15 August 2017

நேர்மையை படங்களில் வலியுறுத்தியவரா இப்படி :)

மரம் சும்மா இருந்தாலும் காற்று சும்மா இருக்க விடாது :)
              ''கொசுக்கடி வாங்கியே அவர் கவிஞர் ஆகிவிட்டாரா ,எப்படி ?''
              ''நான் சும்மா இருந்தாலும் கொசு சும்மா இருக்க விடாதுன்னு சொல்றாரே !''

நேர்மையை படங்களில் வலியுறுத்தியவரா இப்படி :)
            ''சிலைக் கடத்தல் வழக்கில் அந்த இயக்குனர் மாட்டிக்கிட்டார் என்பதை உங்களால் நம்ப முடியலையா ,ஏன் ?''

            ''அவர் இயக்கிய படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது 'விரலுக்கேற்ற வீக்கம் ',ஆனால் அது அவருக்கே பொருந்தலையே !'' 

இப்படித்தான் சிலர் தேசபக்தியை காசாக்குகிறார்கள்:)
            ''கொடியை ஏற்றிவிட்டு அந்த கஞ்சப் பிசினாறி கடைக்காரர் , புத்தியைக் காண்பிச்சிட்டாரா, எப்படி ?''
           ''மிட்டாயும் ,கொடியும் வேணுங்கிறவங்க ஒரு ரூபாய் கொடுத்து வாங்கிக்கணுமாம் !''

தலைகீழாய் நின்று கொடி வணக்கம் செய்ய முடியாதே :)
           ''தலைநிமிர்ந்து கொடிவணக்கம் செய்யவேண்டியவங்க ஏன் தலைக் குனிஞ்சு நிற்கிறாங்க ?''
          ''தலைவர் ஏற்றின கொடி தலைக்கீழா பறக்குதே !

 வீட்டிலாவது சுதந்திரம் உள்ளதா :)
        எறும்புகளே ...
        எந்தக் கோட்டையில் கொடியேற்ற 
        நீண்ட அணிவகுப்பு நடத்துகிறீர்கள் ?
        பாதுகாப்பாய் எப்படி வாழ்வதென்று 
        உங்களிடம் இருந்துதான் நாங்கள் கற்றுக் கொள்ள நினைக்கிறோம் ...
        பிரதமரே பாதுகாப்பாய் குண்டு துளைக்காத கண்ணாடி பின்னால் இருந்து எங்களை வாழ்த்துவதால் !

24 comments:

  1. நானும்தான் கொசுக்கடியில் சாகுறேன் ஜி

    ReplyDelete
    Replies
    1. கவிதை வராவிட்டாலும் டெங்கு வராமல் போனால் சரிதான் ஜி :)

      Delete
  2. Replies
    1. விரலுக்கேற்ற வீக்கம் சரிதானே ஜி :)

      Delete
  3. Replies
    1. கஞ்சப் பிசினாறியையுமா:)

      Delete
  4. கொசுத்தொல்லை எங்கூட்டுல இல்ல

    ReplyDelete
    Replies
    1. வேற தொல்லை இருக்கிறதா மாமா சொன்னாரே :)

      Delete
  5. நடப்பது 71ன்னாவது சூதந்திரமுல்ல...கொசுவும் கடிக்கும் டையரடக்கரும் அப்படித்தான்.................

    ReplyDelete
    Replies
    1. பச்சிளம் குழந்தைகளைக் காப்பாற்ற இயலாத அரசாங்கம் ,சுதந்திரமாம் சுதந்திரம் :)

      Delete
  6. எறும்புகளே ...
    எந்தக் கோட்டையில் கொடியேற்ற
    நீண்ட அணிவகுப்பு நடத்துகிறீர்கள் ?// சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. எறும்புகளின் கோட்டை செம்புற்றாக இருக்குமோ :)

      Delete
  7. ''கொசுக்கடி வாங்கியே அவர் கவிஞர்...//

    சோகக் கவிதைகள் எழுதித் தள்ளுறாரோ?!

    ReplyDelete
    Replies
    1. கடியினால் வந்த கவிதை அப்படித்தானே இருக்கும் :)

      Delete
  8. கொசுக்கு அடி... கொசுக்கடி... அடிக்கடி...!

    அடுத்த படம் ‘கடத்தல் மன்னன்...!’

    கொடி கட்டிப் பற...!

    தலைகீழ் மாற்றம் வந்தே தீருங்கிறது இதுதானா...?!

    செங்கோட்டையில்தானே...!

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. கவிஞரின் கவிதைக் கடிக்கு கொசுக்கடியே தேவலே :)

      சொந்தக் கதை ,சோகக் கதையா :)

      வியாபாரத்தில் தானே :)

      சிம்பாலிக்கா சொல்றாரோ :)

      பொருத்தமான இடம் அதுதானே :)

      Delete
  9. கொசு சும்மா இருக்க விடாவிட்டால் கவிதை வருமா
    யார் யார்....?
    அடிப்படையில் கடைக்காரர்தானே
    அது குற்றமல்லவா
    கொடியேற்ற அணிவகுப்பா, அணிவகுத்துக் கொடியேற்றமா

    ReplyDelete
    Replies
    1. தூக்கம்தான் வரும் :)
      படத்தின் பெயரை கூகுளில் தேடி பாருங்க :)
      புத்தி மாறாதோ :)
      தலைவர் எது செய்தாலும் சரிதான் :)
      எப்படி வேண்டுமானாலும் வச்சுக்கலாம் :)

      Delete
  10. Replies
    1. இந்த பத்து ,அந்த நேர்மைக்கா :)

      Delete
  11. ரொம்ப கடிக்கிறீங்க,

    மிட்டாயிலே இருக்காங்க
    ஒரு லட்டு கொடுத்திருக்கலாம்,

    நாடே தலைகீழாதானே ஜி இருக்கு,


    அருமை நண்பரே ரசித்தேன்...

    ReplyDelete
    Replies
    1. இரத்தம் ஒன்னும் வரலையே :)

      அதான் அரசியல் வியாதிகள் கொடுத்து கிட்டேதானே இருக்காங்க :)

      அப்படின்னா சரிதான் :)

      Delete
  12. Replies
    1. எறும்புகளின் அணிவகுப்பு அருமைதானே :)

      Delete