படித்ததில் இடித்தது :)
''சீக்கிரமே ஆதார் கார்டு வாங்கணும்னு ஏன் சொல்றீங்க ?''
''போற போக்கைப் பார்த்தால் ,பிணத்தை எரிக்கக் கூட ஆதார் எண் அவசியம்னு சொல்வாங்க போலிருக்கே !''
இடித்த செய்தியின் தொடுப்பு ....இறப்புச் சான்றிதழ் வாங்கவும் ஆதார் அவசியம் !
கற்புக்கோர் கண்ணகி செய்தது சரியா :)
''என்னைப் போலவே என் பையனும் அரசியல்வாதியா வருவான்னு எப்படிச் சொல்றீங்க ?''
''நியாயம் தவறிய பாண்டியனின் கொடும்பாவியை கண்ணகி எரிக்காமல் ,மதுரையை எரித்தது எப்படி நியாயமாகும்னு கேட்கிறானே !''
ஐம்புலனும் போனால் ஆம்புலன்ஸ் :)
''ஐம்புலனை அடக்கினாரே ,அவருக்கு ஞானம் வந்ததா ?''
''ஊஹும் ,தூக்கிட்டுப் போக ஆம்புலன்ஸ் தான் வந்தது !''
ஒண்ணு கொடுத்தா போதுமா ?இன்னொண்ணு :)
'' தொழில் தொடங்க ,நீங்க கொடுத்த பெட்டிசனுக்கு பதிலே இல்லையேன்னு மந்திரிகிட்டே கேட்டதுக்கு என்ன சொன்னார் ?''
''பெட்டிசன் வந்திருச்சு ,பெட்டி வரலையேன்னு கேட்கிறார் !''
பொண்ணு பிடிக்கலைன்னு எப்போ சொல்லணும் :)
''விடிஞ்சா உங்களுக்கு அறுபதாம் கல்யாணம் ,ஏன் சோகமாவே இருக்கீங்க ?''
''பொண்ணு பிடிச்சிருக்கான்னு இப்பக்கூட யாரும் கேட்க மாட்டேங்கிறாங்களே !''
ஒட்டாக் காதல் என்பது இதுதானா ?
தழுவவந்த பனித்துளியை
நழுவவிட்டது தாமரைமுகம்
தாமரை இலைத் துளி !

மொபைல்வாசிகள், தமிழ்மண வாக்களிக்க இதோ லிங்க் ....http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1468409
|
|
Tweet |
ஐயா பொண்ணு பிடிக்கலைனு தப்பிக்க பார்க்கிறாரோ....
ReplyDeleteஇனிமேல் தப்பிக்க முடியுமா ஜி :)
Deletetha.ma.3
ReplyDeleteநாமம் போடாமல் த ம மூன்றை அளித்தமைக்கு நன்றி :)
Deleteநாட்டு நடப்பைப் பார்த்தால் பெண்ணிடம் மாப்பிள்ளை பிடித்து இருக்கா என்று
ReplyDeleteமாப்பிள்ளை வீட்டார் நேரிடையாகவே கேட்டு உறுதி செய்து கொள்ள வேண்டும் போல் இருக்கிறது.
பையன் வீட்டார் ஒவ்வொரு பெண்ணாக ஆழம் பார்பதைத் தவிர்க்க ,நேரிடையாய் கேட்டு விடுவதே மேல் :)
Deleteஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல... சோதனை மேல் சோதனை போதுமடா சாமி...!
ReplyDelete‘நெருப்பில் யாரை எரிக்க வேண்டும் என்று அக்கினி தேவன் கேட்கின்றான். கண்ணகி சிலரைத் தவிர்த்து மாநகரை அழிக்கச் சொல்கிறாள்...?! தீயே உனக்கொரு நாள் தீ மூட்டிப் பாரோமோ...? நடக்கும் என்பார் நடக்காது...!’
அதன் பிறகுதான் அமரர் ஊர்த்தி வந்தததோ...?!
சி. பி. ஐ. பெட்டி படுக்கையோட ரெய்டுக்கு வந்துட்டாங்களாம்...!
‘கல்யாணமாம் கல்யாணம் அறுபதாம் கல்யாணம் கருத்த கூந்தல் நரைத்த பின்னும் காதல் பேசும் நாலு கண்கள் கல்யாணமாம் கல்யாணம்’
பிடிக்கலைன்னா ஒதுங்கிக்க வேண்டியதுதானே... நீதான் ஓவியமா...?!
த.ம. +1
ஆதாரை ன்வேண்டாம் என்று சொன்னவர்கள் ,இப்போது இந்த பாடு படுத்துகிறார்கள் :)
Deleteஅக்கினிக்குத் தெரியுமா நல்லவனும் ,தீயவனும் என்று :)
இரண்டுமே இணைந்தே வந்தது :)
அதைப் பார்த்ததும் நெஞ்சு வலியென்று படுத்து விட்டாரே:)
மீசை நரைத்தாலும் ஆசை விட வில்லையே :)
இல்லை ஓவியாவா :)
பெண் பிடிச்சுருக்கான்னு எப்பவும் கேட்க மாட்டாங்க போல! :)
ReplyDeleteரசித்தேன்.
த.ம. ஐந்தாம் வாக்கு.
நல்ல வேளை ,முதலிரவுக்கு ஏற்பாடு செய்யச் சொல்லவில்லை :)
Deleteரசித்தேன் நண்பரே
ReplyDeleteதம =1
ஆம்புலன்ஸ் வந்ததைக் கூடவா :)
Deleteஅப்பயும் கேக்கலியா
ReplyDeleteஎண்பதில் கேட்பார்களோ :)
Deleteபதிவெழுதுவோர் மின்னஞ்சல் வைத்திருப்போருக்கும் ஆதார் அவசியம் எனக்கூறினாலும் வியப்பில்லை. 😃😃
ReplyDeleteஎதிராக எழுதுவோரைப் பிடித்து உள்ளே தள்ளுவார்களோ ?நம் கணக்கை லாக் செய்து விடுவார்களா :)
Delete60 திலுமா...ஹஹஹஹ்ஹ்
ReplyDeleteஅனைத்தும் ரசித்தோம் ஜி
ஐம்பதிலும் ஆசை வரும் ,அறுபதில் போய் விடுமா :)
Deleteஅனைத்தையும் ரசித்தேன் ஜி.
ReplyDeleteநம்ம ஊரை கண்ணகி எரித்தது நியாயமா ஜி :)
Deleteபெண்பிடிச்சிருக்கான்னு கேட்பது இருக்கட்டும் பெண்ணுக்குப் பிடிச்சிருக்கான்னு கேட்கிறார்களா
ReplyDeleteஇதெல்லாம் ஆதார் கார்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களின் வேலை
நெருப்பில் எரியக் கூடாதவர்களும் இருந்தனரே
ஐம்புலன்களும் அடங்கினால் தூக்கிக் கொண்டு போய் விடுவார்களே
ஆணாதிக்க சமூகத்தில் எங்கே கேட்கிறார்கள் :)
Deleteஆளும் கட்சியானவுடன் அது மறந்துவிடுகிறதே :)
அதே அதே :)
தேவையா இது :)
ஐம்புலனை அடக்க
ReplyDeleteஆம்புலன்ஸ் வந்ததைப் படிக்க
அடக்க முடியாத சிரிப்பு வந்தது
வாழ்த்துக்களுடன்...
அடக்கியவர் அடக்கமானது தான் சோகம் இல்லையா ஜி :)
Deletetha.ma 11
ReplyDeleteசிறிய இடைவெளிக்கு பின் வந்த த ம 1 1 க்கு நன்றி :)
Deleteஅனைத்துக்கும் ஆதார் வந்துவிடும்
ReplyDeleteதொல்லைக்கு உள்ளாகும் மக்களுக்கு ஏதாவது நல்லது நடக்குமா :)
Delete60ல் கேட்டால் ? பிடிச்சிருகுனு யார் சொல்லுவார்!
ReplyDeleteஇருபதில் பிடித்தது அறுபதில் கசந்து விடுமா :)
Delete