6 December 2013

சேலையில் மட்டும் கவனம் இருந்தால் போதாது !

நாம் விரும்புகின்ற ஒன்றில் மனம்  லயித்துப் போகும்போது ...
நம்மை நாமே இழந்து விடுகிறோம் ...
இது காதலில் வேண்டுமானால் சுகமாய் இருக்கலாம் ...

மற்ற விசயங்களில் துக்கத்தைத்தான் தரும் என்பதற்கு உதாரணம் இதோ ...
நேற்றைய தினம்...
மாமியாரும் ,மருமகளும் சேலை வாங்க மதுரையில் புகழ்பெற்ற ஒரு கடைக்கு சென்றுள்ளார்கள் ...
ஒன்றரை மணி நேரம் சேலைகளில் மனம் லயித்து ...
'பெரும் புதை பொருள் ஆராய்ச்சி செய்து'
சேலையை செலக்ட் செய்து பில் வாங்கி ...
கவுண்டருக்கு சென்று சோல்டர் பேக்கை திறந்து பார்த்தால் பர்சைக் காணவில்லை ...
கடை உரிமையாளரிடம் விபரத்தைச் சொல்லி ...
cctvகேமரா பதிவுகளைப் பார்த்தால் அதிர்ச்சி தரும் காட்சி விரிந்தது ...
எட்டு வயது பெண் குழந்தை சோல்டர் பேக்கை திறந்து பர்சை எடுத்து அருகில் இருந்த அம்மாவின் கையில் கொடுக்கிறது ...
பெரும் பாடு பட்டு சம்பாதித்த பணத்துடன் அவர்கள் உடனே எஸ்கேப் ஆவதும் தெரிகிறது ...
திருடப் பட்ட பர்சில் 'செல்'லும் இருந்ததால் உடனே தொடர்பு கொண்டபோது  ...
சுவிட்ச் ஆப் செய்யப் பட்டிருந்தது ...
நொந்து நூலாகி வீட்டிற்க்குச் செல்ல டூ வீலர் சாவியை தேடினால் ...
பர்சோடு சாவியும் போனது தெரிந்தது ...
மழை விட்டும் தூவானம் விடாத கதையாக ...
டூப்ளிகேட் சாவிக்கும் இருநூறு அழுது தொலைத்துள்ளார்கள் ...
இவையெல்லாம் மனம் ஒன்றில் மட்டுமே லயித்ததால் வந்த வினைதானே ?


28 comments:

  1. (எட்டு வயது) பெண் குழந்தையை எப்படி வளர்த்துள்ளார்கள்... கொடுமை...

    ReplyDelete
    Replies
    1. தாயைப் போல பிள்ளைன்னு இதைதான் சொல்கிறார்களோ ?
      நன்றி

      Delete
  2. லயிப்பினால் வந்த தவிப்பு
    ஒரு நல்ல எச்சரிக்கைப் பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. இதனாலே தெரிஞ்சுக்க வேண்டியது ..ஜொள்ளு விட்டாலும் ஜாக்கிரதையா இருக்கணும் !
      நன்றி

      Delete
  3. கொடுமை, சிறுகுழந்தையை திருட்டுக்கு பழக்குவது. த.ம. 3

    ReplyDelete
    Replies
    1. சிறு துரும்பும் பல் குத்த உதவுங்கிறதை நிரூபிக்கிறாங்களோ?
      நன்றி

      Delete
  4. எட்டு வயது குழந்தையை திருட்டுக்கு பழக்கப்படுத்துவதா!?

    ReplyDelete
    Replies
    1. கைக் குழந்தையை வேண்டுமென்றே அழவைத்து திருடுபவர்களும் உண்டே !
      நன்றி

      Delete
  5. குழந்தைக்கும் திருட சொல்லிக் கொடுத்திருக்கும் அன்னை...
    ஆஹா... வாழ்க தமிழகம்...

    ReplyDelete
    Replies
    1. பணம் என்றால் தாய் மனமும் பேய் மனம் ஆகிவிடுமோ ?
      நன்றி

      Delete
  6. Replies
    1. கருட புராணத்தில் இப்படி நடக்குமென்று சொல்லி இருக்கிறார்களா ?
      நன்றி

      Delete
  7. வணக்கம்
    சிறுமியின் செயலைக்கண்டு....நல்ல பேரை வாங்கவேண்டும் பிள்ளைகளே.. என்று மக்கள் திலகம் பாடிய.. பாடல் நினைவுக்கு வந்தது...ஓ........ஓஓஓ................ஓ,,,,,,,,,,,

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அந்தச் சிறுமியைப் பார்த்தால்,அந்த பாட்டின் அடுத்த வரியை , 'நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் மொள்ளமாறிகளே''ன்னு சொல்லத் தோணுது !
      நன்றி

      Delete
  8. களவும் கற்று மற என்பதை பிராக்டிகலா சொல்லி கொடுத்தார் போல!
    ஆமாம் அந்த மருகள் மாமியாரில் இதை கொண்டு ஒரு வாரம் சண்டை நடந்ததை சொல்லவில்லையேஜீ.

    ReplyDelete
    Replies
    1. சிறுமி இப்படி செய்ய மாட்டாள் என்று நமக்குள் இருக்கிற பிம்பத்தை உடைத்துவிட்டதே ,அவளின் பிராக்டிகல் ?
      களவு கொடுத்தது மாமியாராச்சே ,மருமகள் தப்பித்தாள்...மாமியார் உடைத்தால் மண் குடமல்லவா ?
      நன்றி

      Delete
  9. உண்மை தான்! முக்கியமாக ஆண்களுக்கு!
    "சேலையில் மட்டும்" கவனம் இருந்தால் எல்லாமே அம்பேல்!
    க+

    ReplyDelete
    Replies
    1. இதுக்காகத் தான் டிரைவர்களிடம் ,,,சாலையைப் பார்த்து ஓட்டு,சேலையைப் பார்த்தல்ல என்று சொல்கிறார்கள் !
      நன்றி

      Delete
    2. நான் சீரியசா சொல்றேன் ,உங்களுக்கு ஜோக்கா படுதா ?
      நன்றி

      Delete
  10. Replies
    1. யாராவது ஒருத்தர் இதைப் படிச்சு திருந்திட்டேன்னு சொன்னா நான் சொல்றதிலேயும் அர்த்தமிருக்கு !
      நன்றி

      Delete
  11. சேலை மோகம் ஆபத்தினை விளைவிக்கும்!

    குழந்தையை திருட பழக்கிய அம்மாவினை என்ன செய்யலாம்!

    த.ம. 5

    ReplyDelete
    Replies
    1. நீங்க ஆபத்துன்னு சொல்றீங்க ,வைரமுத்து 'சேலைச் சோலையே 'ன்னு சொல்றாரு ,எது சரி ?குழப்பமா இருக்கே !
      நன்றி

      Delete
  12. பெண்கள் ஷாப்பிங்க் மெய் மறந்து செய்தாலும் இதுபோன்ற பர்ஸ் விஷயத்தில் கவனமாக இருப்பார்களே!!!!

    திருடிய அந்த அம்மாவும், பெண்ணும் அம்மா பெண்ணாக இருக்க மாட்டார்கள்! இபோதெல்லாம் பிச்சைக்கும் சரி, த்ருட்டிற்கும் சரி கூட்டம் கூட்டமாக அங்கங்கு சந்தித்து, எந்த ஏரியா யாருக்கு என்று பிரித்துக் கொண்டு பின்னர் கிடைத்ததை பங்கிட்டுக் கொள்கிறார்கள்!!!

    ReplyDelete
    Replies
    1. பெண்கள் கவனமாக இருப்பார்கள் ,திருடி சிறுமி ரூபத்தில் வருவாள் என்று எதிர்ப் பார்க்கவில்லையே !
      இப்படிப்பட்ட திருட்டுக் கும்பல் பிள்ளைக் கடத்தலும் செய்வார்கள் என செய்தி உண்டே !
      நன்றி

      Delete