29 August 2017

படத்துக்கு முக்கியம் கதையா ,சதையா :)

மனைவி சொன்னது பொய்த்துப் போகும் :)
                ''டாக்டர், என் சாவு டாஸ்மாக்கில்தான்னு என் மனைவி அடிக்கடி சொல்றா !''
                  ''கவலையை விடுங்க ,இங்கே வந்த பிறகு அப்படியெல்லாம் நடக்காதுன்னு கொஞ்ச நாள்லே புரிஞ்சிக்குவாங்க ! ''

பாலை கறப்பதே பாவம் தானே :)             
             ''சத்தியமா  சொல்றேன் , பாலில் தண்ணீர் கலப்பது பாவம்னு நினைக்கிறவன்  நான் ,என்னை நம்புங்க !''
              ''கன்றுக் குட்டி ஒரு நிமிஷம்  பால் குடிக்கட்டும்னு , தாய்ப் பசுகிட்ட விடாத உன்னை எப்படி நம்புறது ?''

தோசை விலை நாற்பது ,வெங்காய தோசை விலை .......:)                       
             ''உங்க ஹோட்டலில் நுழைந்ததும் வயிற்றைக் கலக்குதே !''
             ''உங்களை யார் வெங்காய தோசை விலையை பார்க்கச் சொன்னது ?''

படத்துக்கு முக்கியம் கதையா ,சதையா :)
              ''உங்க பட ஹீரோயின்  ,கதைக்கு தேவைப் பட்டதால் கவர்ச்சியா நடித்தேன்னு சொல்லி இருக்காங்களே ...அதைப் பற்றி .....!''
              ''ரெண்டு மடங்கு  சம்பளம் வாங்கிக்காம  இப்படிச் சொல்லியிருந்தால்  நம்பலாம் !''
'இது 'க்கும் டாட் 'காமா 'வந்திருக்கு :)
             ''என்னது பிச்சைக்காரன் டாட் காமா ?''
             ''ஆமா ...ஒரு இ மெயில் அனுப்பினாப் போதும் ,மீந்து போனதை வந்து எடுத்துட்டு போயிடுவான் !''

அதுக்குத்தானா இந்த கொண்டாட்டம் :)
               அமாவாசை வந்தாலே காக்கைகளுக்கு கொண்டாட்டமாய்  இருக்கும்  ....
               தானும் கருப்பு அமாவாசையும் கருப்பு என்பதால் அல்ல !
               எச்சில் கையால் காக்கையை விரட்டாதவன் கூட ...
               அன்று மட்டும் முன்னோர்களை நினைத்து காக்கைக்கு முதல் படையல் வைப்பதால் !

36 comments:

  1. ''கன்றுக் குட்டி ஒரு நிமிஷம் பால் குடிக்கட்டும்னு , தாய்ப் பசுகிட்ட விடாத உன்னை எப்படி நம்புறது ?''

    சரியான கேள்விதான்

    ReplyDelete
    Replies
    1. பால் சுரப்பது கன்றுக்காகவா .மனிதனுக்காகவா :)

      Delete
  2. பிச்சைக்காரன்.காம்
    ஸூப்பர் ஜி

    ReplyDelete
    Replies
    1. டிஜிட்டல் இந்தியான்னா என்னான்னு தெரியுதா :)

      Delete

  3. டாஸ்மாக்கால் சாவுகிறதைவிட டாக்டர்களின் கவனக்குறைவால் இறப்பவர்கள் அதிகமே அதற்கு அமெரிக்காவும் விதிவிலக்கு அல்ல

    ReplyDelete
    Replies
    1. அங்கேயும் அப்படித்தானா :)

      Delete
  4. TM 2நடிகைகளுக்கு கொடுக்கும் பணம் அதிகரிக்க அதிகரிக்க அவர்கள் அணியும் ஆடைகளின் அளவு குறையும் ஆனால் அதே நேரத்தில் அதை பார்க்கும் ரசிகர்களின் பிரஷர் கூடும் அவ்வளவுதானுங்க

    ReplyDelete
    Replies
    1. ரசிகர்களின் பிரஷர் கூடும் அளவுக்கு தயாரிப்பாளரின் கல்லாவும் நிறையும்தானே :)

      Delete
  5. உன் சாவு என்னோடுதான்...! கவலைப்படாதே சகோதரா...!

    அதனால்தான் தண்ணியில பாலைக் கலந்துடுறேன்...!

    அதுக்கு ஜி.எஸ்.டி.ய பார்த்ததும் இனி கையேந்திபவன்தான்...!

    ரசிகர் எதை விரும்பிறாங்களோ... அதைக் காட்டி நடிப்பை நாம வெளிப்படுத்துவதுதானே முறை... என்ன முறைக்கிறிங்க...! என்னோட முறை மாமாட்ட சொல்லிடுவேன்...!

    இப்ப போனால் போகட்டும் போடாங்கிறான்னே...! மீந்து போனால் போகட்டும் போடாங்கிறான்னே...!

    காக்கை குருவி எங்கள் ஜாதியல்லவா...அதான்?!

    த.ம. +1



    ReplyDelete
    Replies
    1. சீக்கிரம் கருமாதிதானா ?கருமாரி கூட ரட்சிக்க மாட்டாளா :)

      உங்க நல்லெண்ணம் யாருக்கு வரும் :)

      சாப்பாட்டிலா இப்படி வரி அள்ளிப் போடுவது :)

      நடிக்கவா உங்களைப் போட்டாங்க :)

      வேஸ்ட் ஆனாலும் பரவாயில்லை ,இனிமேல் அனுப்பாதீங்க :)

      குரங்கு அல்லவா நம் பித்ரு :)

      Delete
  6. 'இது 'க்கும் டாட் 'காமா 'வந்திருக்கு :)//

    ‘அது’க்கு எத்தனை .காம் இருக்கு! இதுக்கு இருப்பது தப்பே இல்லை!!

    ReplyDelete
    Replies
    1. அறிவுப்பசி ஜி கெதியா மாத்துங்கோ.. உங்கட கொமெண்ட்ஸ் பொக்ஸ் தேம்ஸ்க்குள் விழுந்திட்டுதுபோல.. தேடிக்கண்டுபிடிச்சுப் பூட்டுங்கோ:).

      Delete
    2. அதுக்கு உள்ள கிராக்கி இதுக்கு இருக்குமா :)

      Delete
    3. அறிவுப் பசி ,தீம் குளறுபடியால் கொமெண்ட் பாக்ஸ் காணாம போச்சுன்னு வருத்தத்தில் இருக்காரே :)

      Delete
  7. நல்லாருக்கு. ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. கன்று குட்டியின் பாலை மனுசன் குடிப்பது நல்லாவாயிருக்கு :)

      Delete
  8. அனைத்தும் ரசித்தோம் ஜி!!!

    ReplyDelete
    Replies
    1. இருக்கிறவனுக்கு நிலா சோறு ,போனவனுக்கு அமாவாசை சோறு ,சரிதானே ஜி :)

      Delete
  9. என்ன பகவான் ஜீ தலைப்பு ஒரு மாதிரி இருக்கு.. என்னமோ கஸ்டமா இருக்கு.. சரி விடுங்கோ அதை..

    பிச்சைக்காரன் டொட் கொம் சூப்பர் ஐடியா.. நேரம் மிச்சம் எல்லோ.. இருப்போரிடம் மட்டும் போகலாம் தேவையில்லாமல் வீடு வீடா ஏறி இறங்கத் தேவையில்லை:).

    அமாவாசை கரீட்டூஊஊஊஊஊ... இங்கு ஒரு வசனம் நினைவுக்கு வருது...

    “பிச்சை போடுவதுகூடத் தப்புத்தான்..
    புண்ணியம் கிடைக்கும் என எண்ணிப் போட்டால்”

    ReplyDelete
    Replies
    1. சுருங்கச் சொல்லி புரிய வைக்கணும்னு எங்க தெருவள்ளுவர் சொல்லி இருக்கார் ,அதான் இந்த தலைப்பு :)

      இதை வாங்கிக்கிட்டு நமக்கே பிசசைக்காரன் காசு பிச்சை போடவும் செய்யலாம் :)

      புண்ணியமா ,எண்ணைக் கொப்பறையில் யாரைத் தள்ளுவது :)

      Delete
  10. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் டொல்ல மறந்திட்டேன்ன்:) பகவான் ஜீ என் மகுடத்தைப் புடுங்கிடக்குடா அவதிப்பட்டு கர்ர்ர்:)..

    http://fc03.deviantart.net/fs23/f/2007/343/c/e/cat_with_gun_by_Resident_evil_nerd.jpg

    ReplyDelete
    Replies
    1. சதைதான்.....மறுப்பவர்கள் ஒரு கிழவியை கதாநாயகியா போட்டு படம் எடுங்கள் பார்ப்போம்....

      Delete
    2. ஹையோ பகவான் ஜீ ஓடிவாங்கோ மீயக் காப்பாத்துங்கோ.. மீ இங்க இருக்கேன்ன் இங்க.. ஹையோ மேசைக்குக் கிழ:).. வலிப்போக்கன் என்னோடு சண்டைக்கு வாறார்ர்ர் கர்ர்ர்:).

      //மறுப்பவர்கள் ஒரு கிழவியை கதாநாயகியா போட்டு படம் எடுங்கள் பார்ப்போம்....///
      இதுபற்றி நான் பேசவே இல்லயே... அந்தச் சொல்தான் என்னவோ பண்ணுது என்றேன்ன்.. கதையா? கதாநாயகியா என்று போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.. அப்படித்தான் நினைச்சுச் சொன்னேன்.. அதுக்காக இப்பூடியா மிரட்டுவது ஒரு சுவீட் 16 பொண்ணை ?:).. விடுங்கோ மீ தேம்ஸ்க்குப் போறேன்ன்ன்:).

      Delete
    3. நானா மகுடத்தை பிடுங்கிக்க மாட்டேன் ,48மணி நேரம் கழித்து அதுவா என் தலைக்கு வந்து விடுமே :)

      Delete
    4. நீங்கதான் பேசவே இல்லையே ,மூளிநநு அவர் சொன்னால் நீங்க ஏன் மூக்கைத் தொட்டுப் பார்த்துக்கிறீங்க :)

      Delete
    5. நீங்க சொல்றது சரிதான் நூறாண்டு கண்ட சினிமாவில் பாட்டியை மையமா வைத்து 'பாட்டிச் சொல்லைத் தட்டாதே 'படம் மட்டும்தான் வந்துள்ளது :)

      Delete
    6. ///Bagawanjee KATue Aug 29, 07:31:00 pm
      நீங்கதான் பேசவே இல்லையே ,மூளிநநு அவர் சொன்னால் நீங்க ஏன் மூக்கைத் தொட்டுப் பார்த்துக்கிறீங்க :)///

      ஓ அதுவோ சங்கதி?:) ஹா ஹா ஹா அவர் எனக்கு ரிப்ளை எனும் பட்டினைக் கிள்க்கிப் போட்டதனால் மீ பயந்துட்டேன்ன்ன்:)).

      Delete
  11. ​நம்பிக்கையான டாக்டர்!

    பிச்சைக்காரன்.காம்! ஹா... ஹா... ஹா...​

    ReplyDelete
    Replies
    1. கைராசி டாக்டர் என்று மாமியாரை இங்கே கொண்டுவந்து சேர்ப்பார்களாம் மருமகள்மார்கள் :)

      காலத்தின் தேவைதானே இது:)

      Delete
  12. Replies
    1. தலைப்பும் தானே ஜி :)

      Delete
  13. அனைத்தும் ரசித்தேன்.

    த.ம. 12-ஆம் வாக்கு.

    ReplyDelete
    Replies
    1. பால் கறப்பது பாவமா குடிப்பது பாவமா ,ஜி :)

      Delete
  14. விஷயம் தெர்ரிந்த டாக்டர்
    வைக்கோல் கன்றுக்குட்டியைக் காட்டி பால் கறப்பவர்கள்....!
    எதையும் சாப்பிடும் முன்னேயா
    சதைக்காகவே பல படங்களும் ஓடுதாமே
    நல்ல முன்னேற்றம்
    தினமும்முன்னோர்களை நினைப்பவர் இருந்தால் இன்னும் கொண்டாட்டம்தானே

    ReplyDelete
    Replies
    1. கதை எப்படி முடிப்பதென்றா :)
      ஆறறிவு இப்படி ஏமாற்றலாமா :)
      விலையே பயமுறுத்துதே :)
      கதை பண்ணத் தெரியாதவர்களுக்கு வேற வழி :)
      தேவை தான் எல்லாவற்றையும் கண்டு பிடிக்குமே :)
      கொண்டாட முடியவில்லையே :)

      Delete
  15. டிஜிட்டல் பிச்சையோ

    ReplyDelete