7 December 2013

அவர் மூலம் காதல் கடிதங்கள் அனுப்பியவர்களாவது வருந்தி இருப்பார்களா?

காதல் கடிதமோ ,வேறெந்தக் கடிதமோ சம்பந்தப் பட்டவர்களிடம்
 சரியாக கொண்டு சேர்க்கும் பணியை செய்த தபால்காரர் ஒருவர் ...
சரியாக இறங்க வேண்டிய பஸ் ஸ்டாப்பில் இறங்காததாலேயே  ...
இறந்து போனார்னு சொன்னால் நம்பமுடிகிறதா ?

அந்த தபால்காரர் ,55 வயது பெரிய மனிதர் ...
டாஸ்மாக் வாசனையுடன் மதுரையில் பஸ் ஏறியவர்...
சமய நல்லூரில் இறங்கியிருக்க வேண்டும் ...
போதை இறங்காததால் இறங்க மறந்துவிட்டார் ...
பெரிய மனுஷனாச்சே  என்று இரக்கப் பட்டு அவரை ...
நடத்துனர் அடுத்த ஸ்டாப்பில் இறக்கி விட்டுள்ளார் ...
ஸ்டாப்அருகே டூவீலர் கடை வைத்திருக்கும் மெக்கானிக் ...
ஏற்கனவே பெரியவருக்கு அறிமுகம் ஆனவர் ஆகையால் ...
'வாங்க வாங்க ,என்ன இங்கே வந்து இறங்குறீங்க 'ன்னு ...
பேசிக்கொண்டே ஒரு திட்டத்துடன்   நடந்து வந்தவன் ...
ஆள் நடமாட்டம் இல்லா  இடம் வந்ததும் ...
பெரியவரின் கையில் இருந்த பையைப் பறிக்க முயல ...
பெரியவர் தடுக்க முயல ...
அருகே இருந்த அடர்ந்த புதரிலே அவரை தள்ளி ...
ஹேக்சா  பிளேடினால் கழுத்தை அறுத்து ...
அவரிடமிருந்த பையையும் ,ஓரு பவுன் மோதிரத்தையும் பறித்துக்கொண்ட மெக்கானிக் ...
பையிலே ஏதும் பைசா இல்லாததால் தூக்கி எறிந்து விட்டு ...
மோதிரத்தை அடகு வைத்து ,வந்த பணத்தில் ...
இரண்டு நாட்கள் ஜாலியாக இருந்தாராம் !
இவனின் ஜாலியும் டாஸ்மாக் சரக்கில்தான் இருந்திருக்கும் ...
தற்போது  ஜெயிலில் ஜாலியாக இருப்பான் என்றே நம்பலாம் !
பெரியவரை உரிய ஸ்டாப்பில் இறங்க விடாதது...போதை !
ஒரு பவுன் மோதிரத்துக்காக கொலை செய்ய வைத்ததும் ...போதை !



26 comments:

  1. போதை எதையும் செய்ய வைக்கும்....

    என்று தணியும் இந்த போதை மோகம்....

    த.ம. 1

    ReplyDelete
    Replies
    1. அவர்களுக்கு பிடித்தபாட்டு ...நாளைமுதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம் !
      நன்றி

      Delete
  2. போதையால் விளைந்த வாதையைச்
    சொன்னவிதம் அருமை
    குறிப்பாக முடித்த விதம்...
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. போதையும் ,வாதையும் குறையுற பாட தெரியலையே !
      நன்றி

      Delete
  3. வணக்கம்

    சிறப்பாக உள்ளது... எனது புதிய வலைப்பூவின் ஊடாக கருத்து எழுதுகிறேன்....http://tamilkkavitaikalcom.blogspot.com

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. புதிய வலைப்பூ சிறக்க வாழ்த்துக்கள் ,,பலோவர் ஆகிவிட்டேன் !
      நன்றி

      Delete
  4. இந்தக் கொடுமை என்று தீரும்...?

    ம்ஹீம்...

    ReplyDelete
    Replies
    1. கலிகாலம் முடிந்ததும் !
      நன்றி

      Delete
  5. இதை பதிவா போட வைத்ததும் பிளாக் என்னும் போதை

    ReplyDelete
    Replies
    1. ஆனால் பிறருக்கு துன்பம் தராத போதை ஆச்சே !இது மட்டுமா ...தன்னிலை இழந்து சாக்கடையில் விழ வைக்காத போதை ,மனைவியை தாக்காத போதை ,கற்பழிக்க சொல்லாத போதை ,கொலை செய்ய தூண்டாத போதை ...இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் !
      நன்றி

      Delete
  6. Replies
    1. போதையின் பாதையில் போனால் இந்த நிலைதான் !
      நன்றி

      Delete
  7. டாஸ்மாக் போதையில் என்ன வேண்டுமானாலும் நடக்கும் ஐயா! போதையில் வீடே மாறி.....மனைவியும் கூட மாறலாம்.......!! அத்தனைக் கொடியது இந்த போதை!!! நேற்று கூட மன்னார்குடி ட்ரெயினில் குடி போதையில் இளைஞர்கள் ஒரு பெண்ணிடம் தகராறு செய்திருக்கிறார்கள்! எல்லாமே தவறிப் போகும்!!

    ReplyDelete
    Replies
    1. கற்பழிப்பு ,கொலை ,மது மூன்றில் எது கொடியதென்று கதை ஒன்று சொல்வார்கள் ,நினைவுக்கு வருகிறது ..அந்த கதை எல்லோரும் அறிந்ததுதான் !
      நன்றி

      Delete
  8. த.ம. போட்டாச்சு!!!!

    ReplyDelete
  9. இங்கு எதுவுமே தப்பில்லை எனும் போதை அனைவருக்கும் ஏறியுள்ளதால்....

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்ற போதை ,மது போதையை விட மோசமானதாச்சே !
      நன்றி

      Delete
  10. 'போதை'யில் விழுந்துவிட்டால்...
    அப்'போதை'க்கு என்ன செய்கிறோம் என்ற தன்னிலை அறிவு மழுங்கிவிடுகின்றது. பதிவுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. இதுக்குத்தான் சொல்றது ..எப்'போதை'க்கும் அடிமை ஆகக்கூடாது என்று !
      நன்றி

      Delete
  11. போதை தவறான பதில் செல்ல தூண்டுகிறது

    ReplyDelete
    Replies
    1. இப்போதைய சமூக விரோத செயல்கள் அனைத்திற்கும் அடிநாதமாய் இருப்பது குடிதான் !
      நன்றி

      Delete
  12. நஞ்சு கொடியது, தற்கொலை கொடிய குற்றம், இங்கு தற்கொலை செய்துகொள்ள நஞ்சு விற்க்கப்படும்.

    ReplyDelete
    Replies
    1. நல்ல வியாபாரம் ,ஜெயம் நீங்க ஜெயிச்சுடுவீங்க !
      நன்றி

      Delete