3 July 2016

இளம் மனைவியின் கைமணம் :)

உள்ளங்கை நெல்லிக் கனி போல :)    
     ''நான் மிதுன ராசி இல்லைன்னு எப்படி கண்டு பிடிச்சே ?''\
     ''அந்த ராசிக்கு முதலில் ‘அன்பும், புத்தி சாதுர்யமும் கொண்ட’ ன்னு போட்டு  இருக்குங்க  !''
தனிக் குடித்தனம் போவதிலேயே குறி :)
         ''ஜாதகப் பொருத்தம்  அருமையா  இருக்கு ,இப்போ எதுக்கு இன்னொரு ஜாதகத்தைத் தர்றீங்க?''
         ''இது என் அம்மா ஜாதகம் ,மாமியார் ,மருமகள் பொருத்தம் பார்த்து சொல்லுங்க !''

இதுக்குத்தான் படிக்கத் தெரியணும்னு சொல்றது :)
          ''இவ்வளவு நேரமா காலிங்  பெல்லை அடிச்சேனே ,உன் காதுக்கு கேட்கலையா ?''
          ''காலிங் பெல் வேலை செய்யாதுன்னு அது மேலே எழுதிப் போட்டிருக்கேனே ,உன் கண்ணுக்கு தெரியலையா ?''

சோறுன்னா மனுசன் சோழவந்தானுக்கே போறமாதிரி :)
''காக்கைங்க கண்ணுலேயே படமாட்டேங்குதே ,எங்கே போயிருக்கும் ?''
''வட இந்தியாவுக்குத்தான் !''

இளம் மனைவியின் கைமணம் :)
அடை போட்டதில் தேர் நின்றதோ இல்லையோ ...
என்னவள் வைத்த அடையினில் நின்றது ...
என் அடை தின்னும் ஆசை !

15 comments:

  1. அவள் வைத்த அடையினில்
    அடை தின்னும் ஆசை
    அவனுக்கு இல்லாமல் போயிட்டா...?

    ReplyDelete
    Replies
    1. வேற எவனுக்கும் வரக் கூடாதே :)

      Delete
  2. மிதுனம் என்றாலே இரட்டை என்று அர்த்தம்... நா என்ன அப்படியா...? எ ராசிப்படி எதுவும் நடக்க மாட்டிக்கிதுன்னு கவலைப்பட்டிக்கு இருக்கேன்... எவன்டி அவன்... என் ராசிய கணிக்க... அவன் என்ன அவ்வளவு பெரிய ஆளா... இல்ல அவ்வளவு பெரிய ஆளா...?!

    பூனையா பதுங்கி இருக்கிற நீ எங்கே... எலியா பயந்து இருக்கிற அவுங்க எங்கே...! எல்லாம் ஒனக்குச் சாதகம்தான்...!

    எனக்குப் படிக்கத் தெரிஞ்சா ஒன்னப் போயி கட்டியிருப்பேனா...?!

    காக்கை குருவி எங்கள் ஜாதின்னு சொன்னதுனால அதுக பயந்து எங்கே நமக்குச் சோறு கிடைக்காதுன்னு பறந்து போயிருக்கும்...!

    அடடா மழைடா அடை மழைடா...!

    த.ம. 1

    ReplyDelete
    Replies
    1. கோவப் படாதீங்க ,அன்பும்நிறைந்தவர் என்று சரியாத்தானே சொல்லியிருக்கார் :)

      பூனையும் ஒரு நாள் புலியாகுமா பார்த்துச் சொல்லுங்க :)

      படிக்கத்தெரியாத ஆளெல்லாம் வாசப்படியை மிதிக்க வேண்டாம் என்று வேணுமானால் எழுதிப் போடுகிறேன் :)

      ஒரு பேச்சுக்கு சொன்னா ,சம்பந்தம் பண்ணிக்கச் சொல்வீங்க போலிருக்கே :)

      அடையை நனைய விட்டுத்தான் சாப்பிட முடியும் போலிருக்கே :)

      Delete

  3. ''இது என் அம்மா ஜாதகம் ,மாமியார் ,மருமகள் பொருத்தம் பார்த்து சொல்லுங்க !''

    மாமனார் மருமகள் ‘ஜாதகப் பொருத்தம்’ தேவையில்லையா?!

    ReplyDelete
    Replies
    1. தேவையில்லை, சமையல் பக்கம் மாமனார் போவதில்லையே :)

      Delete
  4. அட்டகாசமான ஜோக்ஸ்! பாராட்டுக்கள் ஜி!

    ReplyDelete
    Replies
    1. எல்லா ராசிக்காரர்களுக்கும் இப்படி குளிப்பாட்டும் விதமாய் வாசகங்கள் இருப்பதை ரசிக்க முடியுதா :)

      Delete
  5. காதுக்கு கேட்காததையும்,கண்ணுக்குத் தெரியாததையும் ரசிக்க முடியுதா :)

    ReplyDelete
  6. 01. காலை வாறியாச்சா ?
    02. இது முக்கியம்தான்
    03. நியாயமான கேள்வி
    04. அட
    05. அவ்வளவு ருசியா ?

    ReplyDelete
    Replies
    1. நம்மில் யார் மிதுன ராசி :)
      யார் பார்க்கிறாங்க :)
      பதில்தான் இல்லை :)
      அட இல்லே வடே :)
      வெளியே சொல்ல முடியாது :)

      Delete
  7. மிதுன ராசி இல்லை என்று தெரிகிறது வேறு என்ன ராசி சொல்லவில்லையே
    தனிக்குடித்தனம் போவதானால் மாமியார் மருமகள் ஜாதக்ப் பொருத்தம் எதற்கு
    அட படிக்கத்தான் தெரியாது காலிங் பெல் சத்தம் வெளியில் கேட்கக்கூட இல்லையா
    சோழவந்தானில் சோற்றுக்குப் பஞ்சம் இல்லையா
    கைமணம் மட்டும்போதாதே தின்ன முடிய வேண்டாமா

    ReplyDelete
    Replies
    1. நான் சொல்ல வந்தது அவர் என்ன ராசி என்பதை அல்ல ,அன்புக்கும் ,புத்தி சாதுர்யத்துக்கும் அவருக்கும் ரொம்ப தூரம் என்பதைத்தான் :)
      எத்தனை நாள்சேர்ந்து இருப்பார்கள் என்று தெரிஞ்சிக்கத்தான் :)
      அவ்வளவுதான் பெல் சத்தம் :)
      வைகை பாசனம் அமோகமா நெல்லு விளையுற பூமியாச்சே :)
      முடியலே ..என்னாலும்:)

      Delete
  8. உங்க மிதுன ராசி நகைச்சுவையும் நன்றாக உள்ளது

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் இதைப்போலவே இன்று பதிவு போட்டு இருப்பது சிறப்பு :)

      Delete