23 August 2017

'ஷ' கிலா படம் என்றாலே அப்படித்தானா :)

பயபிள்ளே மண்டையில் ஏறிய பஞ்ச் டயலாக் :)
             ''என்னடா ,ஸ்கூலுக்கு சீக்கிரமா கிளம்பிட்டே ?''
             ''புதுசா வந்திருக்கிற  வாத்தியார் 'எனக்கு எல்லா  மதமும் பிடிக்கும்  ,தாமதம் மட்டும் பிடிக்கவே பிடிக்காது'ன்னு சொல்றாரே !''

இருந்தால் தானே சலவை செய்ய :)                  
         ''என்னங்க ,நம்ம பையன் சரியா படிக்காம ,தீவிரவாதி ஆயிடுவான் போலிருக்குங்க !''

          'ஒண்ணும்  கவலைப் படாதே ,யாரும் அவனை 'மூளைச் சலவை 'செய்ய முடியாது !''
                                                                                                
 ஷகிலா படம் என்றாலே  அப்படித்தானா :)                    
              ''தமிழ் வாத்தியார்  எதுக்கு உன்னை வகுப்பை விட்டு வெளியே போகச் சொன்னார் ?''       
             ''ஷ என்பது வடஎழுத்து ,அதை  தவிர்க்கணும்னு அவர் சொன்னப்போ...ஷகிலாவுக்கு வர்ற ஷ தானேன்னு கேட்டேன்  !''

என்னவோ ஏதோன்னு பயந்தே போனேன் :)          
        ''நாலாவது மாடி ஜன்னலிலே பெயிண்ட் பண்ணிக்கிட்டு இருந்தேன் ,மேலேயிருந்து கீழே விழுந்து ...''
        ''அய்யய்யோ என்னாச்சு ?''
        ''பெயிண்ட் எல்லாம் கொட்டிப் போச்சு !''

மனைவியினால் அதுவும் கிடைக்கும் ,இதுவும் கிடைக்கும் :)
        மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்தான் ...
        சில வீடுகளில், கணவன்மார்களுக்கு வாய்க்கு ருசியா சாப்பாடும்...
        சில வீடுகளில் ,கணவன்மார்கள் வலி தாங்க முடியாமல் போடும் கூப்பாடும் ...
        எல்லாமே மனைவி கையில் இருக்கும் கரண்டியின் 'கை'ங்கர்யத்தால் !

மொபைல்வாசிகள், தமிழ்மண வாக்களிக்க  இதோ லிங்க்....http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1470091

35 comments:

  1. ஆஆஆஆஆவ்வ்வ் இங்கேயும் மீயேதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊ:) என்னை ஆரும் பின்னால தள்ளிட முடியாது...:).

    ReplyDelete
    Replies
    1. மாஸ்டர் சொன்னது கரீட்டுத்தானே?..
      அதானே இருந்தாத்தானே சலவை பண்ணலாம்.. நமக்குத்தான் இல்லவே இல்லயே:).

      எழுத்தில சந்தேகம் கேட்டது ஒரு டப்பா?:)
      பெயின் கொட்டியது ஹா ஹா ஹா ஒருகணம் பதறிட்டேன்.. நம்போணும் சொல்லிட்டேன்ன்:)..
      இந்த கணவன் மனைவி பிரச்சனை காலகாலத்துக்கும் தீராதுபோல:).. இனிமேல் யாரும் திருமணமே செய்யக்கூடாது எனத் தடை போட்டால் மட்டுமே இது தீரும்.. என்ன சொல்றீங்க பகவான் ஜீ?:)

      Delete
    2. யானை வரும் பின்னே ,மணி ஓசை வரும் முன்னே என்பதைப் போல, நேற்றே உங்கள் த ம வாக்கைப் பார்த்தேன் :)

      Delete
    3. சொல்ல வேண்டிய விதமா சொல்லி புரிய வைத்து விட்டாரே :)

      என்னது நமக்கா :)

      வில்லங்கமே அதில் தானே இருக்கு :)

      இதுக்குத் தான் வாழையடி வாழையென தொடரும் உறவுன்னு சொன்னாங்களா :)

      நல்ல வேளை ,ஹார்ட் அட்டாக் வரலையே :)

      Delete
  2. " எல்லாமே மனைவி கையில் இருக்கும் கரண்டியின் 'கை'ங்கர்யத்தால் "
    அடிக்கிற கைதானேங்க அணைக்கும்

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சமா அணைத்து நிறைய அடிக்குதே :)

      Delete
  3. கரண்டியின் 'கை'ங்கர்யம் சிறப்புதான்...

    அருமை நண்பரே....

    ReplyDelete
  4. பன்ச் டயலாக்கள் மனதில் பதியும் காலம்! ரசித்தேன்அனைத்தையும்.

    ReplyDelete
    Replies
    1. சொல்ல வேண்டியதை சொல்ற விதமா சொல்வதும் ஒரு கலை தானே:)

      Delete
  5. Replies
    1. நமக்கு எம்மதமும் சம்மதமில்லை ,அப்படித் தானே :)

      Delete
  6. அவரு அப்படிச் சொல்லிட்டு... நேற்று அவுங்க யாரும் பள்ளிக்கு வரவே இல்லை...!

    கறிக்கடையிலதான் மூளையைக் கேட்டு வாங்கனும்...!

    சகிக்க முடியலைன்னு சொல்லிட்டாரு...!

    அய்யய்யோ... போச்சா பெயிண்டு... நீ போயிருந்தாலும் பரவாயில்லை...!

    கணவன் அமைவதெல்லாம் இறைகரண்டி கொடுத்த வரமா...?! இந்த பிராண்டு பிராண்டுறாளே...!

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. நேற்று வராத காரணம் ,ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தமாச்சே :)

      எதுக்கு வம்பு ,உங்களுக்கு முன்னாடி வந்தவருக்கு இருந்தது ,உங்களுக்கு இல்லாமப் போச்சேன்னு கடைக் காரர் சொல்வாரே :)

      ஷகிக்க முடியலைன்னு சொல்லவில்லையே :)

      இப்படி சொல்றவன் எல்லாம் நல்ல முதலாளியா :)

      பூரிக்கட்டை யார் கொடுத்த வரமோ :)



      Delete
  7. ஷகிலாவுக்கு வர்ற ஷ தானேன்னு கேட்டேன் !''//

    ஷகிலாவை வாத்தியாருக்கு மட்டும் பிடிக்காதா என்ன!!!



    ReplyDelete
    Replies
    1. அறிவுப்பசிஜி என்னாச்சு உங்கள் புளொக்குக்கு? கொமெண்ட் போட ட்றை பண்ணிக் களைச்சிட்டேன்ன்ன்...:(.

      Delete
    2. நாம கஷ்டப்பட்டு தியேட்டரில் பார்த்ததை ,இவன் செல்லிலேயே பார்க்கிறானே என்ற பொறாமையாய் இருக்கும் :)

      Delete
    3. அதிரா ஜி ....கொமென்ட் பாக்ஸ் ,வாக்குப் பெட்டியை பசிஜி தூக்கி கடாசி விட்டாரே :)

      Delete
  8. பள்ளிகளில் ஷகிலாவை பத்தி பேசுவாங்களா?!

    ReplyDelete
    Replies
    1. வாத்தியாருடன் பேசியதுதான் தப்பு :)

      Delete
  9. இரசித்தேன்! த ம 9

    ReplyDelete
    Replies
    1. தலைவாழை இலை சாப்பாடு அருமைதானே :)

      Delete
  10. Replies
    1. வட எழுத்தையும்தானே :)

      Delete
  11. அனைத்தும் ரசித்தோம் ஜி!

    ReplyDelete
    Replies
    1. மூளைச் 'சலவை'க்கு சோப்பு தேவையா ஜி :)

      Delete
  12. அனைத்தும் ரசித்தேன் பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. ஷகிலா படங்களை தவிர்க்கச் சொல்லி இருந்தால் சரியாக இருக்குமா ஜி :)

      Delete
  13. மூன்றாவது பாடப்புத்தகத்தில் ஷகிலாவின் வாழ்க்கை காவியம் இருக்கிறதாமே....

    ReplyDelete
    Replies
    1. ஷகிலாவின் வாழ்க்கையை பல்கலைக் கழகத்தில் ஒருவர் p.hd பண்ணிக் கொண்டிருப்பதாக கேள்வி பட்டேனே :)

      Delete
  14. பன்ச் டயலாகால் நன்மையும் விளையும்
    நல்லாப் படிக்காதவர்கள் எல்லாம் தீவிர வாதிகளா
    வலையில் நிறைய பேர் வாத்தியார் சொன்னபடி ஷவைத் தவிர்க்கிறாங்களே
    யாருடைய தலையிலா
    கரண்டியால் மட்டுமல்ல பூரிக்கட்டையாலுமிருக்கலாம்

    ReplyDelete
    Replies
    1. நன்மை எனில் பஞ்ச் டயலாக்கும் நன்று எனலாமோ :)
      ஒரு சிலர் ஆகக்கூடும் :)
      நல்லது தானே :)
      கருப்பு பெயிண்ட் என்றால் பரவாயில்லையோ :)
      வெறும் கையே போதும் )

      Delete
  15. 'ஷ' கிலா படம் என்றாலே அப்படித்தானா.....எப்படி...நான் படத்தை பாத்தேயில்லையே....

    ReplyDelete
    Replies
    1. மல்லுவுட் இவரைக் கண்டு கதி கலங்கியது தெரியாதா :)

      Delete