7 August 2017

மனைவி சிரித்தாலும் குற்றமா :)

             ''துன்பம் வரும் வேளையில் சிரிக்கணும்னு பெண்டாட்டிகிட்டே சொன்னது தப்பா போச்சா ,ஏன்  ?''
            ''நான் வீட்டுக்குள் நுழையும் போதெல்லாம் சிரிக்கிறாளே !''
குடும்ப 'மனநல 'மருத்துவர் என்று  சொல்லக்கூடாதோ :)
               ''பொண்ணைப் பிடிச்சிருக்குன்னு  சொல்லிட்டு,இப்ப ஏன் வேண்டாங்கிறாங்க?''

              ''எங்க பரம்பரையைப் பற்றி ,எங்க பேமிலி மனநல டாக்டர்கிட்டே விசாரித்து பாருங்கன்னு சொன்னது தப்பாப் போச்சு !''

ஜூலிபுளோரான்னா  இனிமைதான்  ,ஆனால்  வலி :)
              ''ஜூலிபுளோரா குத்தின இடத்தில் இருந்து ரத்தம் கொட்டுதுன்னு சொல்றீங்களே ,அது யார் உங்க மனைவியா ?''
             ''அட நீங்க வேற ,சீமைக் கருவேல மரத்தின் விஞ்ஞான பெயர்தான் அது !''

வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சி தரும் போராட்டம் :)
          ''ரயில் போறவரைக்கும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் ,இப்போ ரயிலுங்க வரிசையா நிற்குதே ,ஏன் ?''
           ''கேட் கீப்பர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி  ரயில் நிறுத்தும் போராட்டம் பண்றாங்களாம் !''

தாய் மனம் பூவினும் மெல்லியதா :)
   குரங்கு கூட ஈன்ற பின்னும்  தன் குட்டியை 
  தன்னுடனே சுமந்துக் கொண்டே திரிகிறது ...
  இதைப் பார்த்தபின்பும் பிறந்த சிசுவை குப்பையில் வீச 
  சில  'நாய் 'மார்களுக்கு எப்படி  மனசு வருகிறதோ ?

மொபைல்வாசிகள், தமிழ்மண வாக்களிக்க  இதோ லிங்க் ..http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1468633

34 comments:

  1. துன்பத்தின் பொருள் உணர்ந்தவள் போல...

    ReplyDelete
    Replies
    1. யாருக்கு யார் துன்பமோ :)

      Delete
    2. ஜி பலமுறை முயன்றும் ஓட்டு சேர்ந்ததாக சொல்கிறது.

      Delete
    3. சகோதரி ராஜியும் இப்படித்தான் சொல்கிறார் ,பலமுறை அசோகன் ஜியும் வாக்களிக்க முடியவில்லை என்கிறார் ...தமிழ்மண நிர்வாகமும் இதை சரி செய்வதாக தெரியவில்லை !இதுவும் இலுமினாட்டிகளின் சதியா இருக்குமா ஜி :)

      Delete
    4. பகவான் ஜீ நலம்தானே? மகுடம் பத்திரமாக இருக்கோ?.. வச்டுக்கொள்ளுங்கோ கொஞ்ச நாளால எனக்கு தேவைப்படும்:).

      தமிழ்மணம் மின்னல் வேகத்தில் வோட் சேர்ந்து விடுகிறதே பிறகென்ன குறை....

      அதிசரி இம்முறை நீங்க நடுச்சாமம் 12 க்கு போஸ்ட் போடவில்லைப்போல இருக்கே? ஏன் ரைமிங் சேஞ் ஆகிடுச்சோ???

      Delete
    5. ஏன் பகவான் ஜீ பெண்களைத் திட்டுறீங்க? அக்குழந்தையைக் கொடுத்த ஆண், அது தன் குழந்தைதான் என தைரியமாகச் சொன்னால், அத்தாய் எதுக்கு பயந்து குழந்தையை வீசுறா??? குழந்தையை இப்படி வீசுவதற்கு முக்கிய பங்கு அது உருவாக காரணமாக இருந்த ஆணுக்கும் உண்டு.

      Delete
    6. நலமே ,டூர் எல்லாம் நல்ல படியாய் முடிந்ததா ?பார்த்த இடங்களின் சுவையான பதிவை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன் !
      மகுடம் 'சொந்த சரக்கை' மட்டுமே பதிவிடும் உங்களுக்கு கிடைத்தால் நானும் மகிழ்ச்சி அடைவேன் :)

      சகோதரி ராஜியும் ,கில்லர்ஜீயும் வாக்களிக்க முடியவில்லை என்கிறார்கள் ,இப்படியே போனால் மகுடம் என்னாவது : )

      நேற்றைய பதிவைப் படித்தாலே, தம்மதம் ஆன காரணம் தெரிந்து இருக்குமே :)

      Delete
    7. முக்கிய பங்கு ஆணுக்கும் உண்டு என்றாலும் முக்குவது பெண் தானே ?முன் எச்சரிக்கை வேண்டாமா :)
      காவல்துறை அந்த ஆணின் கைக்கு 'வளைக்காப்பு 'நடத்தினால் தான் திருந்துவார்கள் :)

      Delete
    8. இதுபற்றி ஒரு பட்டி மன்றமே நடத்தலாம் பகவான் ஜீ, கில்லர்ஜீ யை ஒரு போஸ்ட் போடச் சொல்லுங்கோ இதுபற்றி மின்னி முழக்குறேன்...
      நம்பிக் கெடுவோர்தான் பெண்கள்... செண்டிமெண்டாகப் பேசி வலையில் சிக்க வைப்போர் ஆண்கள்... பின்னர் கையை விரிச்டு எஸ்கேப் ஆனால் அப்பெண் என்ன பண்ணுவார்ர்ர்??

      Delete
    9. கில்லர்ஜி கவனியுங்க ,பதிவு போட மேட்டர் ரெடியா :)

      Delete
  2. நாய்களை கேவலப்படுத்த வேண்டாம் ஜி...

    ReplyDelete
    Replies
    1. நாய்தான் போட்ட குட்டியைத் தின்னும் என்றும் சொல்கிறார்களே ஜி:)

      Delete
    2. பகவான் ஜி! நாய் தான் போட்டக் குட்டியைத் தின்பது என்பது வெகு வெகு வெகு அரிது. பிறந்த குட்டி இறந்தே பிறந்தாலோ அல்லது இனி பிழைக்காது என்று அறிந்தாலோ அல்லது ப்ரீ மெச்சுர்ராகப் பிறந்தாலோ மட்டுமே தாய் தன் குட்டியைத் தின்னுமே அல்லாமல் 6 அறிவு மனிதர்கள் செய்யும் கேவலமான செய்கைகளை விலங்குகளோ இயற்கையோ செய்யாது ஜி

      கீதா

      Delete
    3. # 6 அறிவு மனிதர்கள் செய்யும் கேவலமான செய்கைகளை விலங்குகளோ இயற்கையோ செய்யாது ஜி)
      சிலரைப் பார்த்தால் அப்படித்தான் இருக்கிறது :)

      Delete
  3. வீட்டுக்காரர் வந்தா துன்பம்....

    என்னைப்போல..

    ஏன்னா, மாமா வந்துட்டா மொபைல் நோண்டமுடியாது.

    ReplyDelete
    Replies
    1. அதுக்குப் பதிலா டி வி பார்க்கிறதா மாமா சொல்றாரே :)

      Delete
  4. தம போடாமலேயே போட்டாசுன்னு சொல்லுது.

    ReplyDelete
    Replies
    1. இன்றைய பதிவுக்கு விழலைன்னா நேற்றைய பதிவுக்கு வாக்களிக்கலாமே ,இதை நாளைக்கு பார்த்துக்கலாம் :)

      Delete
  5. சுவைத்தேன் த ம 4

    ReplyDelete
    Replies
    1. மெல்லிய பூவின் தேனையும்தானே :)

      Delete
  6. ஜுலிஃப்ளோரா அஹஹஹ ரசித்தோம் ஜி!

    ReplyDelete
    Replies
    1. ஜுலிஃப்ளோரா என்று சொல்லும் போதே இனிக்கத்தானே செய்கிறது ஜி :)

      Delete
  7. துன்பம் நேர்கையில் யாழெடுத்து இன்பம் சேர்க்காமல் சிரிக்கிறாரா
    ஃபாமிலிக்கே மனநல டாக்டரா
    கேட் கீப்பர்களின்போராட்டம் வாகன ஓட்டிகளுக்குத் திண்டாட்டம்
    நாய்களைப் பற்றி இலக்கியங்களிலும் ஈனமாகவே பேசப் படுகிறது சில நாட்கள் முன் ஒரு காணொளியில் நாய்கள் தங்கள் எஜமானரையே கொன்றதை காட்டி இருந்தார்கள்

    ReplyDelete
    Replies
    1. இவர் யாழ் எடுத்து வாசித்து விட்டாலும் ......:)
      எப்படிப்பட்ட ஃபேமிலியா இருக்கும் :)
      அதான் திறந்து விட்டாரே எதுக்கு திண்டாட்டம் :)
      நாய்ப் பிரியர்களின் கோபத்துக்கு ஆளாகாதீங்க :)

      Delete
  8. ‘துன்பம் வரும் வேளையிலே சிரிங்க என்று சொல்லி வைத்தான் வள்ளுவனும் சரிங்க... நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன் சிரிப்பு வல்ல...!’ இப்ப சிரிச்சிட்டு அப்புறம் வாங்கிக்கட்ட முடியாதே...!

    ‘பைத்தியத்திற்கு வைத்தியம் பார்க்கின்ற பைத்தியக்கார வைத்தியருக்கு பைத்தியம் பிடித்தால் அந்த பைத்தியத்திற்கு வைத்தியம் பார்க்கின்ற பைத்தியக்கார வைத்தியர் எந்தப் பைத்தியத்திற்கு வைத்தியம் பார்க்கின்ற பைத்தியக்கார வைத்தியரிடம் தன் பைத்தியத்திற்கு வைத்தியம் பார்ப்பார்...?!’

    ‘ஜுலி’புளோராவை குத்தி குத்தி காண்பிச்சு வெளியே தள்ளிட்டீங்க...!

    கேட்ட மூடலைன்னு கேட்க ஆளில்லை... இதற்கு ஆளில்லா கேட்டே தேவலை...!

    ‘கையில் வைத்து காத்திருந்தால் காலடியில் காத்திருக்கும் நன்றி மிக்க நாய்கள் உள்ள நாடு’ இந்த நாட்டில் இப்படியும் நாய்மார்கள் இருக்கின்றார்களே... நாணப்பட வேண்டியதுதான்...!


    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. வாய் விட்டு சிரிக்கலாம் ,வயிற்றைக் கட்டிட்டு அழணுமே :)

      இருங்க விசுஜீயிடமே கேட்டு விடலாம்:)

      தள்ளினது தப்புன்னு கோர்ட் கண்டிக்குதே :)

      ஆள்தான் இல்லையே ,அப்புறம் எதுக்கு கேட் :)

      கையில் எதை வைத்து காத்திருக்கணும் :)

      Delete
  9. Replies
    1. ‘ஜுலி’புளோரா குத்தியதையுமா :)

      Delete
  10. வீட்டுக்குள் வரும்போதெல்லாம் சிரிக்கிறார் மனைவி! ஹாஹா.... நுணலும் தன் வாயால் கெடும்!

    த.ம. எட்டாம் வாக்கு.

    ReplyDelete
    Replies
    1. சிரிக்கும் மனைவியை எட்டுக்கு முந்தைய ஏழரை எனலாமோ :)

      Delete
  11. அத்தனையும் அற்புதம்

    ReplyDelete
    Replies
    1. ரயில் நிறுத்தும் போராட்டம் நடந்தால் எப்படியிருக்கும் :)

      Delete
  12. Replies
    1. தம வை ஒரு டஜன் ஆக்கியதற்கு நன்றி ஜி :)

      Delete