1 August 2017

வயசுப் பிள்ளைங்களைப் பூட்டி வைக்க முடியுமா :)

கேள்வியில் நியாயம் இருக்கா இல்லையா :)
             ''ஆமா ,இதுதான் எங்க தாத்தா கல்லறை ,அதுக்கென்ன இப்போ ?''
            ''மண்ணிலே அவரைப்  புதைச்சிட்டு, மண்ணை விட்டு போயிட்டார்ன்னு ஏன்  சொல்றாங்க ?''

இது உண்மையா ,இல்லையா :)           
            '' அர்ச்சகரிடம்  என்ன  கேட்கணும்னு  நினைக்கறே ?''

             ''சாமி சிலை பக்கத்திலேயே இருக்கிற  உங்களுக்கு  சாமி வர மாட்டேங்குது ,கோவிலுக்கு  ஒண்ணரை மைல் தூரத்தில் வரும் போதே கருப்பாயி  சாமி ஆட ஆரம்பித்து விடுகிறாரே  ,எப்படின்னுதான் !''
விட மனசில்லை என்றாலும் :)         
         ''காசிக்குப் போனா, எதையாவது விட்டுட்டு வரணும்னு சொல்வாங்க ,நீங்க எதை விட்டீங்க?''
        '' என் பல் செட்டை விட்டுட்டு வந்தேன், குளிக்கும் போது அடிச்சுகிட்டு போயிடுச்சே !''

பெண்டாட்டின்னா இந்த பயம் இருக்கணும் :)
              ''தக்காளி விக்கிற விலையிலே குப்பையிலே போடுறீங்களே ,ஏன் சார் ?''
               ''அதெல்லாம் உடைஞ்ச தக்காளி .... நல்ல தக்காளி மட்டும் பொறுக்கி எடுத்தால் கடைக்காரனுக்கு பிடிக்கலே ,உடைஞ்ச தக்காளியை கொண்டு போனா பெண்டாட்டிக்குப் பிடிக்கலே ,அதான் !''

 வயசுப் பிள்ளைங்களை பூட்டி வைக்க முடியுமா :)
               ''என்னங்க ,காணாமப் போன நம்ம பையன் போன்லே என்ன சொன்னான் ?''
              ''பிரியாவை தேட வேண்டாம்னு பக்கத்து வீட்டிலே போய் சொல்லச் சொல்றான் !''

 பிறந்த நாளைக் கொண்டாட பணம் இருந்தால்  போதுமா :) 
இறந்தபின்னும் நம் பிறந்தநாளைக் கொண்டாடவும் 
நாலு பேர்கள்  இருக்கிறார்கள் என்றால் ...
இன்று நாம் ,நம் பிறந்த நாளைக் கொண்டாடுவதில் அர்த்தம் உள்ளது !

மொபைல்வாசிகள், தமிழ்மண வாக்களிக்க  இதோ லிங்க் ...http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1467908

28 comments:

  1. பொறுப்பான பையன்
    அந்தப்பிள்ளையை நிச்சயம்
    கண்கலங்காமல் காப்பாத்துவான்

    ReplyDelete
    Replies
    1. அந்த பிள்ளை வயிற்றிலே ஒரு பிள்ளையைக் கொடுத்திட்டு மறுபடியும் ஓடாமல் வாழ்ந்தால் சரி :)

      Delete
  2. Replies
    1. ஆத்தாளின் சாமி ஆட்டமும்தானே :)

      Delete
  3. "பிரியாவைத் தேட வேண்டாம்னு பக்கத்துக்கு வீட்டில் போய்ச் சொல்லச் சொல்றான்"

    ஹா.... ஹா.... ஹா....

    ReplyDelete
    Replies
    1. ஓடிப் போயிட்டோம்னு என்பதைக் கூட இவ்வளவு அழகியலோடு சொல்றான் பாருங்க ,நல்லா வருவான் :)

      Delete
  4. பையன் இரண்டு தகவல் சொல்லி விட்டானே...

    ReplyDelete
    Replies
    1. பெரியவங்க பாவம் ,அதிர்ச்சி அடையக் கூடாதுன்னு எவ்வளவு நாசூக்கா சொல்றான் :)

      Delete
  5. மண்ணை வித்து விட்டுப் போயிட்டார்ன்னு சொல்றதுக்குப் பதிலா... அவரசத்தில வித்து விடுபட்டுப் போச்சு...!

    சாமி... ஆம்பளை மேல எல்லாம் வராது...! பொம்பளைன்னா கொ(ல்)ள்ள உசிரு...!

    அதோடு கோவணமும் விட்டுட்டு வந்தாச்சு...! அத ஆவணப்பட எடுத்து வச்சிருக்கு...!

    கத்திப் பேசாதிங்க... போலிஸ்காரரை காவலுக்கு நிப்பாட்டி இருக்காங்க... கடுப்புல சுட்டுத் தள்ளிடப் போறாங்க...!

    இப்பத்தான் பிரியாவோட பிரியா இருக்கானாம்...அதையும் சொல்லச் சொன்னான்...!

    நாலு பேருக்கு நன்றி.... அந்த நாலு பேருக்கு நன்றி....!

    த.ம.+1

    ReplyDelete
    Replies
    1. மண்ணை விற்ற காசு அவர் வைத்தியத்துக்கு சரியாய் போச்சுன்னு பிள்ளைங்க வருத்தப் படுறாங்கலாமே:)

      பூசாரிக்கும் இப்படி வர்றதுதான் பிடிக்குதாமே :)

      போனது கோவணம் ,அதுக்கு ஆவணப் படம் ஒரு கேடா :)

      அந்த போலீஸ்காரர் தக்காளியை சுட்டுத் தள்ளிட்டு போறதில்தான் குறியாயிருக்கார்:)

      பிரியாமலும் இருக்கட்டும் :)

      தாயைக் கூட அனாதையாய் தவிக்க விட்டவனைக் கூட தூக்கிச் செல்லும் அந்த நாலு பேருக்கு நன்றி :)

      Delete
  6. ப்ரியாவைத் தேட வேண்டாம்.... என்ன ஒரு பொறுபபு பயபுள்ளைக்கு!

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. பொறுப்பா கோவிலில் தாலி கட்டி, தெய்வீக காதல்ன்னு நிருபீச்சிட்டானே :)

      Delete
  7. Replies
    1. ஆனால் இன்று சிலர் கொண்டாடும் ஜெயந்தி விழாக்களைப் பார்த்தால் மற்றவர்களுக்குப் பயத்தைத் தருகிறதே ஜி :)

      Delete
  8. பல்செட்டையும், பிரியாவையும் ரொம்பவே ரசித்தோம் ஹஹ

    ReplyDelete
    Replies
    1. வெள்ளத்தில் போன பல் செட் கிடைக்க வாய்ப்பில்லையே :)
      பிரியாவைத் தேடுபவர்களுக்கு ஆறுதல் தரும் செய்திதானே இது :)

      Delete
  9. குழந்தைகள் கேள்விக்கு நம்மால பதிலே சொல்லமுடியாது

    ReplyDelete
    Replies
    1. இப்படித்தான் நம்மைப் பெற்றவர்களும் சொல்லி இருப்பாங்க :)

      Delete
  10. Replies
    1. நம்புறேன் ,நைனை நான் நம்புறேன் :)

      Delete
  11. நல்ல பொறுப்பான பையன்தான் பிரியாவை தேடாதீ்ங்கன்ன சொல்றானே

    ReplyDelete
    Replies
    1. ஒரே வார்த்தையில்,என்னையும் தேட வேண்டாம்ன்னு சொல்லிட்டானே :)

      Delete
  12. எல்லாம் ரசித்தேன்.

    'பொறுப்பான பையனிடம்தான் பிரியா தஞ்சம் புகுந்துள்ளாள்'

    "நம் பிறந்த நாளைக் கொண்டாடுவதில் அர்த்தம் உள்ளது" - நல்ல கருத்து. ஆனால் பேக்கரி கடைக்காரர்களிடமிருந்து நீங்கள் பத்திரம்.

    த ம.

    ReplyDelete
    Replies
    1. பிரியா ,விவரமான பொண்ணு ,தகவலை எப்படி கடத்தணும்னு நல்லாவே தெரிஞ்சி வச்சிருக்கா :)

      பிறந்த நாளைக் கொண்டாட உரிமை இல்லாதவர்கள் ,உங்கள் எண்ணமும் அப்படித்தானே :)

      Delete
  13. இரசித்தேன் த ம 12

    ReplyDelete
    Replies
    1. பிறந்த நாள் கணக்கு சரிதானே அய்யா :)

      Delete
  14. இப்படியெல்லாம்கேட்கக் கூடாது ஆவியாக சாமிகிட்டப் பொயிட்டார்னு அர்த்தம்
    ஒருவேளை அர்ச்சகருக்கு பக்தி இல்லையோ
    அப்ப உடஞ்ச தக்காளிக்கு காசு
    ஒரே போனில் இரண்டு செய்திகள்
    இருக்கும் போது தெரியாதது இறந்தபின் எப்படித் தெரியும்

    ReplyDelete
    Replies
    1. ஆவியாத்தான் சாமிகிட்டே போக முடியுமா :)
      அவருக்கு இருக்கு ,சாமி ஆடுபவருக்குத்தான் புத்தியில்லே :)
      வயிற்று வலி அவருக்குத் தானே ,அவர்தான் கொடுக்கணும் :)
      தெளிவான பையன்தானே :)
      அன்பு காட்டினால் தெரியும் :)

      Delete