''கல்யாணமாகி வருஷம் ஒண்ணு முடியப் போவுதே ,விஷேசம் ஒண்ணும் இல்லையாடி ?''
''வயித்திலே புழு பூச்சி எதுவும் வரலே ,மாமியார் உபயத்தால் பேன்தான் தலையிலே நிறைய வந்திருக்கு !''
நாக்கு மூக்க நாக்கு மூக்க தத்துவம் :)
''அவருக்கு ஜலதோஷம் வந்தாலும் வந்தது தத்துவமா சொல்ல ஆரம்பித்து விட்டாரா ,எப்படி ?''
''ஜலதோஷம் கூட மூணு நாள் அவஸ்தைக் கொடுக்குது ,சந்தோஷம் வர்றதும் தெரியலை , போறதும் தெரியலைன்னு சொல்றாரே !''
கணவன் கையாலே பாஸ்ட் புட் சாப்பிட ஆசை :)
''உங்க லேடீஸ் கிளப் பக்கம் என்னை வரவே கூடானுன்னு சொல்லுவே ,இப்ப எதுக்கு வரச் சொல்றே ?''
''சமையல் கலை நிபுணர் வந்து பாஸ்ட் புட் ஐட்டம் சமைக்க கற்றுக் கொடுக்கிறார்,நீங்க தெரிஞ்சுக்க வேணாமா ?''
இவருக்கு திட்டு வாங்கிறதே பொழப்பாப் போச்சு:)
''ஏண்டா ,கிடைச்ச கண்டக்டர் வேலையே ராஜினாமா பண்ணிட்டே ?''
''பஸ்ஸை ஸ்டாப்பில் நிறுத்தாம போனா வெளியே நிற்கிறவங்க திட்டுறாங்க ,எல்லா ஸ்டாப்பிலும் நிறுத்தினா உள்ளே இருக்கிறவங்க திட்டுறாங்களே !"
ஆணின் சுதந்திரத்திற்கு 'கவுன்டவுன்'என்று சொல்லும் சடங்கு :)
''ஒரு நடிகையை உங்க பைலட் சீட்டிலே உட்கார வச்சதுக்காக சஸ்பென்ட் ஆகி இருக்கீங்க ,இதுக்காக வருத்தப் படுறீங்களா ?''
''இன்னொரு தரம் சஸ்பென்ட் ஆனாலும் பரவாயில்லே ,நானும் அந்த சீட்டிலே உட்கார்ந்தே ஆகணும்னு என் பெண்டாட்டி சொல்றதுதான் வருத்தமா இருக்கு !''
நினைச்சாலே கண்ணீர் தருதே வெங்காயம் :)
கவுன்ட் டௌன் ஆரம்பித்த பிறகும்
மேலே போக மறுக்கிறது GSLV ராக்கெட் ...
அது அடைய வேண்டிய உயரத்தை
வெங்காயம் அடிக்கடி தொடுவதாலா ?
மொபைல்வாசிகள், தமிழ்மண வாக்களிக்க இதோ லிங்க் ..http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1469924
|
|
Tweet |
ரசித்தேன் அனைத்தையும் ஜி.
ReplyDeleteகவுன்ட் டௌன் தக்காளிக்கும் பொருந்துமா ஜி :)
Deleteரசித்தேன் நண்பரே
ReplyDeleteதம+1
படத்தில் ,கீழே காட்டும் விரல்கள் எதையோ சிம்பாலிக்காய் காட்டுதே :)
Deleteதலைக்கு மேல இருக்கிற பேன போடுங்க... ஒரே புழுக்கமா இருக்கு...! புழுங்கி புழுங்கி சாகிறதா...மொதல்ல பேன போடுங்க...?!
ReplyDelete‘சந்தோஷம் பொங்குதே... சந்தோஷம் பொங்குதே...!’பொங்குனா உடனே வடிஞ்டிசிடுமுல்ல... அடங்கே... தோஷத்த... வடிச்சு இறக்கி வைங்க...!
நானே நல்ல நிபுணர்தானே... ஒரு உறையில ரெண்டு கத்தி இருக்கலாமா... போமா...?!
‘உரலுக்கு ஒரு பக்கம் இடி... மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடி...’ கண்டக்டர் ரெண்டு பக்கமும் இடிவாங்க முடியல...பொம்பளைன்னாக்கூடப் பரவாயில்ல... வலிக்கிது... அழுதிடுவேன்... அதான்...!
இனி சஸ்பென்ட் இல்ல... டிஸ்மிஸ்தான்... மிஸனால வாழ்க்கையே போகப்போகுது...! மெர்ஸல் ஆயிட வேண்டியதுதான்...!
வெறும் காயம்... வெங்கயாம்... காயமே பொய்யடா... வெறும் காற்றடைத்த பையடா...! அட போங்கடா பொல்லாத வாழ்க்கை... இதுக்குப் போயி அலட்டிக்கலாமா...?!
த.ம. +1
பார்த்து போடுங்க ,தலை உடைஞ்சிடப் போவுது :)
Deleteபொங்க விடாமல் அடக்கி வாசிக்கணுமோ:)
நிபுணத்துவத்தை இன்னும் வெளியே காட்டவில்லை போலிருக்கே :)
ஒன்லி லேடிஸ் வண்டி என்றால் விரும்பி பணி பார்ப்பாரா :)
டிஸ்மிஸ் ஆனாலும் பரவாயில்லைன்னு மனைவி ஒத்தக் கால்லே நிற்குதே :)
வாழ்ந்து பார்த்தால் இந்த வாழ்க்கையிலும் ஒன்றுமே இல்லையோ :)
tha.ma.6 - ரசித்தேன்.
ReplyDeleteஆறை நானும் ரசித்தேன் :)
Deleteஅனைத்தும் ரசித்தேன்.
ReplyDeleteத.ம. ஏழாம் வாக்கு.
மாமியார் கொடுத்த உபயம் நன்று தானே ஜி :)
Deleteரசித்தோம் அனைத்தையும் ஜி!
ReplyDeleteஜலதோஷம் வந்தால் சந்தோஷமும் போய் விடுவது உண்மைதானே ஜி :)
Deleteமனைவி காரணத்தோடுதான் க்ளப்புக்கு கிளப்புறாள்.
ReplyDeleteஇப்போ கணவனையும் அழைத்துக் கொண்டு:)
Deleteஅனைத்தையும் ரசித்தேன், அதுவும் கண்டக்டர் படும் பாட்டையும்தான். த. ம சுத்துது, Error கொடுக்குது. இன்னும் போடலை. ரெண்டு மூணு தடவை முயற்சி பண்ணிட்டேன்.
ReplyDeleteஇன்னைக்கு பதிவுக்கும் சேர்த்து முயற்சி பண்ணிப் பாருங்க ,வோட்டு விழலாம் ,ஏன்னா தம வாசகர் பரிந்துரையில் உள்ள நால்வருக்கும் உங்க வோட் சாலிட்டா விழுதே :)
Deleteஅதென்ன அவ்வளவு நிச்சயமாய் மாமியார் உபயம் . ஏன் கணவர் உபயமாகக் கூட இருக்கலாமே
ReplyDeleteசளி பிடித்தால் சனி பிடித்த மாதிரி . ஜல தோஷம் வந்தால் சந்தோஷம் போகும்
அந்த நிபுணரே ஒரு வேளை கணவராகவும் இருக்கலாம்
சரியான மத்தள அனுபவம்
அதற்கு வேறு பைலட்டை பார்க்கணும்
புரியவில்லை
கணவர் உபயம் என்றால் புழு பூச்சி வயித்துக்குள் தான் வரும் :)
Deleteசரியாக சொன்னீர்கள் :)
மனைவிக்கே தெரியாமலா :)
இருபக்கமும் இடியா ,அடியா :)
ஜொள்ளு பைலட் கிடைக்கணுமே :)
சமீபத்தில் தக்காளி தொட்ட உயரம் கூட உங்களுக்குத் தெரியுமே :)
''ஜலதோஷம்....//
ReplyDeleteமருந்து சாப்பிட்டா ஒரு வாரத்தில் குணமாயிடும். சாப்பிடலேன்னா குணமாக ஏழு நாள் ஆகும்னு சொல்லுவாங்க!!!
ஏழு நாளில் குனமாவதே நல்லது :)
Deleteகண்டக்டரை திட்டத்தான் வேண்டும். மரியாதை தெரிவதில்லை அவர்களுக்கு
ReplyDeleteஐந்து விரலும் ஒரே மாதிரியா ,சிலர் அப்படித்தான் ஜி :)
Deleteஇதுதான் செம தாக்கு என்பதோ.............
ReplyDeleteசமயம் கிடைக்கும் போது விடுவார்களா :)
Deleteஇரசித்தேன்! மிகவும் இரசித்தது கண்டக்டர் பற்றிய நகைச்சுவை துணுக்கை
ReplyDeleteகூட்டத்தில் டிக்கெட் போடுவது கஷ்டமான வேலைதானே :)
Deleteரசித்தேன் நண்பரே
ReplyDeleteபாஸ் புட் அருமைதானே :)
Delete