28 July 2016

சிறப்பாய் 'குடி'த்தனம் நடத்தும் தம்பதியர் :)

 விரலுக்கேற்ற  வீக்கம் தானே :)           
            ''ஆண்டிராய்ட்  செல் வாங்கிக் கொடுக்கன்னு கேட்டா ,சம்பளச் சிலிப்பை  ஏன் காட்டுறீங்க அப்பா ?''
               ''என் பேஸிக் சம்பளத்துக்கு ,பேஸிக் மாடல்தான்  வாங்கித் தர முடியும் !''

அர்த்தம் தெரியாட்டி சொல்லலாமா :)
             ''எல்லோரும் உன்னிடம்  துக்கம் விசாரிக்கிறாங்களா ,நான் என்னம்மா தப்பா சொல்லிட்டேன் ?''
             ''நான்  அபார்ட்மெண்ட்டுக்கு  போனதை ,அபார்சனுக்கு போனதா சொல்லி இருக்கீங்களேப்பா !''

சீக்கிரமே இந்நிலை வந்து விடும் !
            ''உங்க காதிலே என்ன பிரச்னைன்னு கேட்டா , செல்போனில் கேளுங்கன்னு எதுக்கு ஜாடை காட்டுறீங்க ?''
            ''நேரிலே யார் பேசுறதும் காதுக்கு கேட்கலே ,செல்போன்லே பேசுறது மட்டும்தான் கேட்குது டாக்டர் !''

சிறப்பாய் 'குடி'த்தனம் நடத்தும் தம்பதியர் :)
         'யோவ் தரகரே ,உங்களுக்கே இது நியாயமா ?''
         ''எது ?''
          'நான் குடிகாரங்கிறதை மறைத்து  கல்யாணத்தை முடிச்சு வைச்சீங்க சரி ...பொண்ணு குவாட்டரை ராவா ஒரே மூச்சிலே குடிப்பான்னு  ஏன் சொல்லலே !''

கொசு இனத்தை கூண்டோடு ஒழிக்க ...!
கடிக்கிற கொசு சாகிறமாதிரி..
 நம் உடம்பிலும் கரெண்ட்டை
மிகச் சிறிதாய் சார்ஜ் பண்ணிக்க முடிந்தால் ...
 கரெண்ட்டிலேகூட சந்தோசமா கையை வைக்கலாம் !

22 comments:

  1. 01. ஏழைக்கேத்த எள்போண்
    02. ஆஹா இது குழப்பமாகிடுமே...
    03. புதுமையான வியாதிதான்
    04. பொருத்தம் சரியாகத்தானே இருக்கு
    05. பிறகு சம்சாரத்தை தொட முடியாதே...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ,செல் விலை இவ்வளவு மலியும் எதிர்பார்க்கவில்லை :)
      இதை பெருமையாய் சொன்னாராமே :)
      காலத்துக்கேற்ற வியாதி :)
      யாருக்கு அமையும் இப்படி பொருத்தம் :)
      சம்சாரமும் மின்சாரம்தானே :)

      Delete
  2. அனைத்தையும் ரசித்தேன் ஜி. ஆங்கில வார்த்தைகளை மாற்றிப் போட்டுப் பேசும் வார்த்தைகள் எப்போதுமே புன்னகைக்க வைக்கும்!

    ReplyDelete
    Replies
    1. bp என்றால் சிலர் bed pressure என்று விளக்கம் சொல்வார்களே அது போலவா :)

      Delete
  3. ‘பேசி’யே எல்லாத்தையும் சமாளிச்சு முடிச்சிடுறீங்களே...!

    ‘டங்’ சிலிப்பாகி... வார்த்தை வழுக்கி விழுந்திடுச்சும்மா...!

    ‘செல்’லும் இடமெல்லாம் தனக்கு நிகரில்லையென வெற்றி நடை போடும் இக்காது இனி கேக்காது...!

    ‘மைனஸு’ம் மைனஸும் சேர்ந்தா பிளஸ் ஆயிடுமுள்ள...பிளஸ் ஆயிடுச்சா... இல்லையா?!

    ‘டெங்கு’ எல்லாம் பத்தாதாம்... மனிதன் சாகிற மாதிரி சக்தி கொடுன்னு கொசு கேக்குதாம்...!

    த.ம. 2



    ReplyDelete
    Replies
    1. வாய் இல்லேன்னா நாயும் மதிக்காதே :)

      பரவாயில்லைப்பா ,வயசான காலாத்தில் நீங்க வழுக்கி விழாம போனீங்களே :)

      செல்லும் கையில் இல்லையென்றால் ஒரு காதும் கேட்காது :)

      சீக்கிரம் குளோசும் ஆயிடுவாங்க :)

      கொசுவுக்கு ,அப்படி ஒரு சக்தி வந்தால் தான் கொசுவை ஒழிக்க மருந்து கண்டுபிடிப்பார்கள் போலிருக்கே :)

      Delete
  4. Replies
    1. பேஸிக் மாடல் சூபர்தானே :)

      Delete
  5. நல்ல நகைச்சுவை,,,

    ReplyDelete
    Replies
    1. எது என்றுதான் சொல்லுங்களேன் விமலன் ஜி :)

      Delete
  6. //செல்போன்லே பேசுறது மட்டும்தான் கேட்குது டாக்டர் !''//

    எப்பவும் காதும் செல்ஃபோனுமா இருப்பாங்க போல!!!

    ReplyDelete
    Replies
    1. காதும் டிஜிட்டல்மயமாகி போச்சு :)

      Delete
  7. தரகருக்குரிய தரகுத் தொகையை தராமல் குடிச்சதினால் இருக்குமோ...?

    ReplyDelete
    Replies
    1. அவருக்கு ஒரு ரவுண்டு ஊற்றிக் கொடுத்து இருந்தால் இந்த விபரீதம் நடந்திருக்காதோ :)

      Delete
  8. ஆண்டாய்ட் செல்லின் விலை என்ன
    அபார்ட்மெண்டுக்குப் போனதை எல்லாம் சொல்லிக் கொண்டிருப்பார்களா என்ன
    டாக்டருக்கே புரியாத வியாதியாய் இருக்கும்
    ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம்
    கொசுக்கடி தொல்லை தாங்க முடியலையோ

    ReplyDelete
    Replies
    1. அவரோட பேஸிக் அளவுதான் விலை :)
      தலைமுறையிலேயே இதுதானே முதல் புதுமனை புகுவிழா :)
      ent ஸ்பெசலிஸ்ட் கண்டு பிடித்துவிடுவார் :)
      ஆயிரம் பொய்யா ,டூ மச் ..இது ஒண்ணே போதும் :)
      உண்மைதானே ,எதுக்கும் அஞ்சாமல் கொசு வீரியமாய் பெருகிட்டே இருக்கே :)

      Delete
  9. Replies
    1. வயசுப் பயலுங்க விருப்பத்தை பூர்த்தி செய்வது அப்பனுக்கு கஷ்டம்தானே :)

      Delete
  10. சொல் விளையாட்டு ஹஹஹ அருஅமி...

    ஜி, சீக்கிரமே இந்நிலை வந்துவிடும் என்பதில்....செவித்திறன் குறைந்தோருக்கு நேரில் பேசுவது கேட்காதுதான் ஏனென்றால் பல சப்தங்கள் இருப்பதால்...ஃபோன் எனும் போது அது செவியை அடுத்து அல்லது இயர் ப்ளக் போட்டு பேசும் போது காதிற்குள் பேச்சொலி மட்டும் கேட்பதால் கேட்கும்தான்....

    ஆனால் செல்ஃபோன் பேசுபவர்கள் இனி ஃபோனில் மட்டும் தான் பேசுவார்கள் நேரில் என்பதை விட என்பது நிகழலாம் ஜி. இப்போதே அப்படித்தான் ஃபேஸ்புக் வாட்சப் வழிதான் வீட்டில் உள்ளவர்களே பேசிக் கொள்கின்றார்கள் அவரவர் தனித் தனித் தீவாகிக் கொண்டு..

    ReplyDelete
    Replies
    1. பிள்ளைக்கு ,நீ இன்னும் சாப்பிடவில்லை என்று கூட g மெயில் அனுப்பித்தான் சொல்ல வேண்டி வரும் போலிருக்கே :)

      Delete
  11. Replies
    1. பேசிக் கொண்டிருக்க பேஸிக் மாடல் போதாதா :)

      Delete