(ர்)ட்டிக்குத் தொரியாதோ...?

    த.ம. 2

    ReplyDelete
    Replies
    1. உலகப் புகழ் சாம்பார் ஒருவர்தான் இருக்க முடியும் :)

      வாயில் மையுள்ள பிள்ளை நல்லாவே பிழைக்கும் :)

      அதானே ,தேதி போடாத செக் கூட வாங்கி வச்சுக்கலாம் தப்பில்லை :)

      பாட்டிக்கு தெரிந்தால் ஏன் தரித்திரம் என்று சொல்லப் போகிறார் :)

      Delete
  4. Replies
    1. பாட்டி சொல் ,அபத்தம்தானா:)

      Delete
  5. என்னாது பெண் தலைவிரிக் கோலம் தரித்திரம்மா...?????தரித்திரம்ன்னா.......???

    ReplyDelete
    Replies
    1. உங்க சரித்திரத்தில் தரித்திரமே இல்லையா :)

      Delete
  6. Replies
    1. வெறும் தேன்தானா :)

      Delete