21 July 2016

'கபாலி 'பேரை ரிப்பேர் ஆக்கியிருக்கிறோம் :)

           ''கபாலி பட டிக்கெட் விலை ஆயிரம் ரூபாயாமே !''
           ''இதிலே ஆச்சரியப்பட என்னாயிருக்கு ?நம்ம ஊர்லே  கொள்ளையடிப்பவனை  சிம்பாலிக்கா கபாலின்னுதானே சொல்றோம் ?''

மந்திரின்னா  பொது அறிவு வேணாமா :)
        ''இலவச வேட்டி சேலை வாங்க வந்த நெரிசல்லே சிக்கி நாலு பேர் இறந்ததுக்கா ,மந்திரி டிஸ்மிஸ் ஆனார்  ?''
        ''அதுக்காக இல்லை ...'கியூ ' பிரிவு  போலீசார் வரிசையை ஒழுங்குபடுத்தலைன்னு  கண்டனம் தெரிவிச்சாராம் !''

கடிபட விரும்பும் நல்ல உள்ளம் !
      ''வாங்கின புது செருப்பை எதுக்கு ரிடர்ன் பண்றீங்க ?''
     ''புது செருப்புன்னா கொஞ்சமாவது கடிக்க வேண்டாமா ?''
காதல் கடிதங்களை அக்னியிலே போட்டு எரிச்சுடணும் !
            ''நான் எழுதிய காதல்கடிதங்களை ,இப்போ நம்ம பையன் படிச்சிட்டான்னு எப்படி சொல்றே ?''
           ''மொக்கைன்னு தெரிஞ்சும் மோசம் போயிருக்கியே அம்மான்னு கிண்டல் பண்றானே !''

மனைவி 'மை லார்ட் 'டிற்கும் மேல் :)
       வாய்தா ...
       கோர்ட்டில் கேட்க முடிந்த வக்கீலாலும்
       வீட்டில் மனைவியிடம் கேட்க முடிவதில்லை !


19 comments:

  1. 01. ஸூப்பர் ஜி
    02. அடப்பாவமே...
    03. அதானே..
    04. மானக்கேடு
    05. உண்மை

    ReplyDelete
    Replies
    1. படத்துக்காக அடிக்கப்படும் கூத்து ,எரிச்சலைத் தருகிறது :)
      யார் பாவம் ,மக்களா ,அ.வாதியா :)
      இவர் எப்படி பிழைப்பை ஓட்டுவாரோ :)
      மகன் வரைக்கும் தெரிய அதென்ன கவிதைகளா :)
      வாய்மையான வாய்தா இதுதான் :)

      Delete
  2. க‘பா’லின்னா காலின்னு உள்ளேயே இருக்கே...! ஆட்டம் காலி... படுதாக் காலி...!

    'கியூ' பிரிவு போலீசாருக்கு தெரியாத கியூவா...? இதெல்லாம் மந்திரிக்குத் தேவையா...? நாம உண்டு நம்ம பதிவு உண்டுன்னு இருக்க வேண்டியதுதானே... அவரு வேலை...!

    அதானே... புது செருப்புன்னு ஏமாத்தி வித்தா நாங்க ஏமாந்திடுவோமா...? எத்தன கல்யாணத்துக்கு போயிட்டு வந்திருப்போம்...?!

    மொக்கைன்னு தெரிஞ்சும் மோசம் போனாலும்... நீ மாசமாயி அம்மாவானியா... இல்லையா...? அதுக்கு ‘பொக்கை’ கொடுக்னும் முதல்ல...!

    வாய்‘தா’ன்னு கேக்கக் கூடாதில்ல... கேட்டாலும் கொடுக்கிறாப்புல இருக்கனுமுல்ல...!

    த.ம. 1











    ReplyDelete
    Replies
    1. கபாலின்னாலே எதிர் மறையாகத்தானே நினைக்கத் தோணுது :)
      நம்ம பதிவா :)
      இதுக்குத்தான் கல்யாண மகால் பக்கத்திலே இருக்கிற செருப்பு கடைக்கு போகக் கூடாதுன்னு சொல்றது :)
      அதானே ,பயபிள்ள யோசிக்கட்டும் :)
      வக்கீல் வேலையே ,இருட்டு அறையில் குருட்டுப் பூனையைத் தேடுவதுதானே :)

      Delete
  3. அடடே.... புதிய சிந்தனை!

    மந்திரி நீ எந்திரின்னு வெளியில் அனுப்பிட்டாங்களா!

    கடிக்காத புதுச்செருப்பு வேஸ்ட்டா!!

    அந்தக் கால காதல் கடிதங்கள் மொக்கையாமா!

    பாவம்!

    ReplyDelete
    Replies
    1. தந்த கபாலிக்கு நன்றி :)
      அனுப்பாம இருந்தாதான் தப்பு :)
      வேஸ்ட் பண்ணாதீங்க ,ஆயில்லே குளிப்பாட்டுங்க :)
      இந்த காலத்தில் அப்படித்தானே இருக்கும் :)
      வாய்தான்னு வாயைத் திறந்து கேட்க முடியலியோ :)

      Delete
  4. //நம்ம ஊர்லே கொள்ளையடிப்பவனை சிம்பாலிக்கா கபாலின்னுதானே சொல்றோம் ?''//

    நல்லாச் சொன்னீங்க பகவான்ஜி.

    ReplyDelete
    Replies
    1. ஒரு படத்துக்கு இவ்வளவு பில்ட் அப்பா ?நாம் என்ன மாதிரி சமூகத்தில் வாழ்கிறோம் :)

      Delete
  5. மந்திரி மேலே என்ன கோபம்...இப்படி ?

    ReplyDelete
    Replies
    1. இவ்வளவு iq இவருக்கு எப்படி என்றுதான் :)

      Delete
  6. Replies
    1. செருப்பு மாடல்தானே :)

      Delete
  7. ஊர்லே கொள்ளையடிப்பவனை கபாலின்னு சொன்னது தப்பே இல்லை.

    ReplyDelete
    Replies
    1. தமிழன்டா....இவ்வளவு தீர்க்கத்தரிசனமா சொல்லி இருக்கான் :)

      Delete
  8. வணக்கம்
    ஜி

    சரியாக சொன்னீர்கள் 1000 ரூபாய்.. அடாகடவுளே.....த.ம 6
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. முட்டாள்கள் இருக்கும் வரை வியாபாரிகளுக்கு கவலை இல்லை :)

      Delete
  9. வாக்களித்தமைக்கு நன்றி :)

    ReplyDelete
  10. Replies
    1. கபாலி பட டிக்கெட் விலையை இப்படி கூட்டி விற்பது கொடுமைதானே :)

      Delete