19 July 2016

பெண்டாட்டியை விட்டுக் கொடுக்கலாமா :)

 பெண்டாட்டி மேலே அவ்வளவு நம்பிக்கை :)            
               ''தினமும்  காக்கைக்கு வைத்து விட்டு சாப்பிடுறீங்களே ,முன்னோர்கள்  மேலே அவ்வளவு பாசமா  ?''
                ''அட நீங்க ஒண்ணு,காக்காவுக்கு  எதுவும் ஆகுதான்னு  தெரிஞ்சிக்கத்தான்  வைக்கிறேன் !''

செவ்வாய் தோஷத்தால்  திருமணம்  தள்ளிப் போகுமா :)      
             '' என் பொண்ணுக்கு வரன் ஒண்ணுமே அமையலே ,என்ன செய்யலாம் ?''
               ''ஜவ்வாய் தோஷம் இருக்குதான்னு பாருங்க !''

பெண்டாட்டியை விட்டுக்கொடுக்கலாமா :)
            ''ரயில் கிளம்பியதில் இருந்து, உங்க மனைவி தொணதொணன்னு பேசிக்கிட்டேதான் வர்றாங்க  ,எனக்கு புரியாத மொழி வேற ... 
தலை வலிக்குதே  சார் !''
            ''வலிக்காதா பின்னே ?புரியுற எனக்கே தலைவலிக்குதே !''

சிற்பியின் குற்றமா ,கடவுளின் குற்றமா ?
          எல்லோரும் வணங்கும் கடவுளை வடிக்க 
          எந்த சிற்பியாலும் முடியவில்லை !

12 comments:

  1. மனைவி ஸ்பெஷலா!! ரசித்தேன் ஜி.

    ReplyDelete
    Replies
    1. அட ஆமாம் ,முதல் மூன்றும் அப்படித்தான் இருக்கு :)

      Delete
  2. கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு...! சாமி கருப்பு தான்... மாமி கருப்புதான்... நானும்... டண்டணக்கா டண்டணக்கா டண்டணக்கா டண்!

    வரன் அதுவா அமையுமா...? நாமதான் அமைச்சுக்கனும்...! எங்கே தட்சனையை வைங்க...!

    புரியாததைப் புரியவைக்கும் புது இடங்கிறது இதுதானோ...?

    சிற்பி... வடி கட்டா முட்டாள்ன்னு சொல்லுங்க...!

    த.ம. 2





    ReplyDelete
    Replies
    1. அதென்ன,டண்டணக்கா டண்டணக்கா டண்டணக்கா டண்!:)
      இதுக்கே தட்சணையா:)
      புரிந்து கொண்டால் பயணம் இனிக்குமோ :)
      சிற்பி வடிக்காத பொற்சிலையைப் பார்த்ததால் சொல்றீங்களா :)

      Delete
  3. 1. சமையலில் அவ்வளவு நம்பிக்கை! :)
    3. ஆஹா புரிஞ்சு தலைவலையை விட, புரியாம வர தலைவலி அதிகமா இருக்கும்.... :)

    ReplyDelete
    Replies
    1. மெல்லக் கொல்லும் விஷத்தை எப்படி ஆராய்வாரோ :)
      பலமுறை இது மாதிரி அனுபவம் உங்களுக்கும் கிடைத்து இருக்கணுமே :)

      Delete
  4. கண்டிப்பா விட்டுக் கொடுக்க கூடாது....விட்டுக் கொடுத்தவர்கள் படும் அவதியே சாட்சி....

    ReplyDelete
    Replies
    1. ஆனாலும் ,பலருக்கு தனக்காவும் தெரியலே ,சொன்னாலும் புரியலே :)

      Delete
  5. 01.முன்னெச்சரிக்கை நல்லதுதானே...
    02. ஜவ்வா இழுக்குதோ...
    03. அனுபவம் பேசுது.
    04. நிச்சயமாக முடியாது ஜி அருமை

    ReplyDelete
    Replies
    1. அவரோட நிலைமை அப்படி :)
      ஜவ்வு சீரியல் பார்த்தால் இப்படித்தான் :)
      இந்த ஜீக்கு புரியாத மொழிஇல்லையே :)
      கடவுளே வந்தாலும் ,அவரோட ஏஜெண்டுகள் ஒரே கடவுளை ஒத்துக்க மாட்டாங்க :)

      Delete
  6. Replies
    1. தமிழ் டைப்பிங் என்னாச்சு ?கண்ணாமூச்சி காட்டுதா :)

      Delete