28 August 2017

தோழியின் அருமையான யோசனை :)

பிஸினஸ் டெக்னிக் தெரியாதவர் :)            
              ''லட்சக்கணக்கான போட்டோ எடுத்த அனுபவம் இருந்தும் என்ன பிரயோசனம் .....என்  ஸ்டுடியோவுக்கு  யாருமே  வர மாட்டேங்கிறாங்க ..என்ன காரணமாயிருக்கும் ?''
               ''ஆதார் கார்டு ஸ்பெசலிஸ்ட் என்ற வாசகம் போர்டிலே இருக்கே ,எவன் வருவான் ?''

பிஸினஸ் டெக்னிக் தெரிந்தவர்:)  
         ''HALLMARK ன்னு போட்டிருக்கு ,ஆனா  நகைங்க கறுத்துப் போச்சே !''
         ''கடையிலே போய் கேட்க வேண்டியது தானே ?''
         ''நல்லாப் பாருங்க , HALF MASS ன்னுதான்  போட்டு இருக்கோம்னு சொல்றாங்க !''

தோழியின் அருமையான யோசனை :)         
            '' ஒண்ணு ரெண்டுன்னு எண்ணினா, கோபம் போயிடும்னு நீ சொன்னது சரிதாண்டி !''
           ''பத்து வரைக்கும் எண்ணியிருப்பியா?''
           ''எட்டாவது அடிக்கே, என் வீட்டுக்காரர் மயங்கி விழுந்துட்டாரே!''

கோர்ட்டுக்கு போனாலும் அவர் வாதம் செல்லாது :)    
              '' கிழிஞ்சிருக்கிற  என் சட்டை ,பனியனைப்  பார்த்தாலே ,என் மனைவியோட கோபம் உனக்கு புரிந்து இருக்கணுமே !''
             ''அட நீ வேற ,நான் படுற ஊமை அடியை எப்படி  காட்ட முடியும் ?'' 
மேஜர் ஆகாதவன் மேனேஜரா வந்தா, இப்படித்தான் :)             
             ''உங்க மேனேஜருக்கு நக்கல் ஜாஸ்தியா ,ஏன் ?''
            ''தலைக்கு மேலே வேலை இருக்குன்னு  லீவு கேட்டா ...ஹேர் கட் பண்ணிக்க பெர்மிஷனே போதுங்கிறாரே!''

திருமணம் வேண்டாம் என்ற தீர்க்கதரிசிகள் !
        குளிக்க ,துணி துவைக்க குடிநீரை பயன்படுத்தாதே என கணவன்மார்கள் சொன்னால் ...
        மனைவிமார்கள் கேட்கமாட்டார்கள் என்பதால்தான் ,
        பொதுநலம் விரும்பிய சில தலைவர்கள் திருமணமே வேண்டாம் என்றார்கள் போலும் !

27 comments:

  1. திருமணம் தானே வேண்டாம் என்றார்கள்:) மனைவி வேண்டாம் எனச் சொன்னார்களா யாராவது?:)..

    ReplyDelete
    Replies
    1. சிந்திக்க வைத்த கேள்விதான்.

      Delete
    2. நாலு பேருக்கு முன்னால் தாலி கட்டிக் கட்டப் பட்டவளே மனைவி ,இல்லையென்றால் சின்ன வீடு ,கீப்பு,வைப்புதானே :)

      Delete
    3. கேள்விக்கு பதில் சரிதானே ஜி :)

      Delete
    4. ஹா ஹா ஹா அது நான் மறைமுகமாகக் கேட்டிருந்தேன்.. ”மனைவி” என்பதைப் “பெண்”.. என மாத்திப் படிங்கோ:)...

      என்ன ஆச்சு பகவான் ஜி க்கு? ஆரும் சூனியக்கியவி:)யைக் கொண்டு சூனியம் வச்சிட்டினமோ புளொக்குக்கு...:) இப்பூடி தடுமாறுதே புளொக்.. போஸ்ட் போட... இரவில் கஸ்டம் எனில் இனி காலையில் ஒரு நேரத்தைப் பிக்ஸ்ட் ஆக்கிப் போடுங்கோ.

      Delete
    5. விடிவதற்குள் எப்படியும் போஸ்ட் வந்துடும் ,போஸ்ட் போடாமல் எனக்கு தூக்கம் வராதே :)

      Delete
  2. Replies
    1. நன்றி ஜி ,நேற்றைய பதிவுக்கு இந்த வாக்கு விழுந்திருந்தால் ட்ரெண்டே மாறியிருக்கும் :)

      Delete
  3. Replies
    1. கோபத்தைக் குறைக்க நல்ல யோசனை தானே இது :)

      Delete
  4. உன்னால்தான் இரகசியம் காக்கமுடியவில்லையே... உன்னை எப்படி நம்புவது...?

    ‘கால் மார்க்’ன்னு தானே... போட்டிருக்கு... அப்புறம் அப்படித்தான் இருக்கும்!

    அவரே போயிட்டாரு... இனி யாரிடம் கோபப்படுவது...!

    இந்த உள்குத்துதானே வேணாங்கிறது...!

    முடிசூடா மன்னருக்கு எதுக்கு லீவு...?!

    அடி வாங்க அவர்களுக்குத் துணிச்சல் இல்லை என்பது இதன் மூலம நிருபணம் ஆகியிருக்கிறது...!

    த.ம. 3

    ReplyDelete
    Replies
    1. ரகசிய ஆதார்னு சொல்லவில்லையே நாங்கள் :)

      அப்படி வேற இருக்கா :)

      கொன்ற மனைவிக்கு ஏழரையோ :)

      வேணாம்னு சொன்னா யார் விட்டா :)

      அப்படியும் சொல்லி மறுப்பாரா :)

      அந்த வகையில் நாம் ,எதையும் தாங்கும் இதயங்களோ :)

      Delete
  5. தோழியின் யோசனையா தெரியலையே..வஞ்சம் தீர்த்தது மாதிரியில தெரியுது....

    ReplyDelete
    Replies
    1. அவர் எண்ணச் சொன்னார் ,அடிக்கச் சொல்லலே :)

      Delete
  6. Replies
    1. உங்க நவரசத்துக்கு நன்றி அய்யா :)

      Delete
  7. ஆஹா ஆதார்கார்டின் மகிமையே மகிமை
    கண்டிஷன்ஸ் அப்ளை
    அடித்துக் கொன்றால்தான் கோபம்தீரும்
    மனைவி காவல் துறை சேர்ந்தவரா
    மானேஜர் வார்த்தை விளையாட்டில் பகவான் ஜியோ
    அடிக்க உதைக்க கணவன் மாரைப் பயன்படுத்தலாமா

    ReplyDelete
    Replies
    1. உருவமே தெரியலே ,ஆனால் அனைத்திலும் இணைக்கணுமாம் :)
      அதுவே ஏமாற்று தானே :)
      அப்படியே பாலோ பண்ணுங்க :)
      அப்படித்தான் இருக்கும் :)
      உடன்பிறப்பு தான் :)
      அதெல்லாம் அந்த காலம் :)

      Delete
  8. அருமை நண்பரே

    ReplyDelete
  9. ''எட்டாவது அடிக்கே, என் வீட்டுக்காரர் மயங்கி விழுந்துட்டாரே!''//

    எட்டு அடி அதிகம்!!

    ReplyDelete
    Replies
    1. எட்டாவது அதிசயம்னு இதை சொல்லலாமா :)

      Delete
  10. ஹால் மார்க் சரிதானே :)

    ReplyDelete
  11. ஜி திருமணம் தானே வேண்டாம்! லிவிங்க் டுகெதர்னு இருக்கே!! அப்புறம் என்ன..

    அனைத்தும் ரசித்தோம் ஜி!

    ReplyDelete
    Replies
    1. லிவிங்க் டுகெதர்கூட வேண்டாம் என்றதால்தான் அவர்கள் நல்ல தலைவர்கள் :)

      Delete
  12. பிசினஸ் டெக்னிக் செம்ம.. நம்க்கு பயன் படும் படி நாலு ஐந்து எடுத்து விடுங்க
    திருமணத்துக்கும் பெண்ணுக்கும் என்ன சம்பந்தம்?

    ReplyDelete
  13. ஆல்ப்ஸ் மலைக்கே சென்று பிஸினஸில் கொடி நாட்டிய உங்களுக்கு நான் சொல்லித் தரணுமா :)

    நல்ல வேளை தாலி கட்டினால் தான் மனைவியான்னு கேட்காம போனீங்க ;)

    ReplyDelete