20 July 2016

'மூட் அவுட்' ஆன நடிகையின் புது கணவன்:)

இனியும் தேவையா இந்த கல்யாணம் :)          
           ''அறுபதாம் கல்யாணம் செய்துக் கொள்வதில் உங்கம்மாவுக்கு விருப்பமில்லையா ,ஏண்டா ?''
           ''பத்திரிக்கையில் , அழுவதாம்  கல்யாணம்னு தப்பா பிரிண்ட் ஆயிருக்குன்னு சொன்னேன் ,அப்படியே இருக்கட்டும்னு சொல்றாங்களே !'' 

சந்தேகம் நியாயமானதுதானே ?
        ''அசைவம் சாப்பிட்டாலும்  ,DVD பார்த்தாலும்  தப்பான்னு ஏன் கேட்கிறே ?''
      '' அதை  ரகசியமா  கருப்பு நிற கேரி பையில் மட்டுமே போட்டுத் தர்றாங்களே !''

 மூட் அவுட் ஆன நடிகையின் புது கணவன்:)
             ''கல்யாண போட்டோக்களில் , ஒரே ஒரு போட்டோவில் மட்டும் மாப்பிள்ளை முறைச்சுக்கிட்டு இருக்காரே ,ஏன் ?''
            ''சுற்றி நிக்கிறவங்க, நடிகையோட டைவர்ஸ் கேஸ்களை டீல் பண்ற வக்கீலுங்க ஆச்சே !''
 எங்கே வளரணுமோ அங்கே ?
வழுக்கைத் தலையிலும் முடி வளரும் தைலத்தை 
வாங்கித் தேய்த்ததில் நல்ல பலன் ...
உள்ளங்கை முழுவதும் முடி !

நமது சுதந்திரம் 'அப்படி 'வந்ததுதானா ?
வட இந்திய டூர் - பாகம் 6
         பள்ளிப் பாடங்களில் படித்த ,ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்த இடத்தை....
சமீபத்தில்(சிலநாட்களுக்கு முன் &அருகிலும் )சென்று பார்த்தேன்... இது பொற்கோவில் அருகிலேயே ,நடக்கும் தூரத்திலேயே உள்ளது. தற்போது நினைவிடமாய் மாறியிருக்கும் அந்த இடம்...இதோ ...
         இந்த வாசலைத்தாண்டி  உள்ளே சென்றால் ,கண் முன்னே தெரிகிறது ..பசுமையாய் தோன்றும் தோட்டத்தின் நடுவே தியாகிகள் நினைவுத் தூண் !
             இந்த தூணுக்கு பின்னால் இருக்கும் நிஜமான சோக வரலாறு .....
1919ம் ஆண்டு ஆங்கிலேயரின் ஏகாதிபத்திய  கொடுமையான 'ரௌலட் 'சட்டத்தை  எதிர்த்து சுமார் இருபதாயிரம் மக்கள் கூடிஇருக்கிறார்கள் ...
இதைக்கூட சகித்துக் கொள்ளமுடியாத ஜெனரல் டயர் சுடும் உத்தரவை பிறப்பித்தவுடன் ....
1650 குண்டுகள் சீறிப் பாய்கின்றன ...
மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடுகிறார்கள் ...
வெளியேற இருப்பதோ ஒரே வாசல் ...
வேறு வழியின்றி உயிர் பிழைக்க (?)அங்கிருந்த ....
           இந்த கிணற்றில்தான் விழுந்து உயிர் துறந்துள்ளார்கள்...
இந்த படுகொலை சம்பவத்தில் இறந்தோர் எண்ணிக்கை 379என்றும் ,காயப்பட்டவர்கள்  1500 என்று ஆவணங்கள் சொன்னாலும் .சிகிச்சை  அளித்த ஆங்கிலேய மருத்துவரே இறந்தோர் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேல் இருக்கும் என்று சொல்லியுள்ளார் ...
    அந்த கொடூர சம்பவத்தின் எச்சங்களாக குண்டு பாய்ந்த இடங்கள் இன்றும் கட்டம் கட்டி சுவற்றில் ...இதோ ...

           இந்த இடத்தைப் பார்த்ததும் என் மனதில் எழுந்த கேள்வி ...கத்தியின்றி இரத்தமின்றி கிடைத்ததா நமது சுதந்திரம் ?
----------------------------------------------------------------------------------------------------------------------------------

கிணற்றுப் படம் மட்டும் கூகுளில் சுட்டது !

16 comments:

  1. ஜாலியன் வாலா பாக் - மாறாத வடு.....

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு தெரியும்தானே .ஜாலியன் வாலா என்றால் என்னவென்று ?அங்கே நடந்ததா இக்கொடுமை !

      Delete
  2. ஹா... ஹா... ஹா....

    ஹா.... ஹா... ஹா...

    ஆரம்பமே கருப்பு கோட்டா!

    உள்ளங்கையிலேயே முடி வளர்ந்தும் தலையில் வளரவில்லையா!

    .ம்ம்ம்ம்..

    இன்று க்ளிக் செய்த வேகத்தில் மின்னலென தம வாக்கு விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது!!!!!!

    ReplyDelete
    Replies
    1. தமிழ் மணம் வாக்கு விழுவதற்குள் எனக்கு மண்டைக் காய்கிறது ,இது தமிழ் மணமா,தமிழ் புதிரா :)

      Delete
  3. 1. hahahahaha

    2. hahhahahahah

    ullangaiyil mudi..hahahah

    ellaame rasithom....tour paguthi vethanai tharum nigazhvu varalatril....

    ReplyDelete
    Replies
    1. உள்ளங்கை கேட்குமோ மோர் :)

      சுதந்திரம் வந்த வழி , வேதனை!ஆனால் ,இன்றைய ஆட்சியாளர்களோ கோடியில் சம்பாதித்து சாதனை செய்கிறார்களே :)

      Delete
  4. எல்லாமே அறு அறுன்னே இருக்காம்... அழுகையா வருதாம்...!

    உயிரையும் உழைப்பையும் கொல்வதால் வந்த துக்கமோ...?!

    நடிகையோட டைவர்ஸ் எல்லாமே இந்த வக்கில்தான் வாங்கிக் கொடுப்பாராம்...!

    உள்ளங்கை நெல்லிக்கனின்னு சொல்ல வேண்டியது இல்லை...!

    ‘ஜாலியன்வாலாபாக் படுகொலை’ நம்ம ஜாலியா இருக்க தங்கள் இன்னுயிரை ஈந்த தியாகிகளை எண்ணிப் போற்றி வணங்குவோம்...!

    த.ம. 4







    ReplyDelete
    Replies
    1. எழுபது எழுச்சியாய் இருக்குமா :)

      உங்களின் சிந்தனை சரியாகப் படுகிறது :)

      அப்படின்னா மூட் அவுட் ஆகத்தானே செய்யும் :)

      உச்சி மண்டையும் நெல்லிக் கனி போல் பளபளன்னு இருக்குதே :)

      தியாகிகள் நினைப்பு அரசியல்வியாதிகளுக்கு வர மாட்டேங்குதே :)

      Delete
  5. 01. பத்திரிக்கைகூட ஆறுதல் கொடுக்குதே..
    02. இதுக்கு POLICE பிடிக்காதுல... ?
    03. சகுனிகளா ?
    04. ஆஹா இப்படியுமா ?
    05. வேதனையான வரலாறு

    ReplyDelete
    Replies
    1. அது தப்பில்லே ,சரிதானா :)
      அதான் மாமூல் கொடுத்தாச்சே ,எப்படி பிடிப்பாங்க :)
      கவுன் அணிந்த சகுனிகள் :)
      தைலத்தை நேரடியா தலையில் கொட்டிக்கணுமோ:)
      கேட்டால், கத்தியின்றி ரத்தமின்றி வந்த சுதந்திரம் என்கிறார்கள் :)

      Delete
  6. வக்கில் வந்தாலே கடுப்புத்தான் அதுவும் டைவர்ஸ் கேஸ்)) சிரிப்பு தூள் ஜீ!

    ReplyDelete
    Replies
    1. கறுப்பு கலரைக் கண்டாலே கடுப்பாகுதோ :)

      Delete
  7. அந்த கனவானுக்கு மூட் அவுட் ஆகாம இருக்காம என்ன செய்வார்,....

    ReplyDelete
    Replies
    1. முதல் பகலிலேயே இப்படி மூட் அவுட்டானால் :)

      Delete
  8. கத்தியின்றி இரத்தமின்றி கிடைத்ததா நமது சுதந்திரம் ?//

    அப்படியொரு சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்று நாமக்கல் கவிஞர் ஆசைப்பட்டார் போலும்!

    மனதை உருக்கிய, உலுக்கிய பதிவு.

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் ஆசைப்பட்டதில் தவறில்லை,ஆனால் நிஜம் அப்படியில்லை :)

      Delete