14 August 2017

கண் அளக்காததா, கை அளக்கப் போவுது :)

கண் அளக்காததா, கை அளக்கப் போவுது :)
        ''என்னங்க ,என் ப்ளட் டெஸ்ட் ரிசல்ட்டில் , கொழுப்பு அதிகம்னு காட்டுதுங்க !'
        '' என்னைக் கேட்டாலே  இதைச் சொல்லியிருப்பேனே ,இதுக்கு ஐந்நூறு ரூபாய் தண்டச்செலவு வேறயா  ?''
உங்களுக்கும் மண்டையைப் பிய்ச்சிக்கத் தோணுதா :)          
               ''என் பையனையா  அரைக் கிறுக்கன்னு  சொல்றே ,நீ  உருப்படவே மாட்டே !''
                ''ஹிஹி ''
               ''சிரிப்பென்ன வேண்டிக் கிடக்கு ?''
               ''முழுக் கிறுக்கன் யாரென்று சொன்னால் ,உங்களுக்கு இன்னும்  எப்படி கோபம் வரும்னு நினைச்சேன் !''

ஊரு விட்டு ஊரு போனா பேரும் மாறுமா:)
          ''கர்நாடகாவிலே  எல்லா ஊர் பெயரும்  'ஹள்ளி'ன்னுதான்  முடியுமோ ?''
          ''ஊரை மட்டுமல்ல ,நம்ம ஊரு அல்லி ராணியைக் கூட   , அவங்க ஹள்ளி ராணின்னு தான் சொல்வாங்களோ !''

மனைவியின் முன் எச்சரிக்கை  சரிதானா  :)
           ''வேலைக்காரி ,என் ஜீன்ஸ் பேன்ட் ,சட்டைப் போட்டுக்கிட்டு  வர்றாளே ,ஏன் கொடுத்தே ?''
           ''என் சேலையைக் கட்டிக்கிட்டு வந்தவளை..நான்னு நினைச்சு   நீங்க  கட்டிப் பிடிச்சதை  மறந்துட்டீங்களா ?''

முரண்பாடுகள் நிறைந்தது சினிமா உலகம் :)
   எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ் மாட்டியவர்கள் 
   சிலநாள் அழகு ஹீரோயின்களாக   ...
   இயற்கையாகவே அழகாய் இருப்பவர்கள் 
   காலமெல்லாம் எக்ஸ்ட்ரா நடிகைகளாக ...




31 comments:

  1. ரசித்தேன் அனைத்தையும்.

    ReplyDelete
    Replies
    1. நல்ல கொழுப்பு யாருக்கு கணவனுக்கா ,மனைவிக்கா ஜி :)

      Delete
  2. முன்னெச்சரிக்கையான மனைவி சரிதான்.

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத் தமிழன் கூறியிருப்பதைப் பார்த்தீங்களா ஜி :)

      Delete
  3. ரசித்தேன். கணவன் மனைவியோட கொழுப்பைப் பற்றிச் சொல்லும்போதே அவரைக்கும் ரத்தத்தில் கொழுப்பு ஜாஸ்தின்னு தெரியுதே. மனைவி வேலைக்காரியைக் கட்டிப்பிடிக்காமல் இருந்தால் சரிதான். த ம

    ReplyDelete
    Replies
    1. அய்யாவுக்கு வாய்க் கொழுப்பு அதிகம் தான் :)
      நீங்க சொல்ற மாதிரி நடந்து விட்டால் அய்யா பாடு கஷ்டம் தான் :)

      Delete
  4. அவரவருக்குத் தெரிவதையே டெஸ்ட் செய்து உறுதிப் படுத்துகிறார்கள்
    பையன் அரைக்கிறுக்கன்னா அப்பனா/ அம்மையா முழுக்கிறுக்கன்
    ஹள்ளி என்றால் கிராமம் நம்மூர் பட்டி போல நாம் கூறும் ப எழுத்துகள் பெரும்பாலும் கன்னடத்தில் ஹ என்று கூறப்படும் உ-ம் பால் ஹால் . போராட்டம் ஹோராட்ட
    என் துணியை ஏன் அணிந்தாய் என்று துகிலுறிந்தால் ......
    அழகின் கண்ணோட்டம் வேறுபடும்

    ReplyDelete
    Replies
    1. அய்யா சொன்னதும் உண்மைதானே :)
      இதுக்கு பத்து மாசம் சுமந்தவள் உரிமை கொண்டாட வருவாளா :)
      பாலை ஹால் என்றால் ஹாலை என்ன சொல்வார்கள் :)
      இன்னும் நிலைமை மோசமாகிடும் :)
      அதுக்காக நம்ம ஊர் உலக அழகியை அழகில்லை என்று யாராவது சொல்வார்களா :)

      Delete
  5. சளைக்காமல் தினமும் ஜோக்குகள் மூலம் சிறுக்க வைப்பதற்கு பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. புலி வாலைப் பிடித்துக் கொண்டிருப்பது போலத்தான் இதுவும் ஜி :)

      Delete
  6. Replies
    1. நீங்க ரசித்தது ,அரைக் கிறுக்கனையா ,முழுக் கிறுக்கனையா ஜி :)

      Delete
  7. Replies
    1. இதைத்தானே வேண்டாங்கிறது ,எதையாவது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டாமா :)

      Delete
  8. சுவைத்தேன்! த ம 9

    ReplyDelete
    Replies
    1. உங்க வயசுக்கு, இந்த கருத்தே எனக்கு போதும் அய்யா, :)

      Delete
  9. கொழுப்பு அதிகம்னு காட்டுதுங்க !'//

    நல்ல கொழுப்பா, கெட்ட கொழுப்பா?!

    ReplyDelete
    Replies
    1. அய்யா சொல்லும் தொனியில் இருந்தே தெரியவில்லையா :)

      Delete
  10. நானும் பார்த்தேன்.அந்த கண்கள் ..மார்பு பக்கத்தையே அளவெடுப்பதை.............!!!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. நானும் பார்த்தேன் ..உங்கள் கண்கள் அங்கேயும் இங்கேயும் மாறி மாறிப் பார்ப்பதை :)

      Delete
  11. அனைத்தும் நன்று

    ReplyDelete
    Replies
    1. இப்படி சொல்லிட்டு ,'அந்த' நல்ல காரியத்தை செய்யவில்லையே ஜி :)

      Delete
  12. திக் பிளட் இதுதானா...?! திக்... திக்...கிங்கிது...!

    அதான் தெரியுமே...!

    ஹள்ளி ராணியே கப்பம் கட்டு...!

    கொடுத்து வைத்தவள் இவள்தானோ...?!

    எக்ஸ்ட்ரா... எக்ஸ்ஸட்ரா...!

    த.ம. +1





    ReplyDelete
    Replies
    1. சொல்றதையும் சொல்லிட்டு ,இப்போ இப்படி சொன்னா எப்படி :)

      அந்த கால டணால்ஜோக் மாதிரியிருக்கே ,நீங்க சொல்றதும் :)

      கப்பம் கட்டினா கேஸ் இல்லாம ஆயிடுமா :)

      அய்யா பேண்ட்டில் ஜிப் இருக்காதா :)

      அதான் முன்னுக்கு வர காரணமா :)


      Delete
  13. அரைக் கிறுக்கன் யாரென்று தெரியுதா ஜி :)

    ReplyDelete
  14. அனைத்தையும் இரசித்தேன்! இரண்டாவது நகைச்சுவை துணுக்கு அருமை.

    ReplyDelete
    Replies
    1. அந்த கிறுக்கனையா சொல்றீங்க :)

      Delete
  15. அத்தனையும் அருமை நண்பரே ....

    அரைக் கிறுக்கன் முழுக் கிறுக்கன் சூப்பர்..!!

    ReplyDelete
    Replies
    1. அவரோட பரம்பரையே இப்படித்தான் போலிருக்கு:)

      Delete
  16. ஏர் ஓட்டும் வயலினிலே தார் ஓட்டும் காலமடா... http://ajaisunilkarjoseph.blogspot.com/2017/08/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கவிதை அருமை ...உழன்றும் உழவே தலை என்ற வள்ளுவனின் வாக்கு வீணாகாது ,உழவன் அருமை விரைவில் தெரியும் :)

      Delete