3 August 2017

சைட் அடிக்கும் இடம் இதுவல்ல :)

படித்ததில் இடித்தது :)
              ''ரேஷன் கார்டுக்குப் பதிலா  'ஸ்மார்ட் கார்டு'திட்டம் நல்ல திட்டம் தானே ?''
               ''பேருதான் ஸ்மார்ட் கார்டு ,அதனாலே  பலன் ஒண்ணும் கிடைக்காது போலிருக்கே !''
இடித்த செய்தியின் தொடுப்பு ...பலகோடி மக்களின் ரேஷன் கார்டு ரத்தாகும் !

மாமூலில் பிரச்சினை வரக்கூடாது என்பதாலா :)
            ''பத்து பவுனைக் கொள்ளை அடிச்சிட்டு ,வெள்ளைப் பேப்பரில்   கையெழுத்து வேறு கேட்கிறீயே ,ஏன் ?''

             ''போலீஸ் புகாரில் ,கொள்ளைப் போனது நூறு  பவுன்னு சொல்லிடக் கூடாதில்லே ,அதுக்குத்தான் !'' 

இப்படியும் சில பிரபலங்கள்  :)               
         ''உங்க அருமை பெருமைகளை , மேடையில்  அறிமுகம் செய்தவருக்கு நீங்க ஒரு நன்றி சொல்லக் கூடாதா ,தலைவரே ?''
         ''அதை எழுதிக் கொடுத்ததே நான்தான் ,தற்பெருமை எனக்கு பிடிக்காதே !''

நியாயமான போராட்டம்தானே :)               
             ' 'உத்தம வில்லன் 'பட ரிலீஸ் தேதியை மாற்றச் சொல்லி போராட்டமா ,ஏன் ?''
             '' அக்டோபர்  2ல் ரிலீஸாம்,அது உத்தமர் காந்தி பிறந்த நாளாச்சே !''

என்றும் 16  நடிகை :)
             ' 'பேரன் பேத்தியைப் பார்த்த  அந்த நடிகை ,வரப்போறது  தன்னோட  பதினாறாவது பிறந்த நாள்னு  அடிச்சுச் சொல்றாரே ,எப்படி ?''
            ''பிப்ரவரி 29ல் பிறந்ததால் நாலு வருசத்துக்கு ஒருமுறைதானே பிறந்த நாள் வருது ?''
சைட் அடிக்கும் இடம் இதுவல்ல :)
     பெண் பாடகி ,சபா கச்சேரியில் ...
     உச்ச ஸ்தாயியில் பாடும்போது 
    'பார்க்கச் சகிக்கலே 'என்பவன் ...
     ரசனைக் கெட்ட ஜென்மம் !

மொபைல்வாசிகள், தமிழ்மண வாக்களிக்க  இதோ லிங்க் ....http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1468147

26 comments:

  1. பத்து பவுன் - நூறு பவுன் ஜோக்கை ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ஒரு பொய்,கொள்ளைக் காரனுக்கும் ,கருப்பாடு போலீஸுக்கும் உண்டான பிரச்சினை ஆகி விடுதே :)

      Delete
  2. மாமூலை ரசித்தோம்...அனைத்தும்!!

    ReplyDelete
    Replies
    1. இந்த மாமூல் ஒழிந்தால்தான் மக்கள் மாமூலான வாழ்க்கை வாழ முடியும் :)

      Delete
  3. தற்பெருமை கூடாது நல்ல கொள்(ளை)கை

    ReplyDelete
    Replies
    1. அடுத்தவரை சொல்ல வைப்பது மட்டும் நல்ல கொள்கையா :)

      Delete
  4. 'ஸ்மார்ட் கார்டு' திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது ...! எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...?!

    உயிரைப் பணயம் வைத்து பத்துப் பவுனு சம்பாதிக்கிறோம்... நீங்க என்னடான்னா... 90 பவுன ஈஸியா சம்பாதிச்சுட்டுப் போகப் பாக்குறீங்களே...! நோகாம நுங்கு திங்க ஆசைப்படுறீங்களே...!

    என் அருமை என்ன பெருமை என்ன அந்தஸ்தென்ன என் குஸ்தி என்ன பஸ்கி என்ன தண்டால் என்ன இத நான் எங்க சொல்வேன் என்ன செய்வேன்...?!

    சத்தியத்தின் சோதனைக்கு எத்தனை பேர் போட்டி..>? தர்மம் என்னை வாட்டுதம்மா...!

    அவுங்க பேத்தியோட பிறந்தநாள்ன்னு சொல்ல மறந்துட்டாங்களாம்... பாட்டி சொல்லைத் தட்டாதே...!

    உச்சகட்டம் இதுதானோ...?! சபா கச்சேரி சாபக்கேடோ...?!

    த.ம.3

    ReplyDelete
    Replies
    1. நீண்ட காலம் இல்லை ,பொதுத் தேர்தல் வரைக்கும் தான் :)

      எங்க தொழில்லே உள்ள ரிஸ்க் உங்களுக்கு எங்கே புரியப் போவுது :)

      என் சோகக் கதையைக் கேளு தாய்க்குலமே :)

      தர்மம் எதுக்கு வாட்டுது ,தலைக் காக்க வேண்டாமா :)

      பேத்தியின் வயதில் நான்கு மடங்கு இருக்காதா பாட்டிக்கு :)

      கேட்பவர்களுக்கு சாபக் கேடோ :)

      Delete
  5. Replies
    1. ஆடிப் பெருக்கு இன்று ஆறுகள் எல்லாம் வற்றி இருப்பது வருத்தம் தந்தாலும் ,உங்களின் 'ஆறு 'மகிழ்ச்சி தருகிறது :)

      Delete
  6. என்றும் 16 நடிகை :)//

    மார்க்கண்டேயனி!!!

    ReplyDelete
    Replies
    1. அணி ஏதும் அணியாவிட்டாலும் மார்க்கண்டேயனி அழகுதான் :)

      Delete
  7. Replies
    1. கச்சேரி சரிதானே ஜி:)

      Delete
  8. வழக்கம் போல! த ம 10

    ReplyDelete
    Replies
    1. ஏனோ தெரியலே ,வழக்கம் போல உங்க வாக்கு விழவில்லையே அய்யா :)

      Delete
  9. பாவம்ங்க காந்தி சுதந்திரம் வாங்கி கொடுத்துட்டு அவர் படுற அவஸ்தை

    ReplyDelete
    Replies
    1. இது கோட்சேகளின் காலமாகிப் போச்சே ஜி :)

      Delete
  10. Replies
    1. ரசனைக் கெட்ட ஜென்மத்தைப் பற்றி ஒண்ணுமே சொல்ல வில்லையே ஜி :)

      Delete
  11. ஸ்மார்ட் கார்டு மோசடிதானே :)

    ReplyDelete
  12. சிறிய இடைவெளிக்குப் பின் வந்து ரசித்தமைக்கு நன்றி ஜி :)

    ReplyDelete
  13. காவேரி ஆறு வருத்தம், சகோ தமிழ் இளங்கோ ஓட்டு ஆறு மகிழ்ச்சி ரசித்தேன்.
    அனைத்தும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. பதிவை மட்டுமல்ல ,கருத்துக்களையும் மறுமொழியையும் ரசித்திருப்பது ,எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது,மேடம் :)

      Delete
  14. ரேஷன் கார்டுக்குப் பதில் ஸ்மார்ட் கார்ட் என்றெல்லாம்சொல்லிக் கொடுக்காதீர்கள்
    கொள்ளையும் கொடுத்து விட்டு பேப்பரிலும் கையெழுத்தா
    இப்படி எழுதி வாங்கி அறிமுகமாவது சாதாரணம்தானே
    காந்தியை வில்லனாகச் சித்தரித்தோரே இன்று அரசுகட்டிலில்
    ஒருவேளை மொரார்ஜி தேசாயைப்போலா
    கேட்க சகிக்கலே என்று சொல்லலாமா

    ReplyDelete
    Replies
    1. கொடுத்தும் என்ன பயன் :)
      மாமூல் தொகையை சரிக்கட்ட:)
      பூவுக்கு விளம்பரமா :)
      காலக் கொடுமை :)
      சரியாக சொல்லி விட்டீர்கள் :)
      ரசிக்க முடியாவிட்டால் சொல்லலாம் :)

      Delete