4 August 2017

தேவதை சொல்லும் சேதி :)

 படித்ததில் இடித்தது :)              
               ''ஏட்டையா ,கட்டாய ஹெல்மெட் சட்டத்தை உடனே அமுலுக்குக் கொண்டு வரணும்னு சொல்றீங்களே ,இரு சக்கர வாகன ஓட்டிகளின்  உயிர் மேல் உங்களுக்கு அவ்வளவு  பாசமா ?''
                ''அட நீங்க வேற ,பையனோட காலேஜ் ஃபீசை  இந்த வாரத்தில் கட்ட வேண்டியிருக்கே !''
இடித்த செய்தி .....நாளை முதல் மதுரையில் கட்டாய ஹெல்மெட் சட்டம் அமல் !

எழுத்தாளனை  இப்படியா அவமானப் படுத்துவது :)
             ''மனைவியுடன்  பாத்திரக் கடைக்கு  ஏண்டா போனோம்னு ஆயிடுச்சா ,ஏன் ?''

             ''பாத்திரத்திலே பெயர் வெட்டுகிறவர் கூட ஒரு எழுத்துக்கு இவ்வளவுன்னு சம்பாதிக்கிறார்,நீங்க பக்கம் பக்கமா எழுதி என்ன   பிரயோசனம்னு  குத்திக் காட்டுறாளே !''

நீதி தேவதை சொல்லும் சேதி :)
               ''ரெண்டு பக்க நியாயத்தையும் ஆராய்ந்து தீர்ப்பு  சொல்லணும்னு  நீதிதேவதையின் வலது கை  தராசு சொல்லுது சரி  , இடது கையிலே   இருக்கிற கூர்வாள் என்ன  சொல்லுது ?''
               ''நியாயமா தீர்ப்பு சொல்ல முடியாதவர்கள் , குத்திகிட்டு செத்துப் போயிடணும்னுதான் !''
ஜொள்ளு விடவுமா ரயிலை நிறுத்துவது :)
         ''இந்த ஆற்றுப் பாலம் மேல் புதுசா ரயில் விட்டாங்க சரி ,கீழே ஆத்துலே பொம்பளைங்க குளிக்கத்  தடையாமே , ஏன்?''
        ''ரயில் இங்கே வரும் போது,ஜொள்ளுப் பார்ட்டிங்க  அடிக்கடி செயினை இழுத்து நிறுத்தி விடுகிறாங்களாமே !''

படித்த டாக்டர்களே சூது செய்யலாமா :)
        பெரும்பாலான கொள்ளைக்காரர்களுக்கு 
       முன் எச்சரிக்கையோடு கொள்ளை அடிக்கத் தெரியவில்லை !
       ஒருசிலர்தான் டாக்டர்களைப்போல் 
       முகமூடி ,கையுறை அணிந்து கொள்ளை அடிக்கிறார்கள் !

மொபைல்வாசிகள், தமிழ்மண வாக்களிக்க  இதோ லிங்க் ....http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1468271

31 comments:

  1. டாக்டரும், கொள்ளைக்காரர்களும் கூட்டணி ஆகியாச்சா ?

    ReplyDelete
    Replies
    1. சில டாக்டர்கள் அப்படித்தானே :)

      Delete
  2. Replies
    1. நீதி தேவதையின் நீதி சரிதானே :)

      Delete
  3. பையன் பிறந்தப்ப தொட்டில் குழந்தைத் திட்டம் இருந்தது தெரியலையா... அய்யா...!

    என்னோட எழுத்து கல்வெட்டில் பதிக்கப்படணும்... பத்துப்பாத்திரத்திலல்ல...என்னோட பாத்திரம் இப்பொழுது தரித்திரத்தில இருக்கலாம்... சரித்திரம் படைக்கப் போறேனாக்கும்... நீ பார்க்கத்தான் போறாய்...!

    கண்ணைக் கட்டி தராசில் விட்ட கதையால்ல இருக்கு... வாளை எடுத்தவள் வாளால் மடிவாளோ...?!

    பொம்பளைங்க வெளியே போனா செயினை அறுக்கிறாங்க... இங்க செயினை இழுக்கிறாங்களே... வெளியே தலைகாட்ட முடியலை...!

    குளத்தை வெட்டாம பணம் வாங்கிக்கிற மாதிரி ஆபரேசன் பண்ணாமலே ஆபரேசன் பண்ணின தடமே தெரியாதுன்னு சொல்லியும் பணம் வாங்கிக்கிறாங்களோ...?! எல்லாப் பக்கமும் பல நேரங்களில் சி சி டி வி கேமரா வேலை செய்யமாட்டேங்கிதே...!

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. இரண்டாவது பெண்ணை அங்கேதானே விட்டார் :)
      எப்போ மண்டைப் போட்ட பிறகா :)
      கணக்கு சரியா வராத நீதிபதிகளுக்கு இது பொருந்துமா :)
      நல்ல வேளை ,கழுத்தை அறுக்க வில்லையே :)
      இது லேசர் சிகிச்சை கண்ணுக்கும் தெரியாது :)

      Delete
  4. காலேஜ் பீஸ் கட்ட எப்படிலாம் மெனக்கெட வேண்டியிருக்கு

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் நானும் மெனக் கெட்டாலும் கொடுப்பார் யாரும் இல்லையே :)

      Delete
  5. Replies
    1. வை பை மட்டுமா ,உங்க பையும் மகிழ்ச்சி தருதே :)

      Delete
  6. Replies
    1. கூறுள்ளவங்களுக்கு இந்த கூர் வாள் அர்த்தம் புரியும்தானே ஜி :)

      Delete
  7. Replies
    1. எழுதியே நீங்களாவது சம்பாதித்து உள்ளீர்களா அய்யா :)

      Delete
  8. அனைத்தும் நன்று

    ReplyDelete
    Replies
    1. சட்டம் எதுக்கு பயனாகுது பார்த்தீங்களா அய்யா :)

      Delete
  9. அனைத்தையும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்க டாக்டர் அனுபவம் எப்படி ஜி :)

      Delete
  10. ஒழுங்கா தீர்ப்பு சொல்லலைன்னா ஒரே குத்து அப்படி இருக்குமோ ?

    ReplyDelete
    Replies
    1. அப்படி நடந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும் :)

      Delete
  11. எழுத்தாளனை இப்படியா அவமானப் படுத்துவது :)//

    கல்யாணப்பரிசு தங்கவேலு நினைவுக்கு வந்தார்!!

    ReplyDelete
    Replies
    1. அவர் டுபாக்கூர் எழுத்தாளர் ஆச்சே :)

      Delete
  12. எல்லாமே ரசிக்க வைக்கிறது வேறு என்ன சொல்ல

    ReplyDelete
    Replies
    1. இதுவே போதும் அய்யா :)

      Delete
  13. Replies
    1. ஜொள்ளுப் பார்ட்டிகள் செய்வது தவறுதானே :)

      Delete
  14. ஒரு சில மருத்துவர்கள் செய்யும் தப்பால் எல்லோருக்கும் கொள்ளைக்கார பட்டம்.
    எல்லாம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. டாக்டர்களிலும் நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் :)

      Delete
  15. Replies
    1. எழுத்தாளன் பாடு கஷ்டம்தானே ஜி :)

      Delete
  16. உங்க பொய்யை நானும் ரசித்தேன் :)

    ReplyDelete