22 August 2017

வீட்டு வேலைக்காரிக்குமா இந்த தொந்தரவு :)

              ''ஏண்டி அஞ்சலே ,அந்த ஆபீசர் வீட்டுக்கு வேலைக்கு போவதில்  இருந்து ஏன் நின்னுட்டே ?''
              ''சரியான நேரத்துக்கு வேலைக்கு வந்து போகணும்னு  , ஏதோ ஒரு மெசினில்   விரல் ரேகையை  வைக்கச் சொல்றாரே !''
பதவிக்கு தகுந்த மரியாதை வேண்டாமா :)
            ''பத்தாயிரம் ரூபாய் லஞ்சம்  வாங்கி பிடிபட்ட நீதிபதியை ,அவரோட மனைவியே விவாக ரத்து பண்ணிட்டாங்களாமே,ஏன் !''

         ''கேவலம் ஒரு பத்தாயிரம் ரூபாய் வாங்கியா மாட்டிக்கிறது என்று அவருக்கு வருத்தமாம் !''
   
 ஆஹா ,என்ன பொருத்தம் :)
         ''இத்தனை வருடமா  டார்வின் தியரி தப்புன்னு சொன்ன  உங்களை ஒரு படம் மாத்திடுச்சா ,அப்படியென்ன  படம் ?''
        ''இதோ ,இந்த படம்தான் !''
மாமியார் மேல் இம்புட்டு பாசமா :)
         ''கல்யாணம் ஆனதும் பிள்ளையைப் பெத்துக்கணும்னுஅவசரப் படுறீயே,ஏண்டி ?''
         ''பேரப்பிள்ளையே கண்ணாறப் பார்த்த பிறகுதான் ,நிம்மதியா கண்ணை மூடுவேன்னு என் மாமியார் சொல்றாங்களே !''

மனைவிகிட்டே நிறைய வாங்குபட்டிருப்பாரோ :)
          ''மாப்பிள்ளே ,நீதிபதியா இருந்த  நான்  ,இதுவரை யாருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்ததில்லைன்னு சொன்னா , ஏன்  நம்ப மாட்டேங்கிறீங்க ? '' 
         ''அந்தக் கொடுமையை நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேனே !''

தண்டவாளத்தில் தலை வைத்தும் மரணிக்காத தலைவர்கள் :)
   கையைக் காட்டினால் நிற்கும்  மினி பஸ் மாதிரி 
  நூறு  கிமீ வேகத்தில் செல்கின்ற  ரயிலும் நிற்கும் என 
  நினைக்கும் பாமர ஜனங்கள் ...
  ரயில் மறியல் செய்யும் நம்ம ஊர் அரசியல்வாதிகளிடம் இருந்து 
 நிறைய கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது !

மொபைல்வாசிகள், தமிழ்மண வாக்களிக்க  இதோ லிங்க்....http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1470020

38 comments:

  1. ''மாப்பிள்ளே ,நீதிபதியா இருந்த நான் ,இதுவரை யாருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்ததில்லைன்னு சொன்னா , ஏன் நம்ப மாட்டேங்கிறீங்க ? ''
    ''அந்தக் கொடுமையை நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேனே !''
    இந்த காமெடி படித்ததும் ( இரவு 00 ; 51) என்னை அறியாமல் உரக்க சிரித்துவிட்டேன் மறு நொடியில் மனைவியின் மிரட்டல் குரல் காமெடி நிஜாகிவிட்டது

    ReplyDelete
    Replies
    1. விமல் ஜி ,நீங்க சொல்ற நேரத்தைப் பார்த்தால் ...ஆயில் வள நாடு ஒன்றில் இருக்கிற மாதிரியிருக்கே !இதுவும் சுகமான ஆயுள் தண்டனைத் தானே :)

      Delete
    2. இல்லைங்க ஜி சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் இதை செயலில் காட்டிய வானளாவிய இரும்பு கூண்டை கொண்ட மேற்கத்திய நாட்டில் இருபது வருட அடிமையாக இருக்கிறேன்

      Delete
    3. அடிமை என்று சொல்லாதீங்க ஜி ,யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற நம் முப்பாட்டனின் கூற்றின்படி ஃபிரான்ஸ் நாட்டில் ஜாலியாக வாழுங்க :)

      Delete
  2. மிஷினில் விரலை விட்டு ஷாக் அடித்தால் ? வேண்டாம் இந்த வேலை.

    ReplyDelete
    Replies
    1. மூணு லேட்டுக்கு அரை நாள் சம்பளம் கட் என்று கூட சொல்லக் கூடும் ,வேண்டவே வேண்டாம் இந்த வேலை :)

      Delete
  3. 'வேலைக்காரிக்கும் பயோமெட்ரிக் வைத்த பயபுள்ள' என்னும் பட்டத்தை அவருக்கு வழங்கலாமே...!

    ரசித்தேன் ஜி.​

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே யாருமே அவர் வீட்டுக்கு வேலைக்கு வருவதில்லை ,இதில் பட்டம் வேறா :)

      Delete
  4. Replies
    1. படம் ரொம்ப பொருத்தம்தானே :)

      Delete
  5. அந்த ஆபீசர் இது சரிப்பட்டு வராதுன்னு அவரோட ஆபிஸில் இருந்த இந்த மெஷின எடுத்து இங்க வச்சுட்டாராம்...!

    நீதிபதிக்குன்னு ஒரு மரியாதை இருக்கில்ல... இருந்தா அந்த குன்றத்து குமரன் மாதிரி இருக்கனும் சாமியோ...!

    குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சிதான் மனிதக்குரங்கு...! ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருச்சாளியாக்கி, பெருச்சாளியைப் பெருமாளாக்கி” நிருபிக்க உதவி செய்ததற்கு வாழ்க வளமுடன்...!

    ‘நீ கண்ணை மூடுவான்னு’ மாமியார் சொல்றாங்களே...!

    மாப்ளே... எ மகள் தெய்வம்மாதிரி... அன்றே கொல்லமாட்டாள்...!

    ‘ரெயில்’ என்றாலே தண்டவாளம்தானே... தண்டவாளம்... இருப்பதே தண்டத்திற்குத்தானோ...?!

    த.ம. +1



    ReplyDelete
    Replies
    1. தனக்கொரு நியாயம் ,அடுத்தவருக்கு ஒரு நியாயமா :)

      அந்த குன்றத்து குமரன் கணக்கிலே ரொம்ப வீக்காச்சே :)

      ஆத்திகவாதிகள் இப்போதாவது பரிணாம தத்துவத்தை ஏற்பார்களா :)

      மாமியார் சொல்வதில் ஏதோ உள்குத்து இருக்கே :)

      நின்னு கொன்னாலும் பரவாயில்லை ,என்னை நிற்க விடாமல் கொல்றாளே:)

      அது அந்த முண்டங்களுக்குத் தெரிய மாட்டேங்குதே :)

      Delete
  6. அனைத்தும் ரசித்தேன்.

    த.ம. ஆறாம் வாக்கு.

    ReplyDelete
    Replies
    1. இரட்டை ஆயுள் தண்டனை சரிதானே ஜி :)

      Delete
  7. டார்வின் தத்துவத்தை நிரூபிக்குற மாதிரி பல பக்கிக நடந்துக்குதுங்கண்ணே!

    ReplyDelete
    Replies
    1. இப்போ எனக்கொரு டவுட்டு ,பக்கிங்க என்றால் ஆண்பாலா ,பெண்பாலா :)

      Delete
  8. டார்வின் கோட்பாடு தொடர்பான புகைப்படங்கள் அருமை.

    ReplyDelete
    Replies
    1. இது யதார்த்தமா ,செட் அப் தானா என்று தெரியவில்லை ,எதுவாக இருந்தாலும் ரசனைக் கார கேமரா நண்பர் :)

      Delete
  9. Replies
    1. பொருத்தம் படத்திலும் வேண்டும்தானே ஜி :)

      Delete
  10. டார்வின் தியரி நன்றாக உள்ளது

    ReplyDelete
    Replies
    1. உண்மை வரலாறு நன்றாகத்தானே இருக்கும் ஜி :)

      Delete
  11. //‘பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கி பிடிபட்ட நீதிபதியை ,அவரோட மனைவியே பண்ணிட்டாங்களாமே,ஏன் !''//

    இதில் ஏதோ ஒரு சொல்/சொற்கள் விடுபட்டிருப்பதுபோல் தோன்றுகிறதே.

    அந்த இரட்டை ஆயுள் தண்டனை துணுக்ககை மிகவும் இரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. விவாக ரத்து ,எப்படியோ ரத்தாகி இருப்பதைச் சுட்டியமைக்கு நன்றி :)

      Delete
  12. Replies
    1. தங்களின் நலமறிந்து மகிழ்ச்சி அய்யா :)

      Delete
  13. நம் முன்னோர்கள் செய்த காரியம் ,இன்றும் தொடர்வதையும்தானே :)

    ReplyDelete
  14. வேலைக்காரிக்கும் பயோமெட்ரிக் வைத்தவர் அதி மேதாவியோ?!!

    அனைத்தும் ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை,ஆதார் கார்டு கேட்காமல் போனார் :)

      Delete
  15. நண்பரே அனைத்தையும் ரசித்தேன்......


    இறுதிவரை உறுதி செய்யப்படாத காதல்... http://ajaisunilkarjoseph.blogspot.com/2017/08/blog-post_21.html

    ReplyDelete
    Replies
    1. இரட்டை ஆயுள் தண்டனையையுமா:)

      Delete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies

    1. ''அதோ, அந்த படம்தான் !''
      அழகாயிருக்கே...


      நகைச்சுவை எண்ணங்கள் சில...
      http://www.ypvnpubs.com/2017/08/blog-post_22.html

      Delete
    2. டார்வின் தியரியை இதை விட எப்படி பொருத்தமா நிரூபிக்க முடியும் :)

      Delete
  17. நல்லாத்தான் இருக்கு. ரசித்தேன். த ம

    ReplyDelete
    Replies
    1. உங்க நல்ல மனசுக்கு நன்றி :)

      Delete
  18. அது தொந்திரவு இல்லீங்கோ.... வளர்ச்சி..வளர்ச்சிங்கோ.... டிஜிட்டல் இந்தியாங்கோ........

    ReplyDelete
    Replies
    1. தொழில் செய்யும் யாரையும் நிம்மதியாய் இருக்க விடுவதில்லை ,இதான் டிஜிட்டல் இந்தியாவா :)

      Delete