2 August 2017

மிஸ்ஸை சரியாய் கணக்கு போட்டிருக்கானே :)

வரதட்சணை  தராவிட்டால் இப்படியுமா :)            
             ''உங்க மனைவியை ஏன் உண்மையான  'தர்ம' பத்தினின்னு சொல்றீங்க ?''
             ''அவங்கப்பா ,பொண்ணைத் தவிர வேறெதையும் தர மாட்டேன்னு கையை விரிச்சிட்டாரே !'' 

கறக்கத்  தெரிந்தவனே கெட்டிக்காரன் :) 
              ''கடன்காரங்ககிட்டே இருந்து அசலைக் கூட 'கறந்து 'வாங்க முடியலேன்னு ,பாங்கை இழுத்து பூட்டிட்டு போயிடுவீங்களா ?''

              ''ஏன் இப்படி கேட்குறீங்க ?''
              ''நான் மாட்டு லோன் கேட்டா ,பால் கறக்கத் தெரியுமான்னு கேட்குறீங்களே !''

நாய் ,காலைக் கடிக்காமல் விடுமா :)
          ''நான் எந்த தொழிலைச் செய்தாலும் கையைக் கடிக்கிறது,அடுத்து என்ன செய்றதுன்னு புரியலே !''
           ''நாய் வியாபாரம் பண்ணிப் பாருங்க !''

மிஸ்ஸை சரியாய் கணக்கு போட்டிருக்கானே :)
          ''இந்த காசை அமிலத்தில் போட்டா ,கரைஞ்சிரும்னு எப்படி சரியா கண்டுபிடிச்சே ?''
         '' செல்லாத நாலணாவைப் பார்த்ததுமே கண்டுபிடிச்சிட்டேன் ,மேடம் !''

ஒருவனுக்கு ஒருத்தி ..போதும் /போதாது /அதுவும் எதுக்கு :)
           கிருஷ்ணர் பாமா ,ருக்மணியை மணந்திருந்தாலும் ...
           'ஒருவனுக்கு ஒருத்தி 'நமது பண்பாடு என்பதால் 
           கிருஷ்ணாயில் ,பாமாயில் என்று மட்டுமே  
           பெயர் வைத்து நம் மக்கள் போற்றுகிறார்கள் !


மொபைல்வாசிகள், தமிழ்மண வாக்களிக்க  இதோ லிங்க் ..http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1468013

32 comments:

  1. தர்மபத்தினிக்கு இப்படியும் ஒரு அர்த்தமா? ஹா... ஹா... ஹா...

    ரசித்தேன் ஜி.

    ReplyDelete
    Replies
    1. உண்மையை ஆராய்ந்துதான் கண்டுபிடிக்க வேண்டியிருக்கு :)

      Delete
  2. தர்ம பத்தினி யையும் ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. அவர் வீட்டுக்காரர் கோபித்துக் கொள்ளப் போகிறார் :)

      Delete
  3. Replies
    1. அமிலத்தில் கரையும் காசையும் தானே :)

      Delete
  4. பொன்னை வைத்த இடத்தினிலே பூவை வைத்து பார்ப்பதற்கு அப்பனன்றி யாருமுண்டோ...?!

    நீங்க கறார் பேர்வழியா...?!

    கை கடிகாரம் வித்து ஒரு கை பார்த்துவிட வேண்டியதுதானே...!

    செல்லாக் காசாக்கிட்டீங்களே...!

    வள்ளியகுட்டி... தெய்வாணைக்கிட்ட முறையிட வேண்டியதுதானே...!

    த.ம. 4

    ReplyDelete
    Replies
    1. ஆனால் இது மருமகனுக்கு பிடிக்க வில்லையே :)

      அதுக்காக வாங்கின கடனைக் கட்டாமல் இருக்க மாட்டேன் :)

      பெண்டாட்டி கால் மெட்டி மட்டும்தான் பாக்கி :)

      அதனால் தானே கரைக்க நினைத்தது :)

      ஒளியத் தெரியாம சக்களத்தி வீட்டிலேயா :)

      Delete
  5. Replies
    1. உங்க பியேவியரை ரசித்தேன் ஜி :)

      Delete
  6. கிருஷ்ணாயில், பாமாயில் ஸூப்பர் ஜி

    ReplyDelete
    Replies
    1. ரேசன்லே கிடைத்த இரண்டுமே கிடைக்காது போலிருக்கே ஜி :)

      Delete
  7. ஹாஹா... ரசித்தேன்.

    த.ம. பின்னர்.....

    ReplyDelete
    Replies
    1. வங்கியில் கேட்டது சரிதானே :)

      Delete
  8. நாய் கடி த ம 7

    ReplyDelete
    Replies
    1. த ம 6 என்றால் தமாஷ் ஆகியிருக்கும் :)

      Delete
  9. பாமாயில் ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. குடித்தாலும் தப்பில்லை :)

      Delete
  10. வரதட்சணை தராவிட்டால் இப்படியுமா :)//

    வரதட்சணை கேட்காமல் விட்டாரே!!!

    ReplyDelete
    Replies
    1. தர்ம துரை என்றே இவரைச் சொல்லலாமோ :)

      Delete
  11. தர்மபத்தினி நன்று மற்றவை மிக நன்று

    ReplyDelete
    Replies
    1. த.ம. வாக்களித்தால் ஏற்கனவே அளிக்கப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது. ஏதோ கோளாறு

      Delete
    2. அடிக்கடி இப்படி ஆகிறதே ,இது தர்மமா என்று தமிழ் மண நிர்வாகம் தான் சொல்லணும் :)

      Delete
    3. இன்னொன்றையும் சொல்லணும் ,தமிழ்மண வாக்கு எட்டு விழுந்தாலும் ஏழு வாக்கு என்றே அடம் பிடிக்கிறது :)

      Delete
  12. தர்மமாய் வந்தவர் என்பதாலா
    செருப்பு வியாபாரம்காலைக் கடிக்கலாம்
    பலமுறை அமிலம் குடித்த காசு
    எல்லோரும் பரமாத்வாவைச் சுத்தும் ஜீவாத்மாக்கள் ஒருவன் ஒருத்தி என்னும் பந்தத்தில் அடக்க முடியுமா

    ReplyDelete
    Replies
    1. சந்தோஷப் படணும் ,இதுவும் வாய்க்கப் பெறாதவர்கள் இருக்கிறார்களே :)
      பாம்பும் அப்படித்தான் :)
      பளிச் என்று ஆகியிருக்குமே :)
      மனுசனுக்கு பொருந்துவது கிருஷ்ணருக்கு பொருந்தாதா :)

      Delete
  13. தர்மபத்னி ஜோக் நல்லாருக்கு. ஆமா, நேத்திக்கே த.ம போட்டேனே? இன்னைக்கும் ஏத்துக்குது? நேத்துப்போட்ட பின்னூட்டம் எங்க?

    ReplyDelete
    Replies
    1. தர்மபத்தினி என்று சொல்ல இன்னொரு காரணம் ,திருமணத்தை கன்னிகாதானம் என்றுதானே சொல்வார்கள் :)

      வரவர தமிழ் மணத்துக்கு கூட்டல் கணக்கு கூடத் தெரியவில்லை ,இப்போதே பாருங்கள் ,இந்த பதிவுக்கு விழுந்த வாக்குகள் பதினொன்று ,ஆனால் ..பத்து என்றே பறைசாற்றிக் கொண்டிருக்கிறது !அசோகன் ஜி அவர்களின் வாக்கு நேற்று வரை போடப் பட்டதாக பொய் சொன்னதாம் ,இன்று விழுந்துள்ளதே :)

      Delete
  14. த.ம.வாக்கு வெற்றி

    ReplyDelete
    Replies
    1. உங்களின் தொடர் முயற்சிக்கு மிக்க நன்றி ஜி :)

      Delete
  15. பால் கறப்பு லோன் நல்ல பகிடி.
    மற்றவைகளும் இரசித்தேன் சகோதரா.
    தமிழ் மணம் - 15
    https://kovaikkothai.wordpress.com/

    ReplyDelete
    Replies
    1. உங்களிடம் இருந்து நானும் பதிவு போட்ட இரண்டு நாளில் தம வாக்கைக் 'கறக்க 'நினைக்கிறேன் முடியலியே :)

      Delete