13 August 2017

I LOVE YOU...சுருக்கமாய் சொன்னதால் வந்த வினை :)

இதைத் தள்ளி யாராவது பார்த்து இருக்கீங்களா :)            
           ''செல்ப்  எடுக்கலே ,வண்டியை தள்ளி விடுங்கன்னு டிரைவர் கூப்பிட்டும் யாருமே போகலையா ,ஏன் ?''
             ''அவர் ஓட்டுறது ரோடு ரோலர் ஆச்சே !''

நடுவர் இப்படியா கோபப்  படுவது  :) 
              ''பட்டிமன்ற நடுவர் ரொம்ப முன் கோபக்காரர்  போலிருக்கா ,ஏன்?''

             ''மணி  அடிச்ச பிறகும்  பேசிக்கிட்டு இருந்தவர் மேலே ,மணியை தூக்கி எறிஞ்சுட்டாரே !''

எப்படி நம்ம வில்லேஜ் விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு  :)
        ''சூப்பர் ஐடியாவா இருக்கே ,ஓட்டுறவர் பெயர் என்னவாம் ?''
          ''மயில் வாகனன் !''

ஆணைவிட பெண்ணுக்கு 'அது 'எட்டு மடங்காமே  :)
       ''என்னங்க ,சாணக்கியரின் அர்த்தசாஸ்திரத்தை ஆர்வமா படிக்க ஆரம்பித்து ,முதல் அத்தியாயத்தோட மூடிட்டீங்களே,ஏன் ?''
      ''ஆணைவிட பெண்ணுக்கு பசி இரண்டு மடங்கு ,அறிவு நான்கு மடங்கு ,தைரியம் நான்கு மடங்கு ,காமம் எட்டு மடங்குங்கிறதைப் படித்ததும் போதும்னு ஆயிடுச்சே !''

அஞ்சு .பத்மாவுக்குப் பின்னாலே பையன் அலைஞ்சா ...:)
        ''அப்பனுக்குப் பையன் தப்பாமப் பொறந்து இருக்கானா ,எப்படி ?''
        ''பக்கத்து வீட்டுப் பொண்ணுங்க அஞ்சு ,பத்துக்குப் பின்னாடி பையன் அலையிறான் ,அப்பன்காரன் கையிலே காசில்லாமே அஞ்சு பத்துக்கு அலையிறாரே !''

I LOVE YOU...சுருக்கமாய் சொன்னதால் வந்த வினை :)
   பல பேரின் காதல் ...கல்யாணத்தில் முடியாமல் இழு இழு என்று 
   இழுத்துக் கொண்டே இருக்கக் காரணம் ...
   முதலில் காதலை I L U [இழு ]என்று SMSசெய்ததாலா ?

32 comments:

  1. அந்த விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு அருமை ஆனால் அதை ஒட்டி செல்பவர் உங்களை மாதிரி இருக்கிறாரே பகவான் ஜீ மூஞ்சியை மறைத்து பெயரை மாற்றினால் அது நீங்கள் என்பது தெரியாமல் போகுமா என்ன?

    ReplyDelete
    Replies
    1. ஆஹா ,உங்க கற்பனையே எனக்கு இவ்வளவு சந்தோசத்தைத் தருதே ,ஆனால் கொடுப்பினை இல்லையே ஜி :)

      Delete
  2. TM 1.....அது எட்டு மடங்கு ,எந்த நாட்டு பொண்ணுக்கு?

    ReplyDelete
    Replies
    1. சாணக்கியர் என்ன அமெரிக்காவிலா பிறந்து வாழ்ந்து உணர்ந்து எழுதினார் :)

      Delete
  3. அப்ப தள்ளி ஓட வேண்டியதுதான்...!

    உன் மணியான பேச்சை கேட்டு... நா பேச மாட்டேன்... இனி மணிதான் பேசும்...!

    பேசு முருகன்தானே... வள்ளி... தெய்வாணையை ஏற்றிக்கொண்டு... வழிவிடு முருகன் கோவிலுக்குப் போகிறாரோ...?!

    ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டுன்னு தெரிஞ்சுக்கங்க...!

    பேபி அஞ்சுக்காக ஏன் இந்த ஓலங்கள்...!

    1 4 3க்கு 1 4 4 தடை போட்டாச்சா...?!

    த.ம. 2



    ReplyDelete
    Replies
    1. தள்ளத்தான் முடியாது ,ஓடலாம் :)

      மணியின் பேச்சில் இரத்தம் வழிந்தோடும் போலிருக்கே :)

      இவருக்கு இனிமேல் எங்கே வழி கிடைக்கப் போவுது :)

      இவரு பெரிய அறிவாளி ,சொல்ல வந்துட்டாரு :)

      அஞ்சுவை இப்போ பார்க்க நீங்கதான் அஞ்சுவீங்க :)

      1 2 3 ஜூட் ,ஓடப் போறாங்களே :)

      Delete
  4. வில்லேஜ் விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு :)//
    அருமை

    ReplyDelete
    Replies
    1. ஆபத்தான பயணம் ,அவருக்கு ரிஸ்க் எடுக்கிறது ரஸ்க் சாப்பிடுற மாதிரி போலிருக்கே :)

      Delete
  5. மயில்வாகனன்! பொருத்தம்தான். ரெண்டு பொண்டாட்டிக்காரர் ஆச்சே! ரோட் ரோலர் நின்றால் கோவில் யானையைத்தான் தள்ளிவிடக் கூப்பிடவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. உண்மையில் அவர்கள் சக்களத்திகளா என்று தெரியவில்லை :)
      யானைக் கூட இதுவரை தள்ளியதா தெரியலே :)

      Delete
  6. எப்படி நம்ம வில்லேஜ் விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு :)//

    தமிழனாக்கும்!

    ReplyDelete
    Replies
    1. விட்டால் நாம எங்கேயோ போய் விடுவோம்னு தான் மற்றவர்கள் அடக்குகிறார்கள் :)

      Delete
  7. டி.வி.எஸ். கம்பெனிக்காரனுக்கே இந்த யோசனை வரலையே...

    ReplyDelete
    Replies
    1. இனியாவது இந்த மாடல் போடுவார்களா :)

      Delete
  8. ரோட் ரோலர் ஹஹஹஹஹ்

    மயில் வாகனன்!! ரொம்பவே ரசிக்க வைத்தார்! அந்த மயில்வாகனன் ஜோக்காளியோ என்ற ஒரு டவுட்டு!!
    இப்ப ஜோக்காளிக்கு ஒரு கன்ஃப்யூஷன்...இப்படி ரெண்டு பேர்னு இவைங்க நம்மள போட்டு வாங்குறாங்களா இல்லை நெசமாவே விஞ்ஞானினு சொல்லி பாராட்டறாங்களானு ....ஹிஹிஹி என்று சிரிப்பது கேட்கிறது!!!

    அனைத்தும் ரசித்தோம் ஜி!!

    ReplyDelete
    Replies
    1. இம்பூட்டு அறிவிருந்தா ரெண்டைக் கட்டிப்பதில் தவறில்லை ,எனக்கு ரெண்டுமே இல்லையே ஜி !

      Delete
  9. Replies
    1. நடுவர் செய்த நல்ல காரியத்தையுமா :)

      Delete
  10. கடைசி ஜோக் யோசிக்க வைக்குது

    ReplyDelete
    Replies
    1. இப்போ எங்கே SMS காதல் .அதெல்லாம் மலையேறிப் போச்சே :)

      Delete
  11. எட்டு மடங்கு த ம 10

    ReplyDelete
    Replies
    1. சொன்னது சாணக்கியர் நம்பித்தானே ஆகணும் அய்யா :)

      Delete
  12. சுறுக்கமா சொன்னால் இந்தக் கதிதானா....!!!

    ReplyDelete
    Replies
    1. காதலுக்கு ஏது செவ்வாய் தோஷம் ,ஓடிப் போய் தாலி கட்டிக்க வேண்டியதுதானே :)

      Delete
  13. மயில்வாகனன் உட்பட அனைத்தும்ரசனை

    ReplyDelete
    Replies
    1. மனமே முருகனின் மயில்வாகனம் பாட்டு நினைவுக்கு வருதா :)

      Delete
  14. அனைத்தையும் இரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. மயில்வாகனன் வாகனமும் ஒரு விதத்தில் ரோட் ரோலர்தானா ஜி :)

      Delete
  15. அனைத்தும் அருமையான ஜோக்குகள்

    ReplyDelete
    Replies
    1. சாணக்கியன் சொல் உண்மைதானே ஜி :)

      Delete
  16. மயில் வாகனன் - நல்ல பெயர்!

    ரசித்தேன். த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. இவருக்கு பொருத்தமான பெயர்தானே ஜி :)

      Delete