18 December 2013

நோயாளிக்கு பேச்சு வராது ,டாக்டருக்குமா ?

''நாலு மாசத்திலே எட்டு லட்ச ரூபாய் செலவு செய்ஞ்சும் உங்கப்பாவுக்கு பேச்சு வரலேன்னா ,டிஸ்சார்ஜ் செய்யச் சொல்ல வேண்டியது தானே ?''
''மூச்சு இருக்கிறவரைக்கும் டிஸ்சார்ஜ் என்கிற பேச்சுக்கே இடமில்லைன்னு சொல்றாரே !''

18 comments:

  1. அவர்தான் டாக்டர்
    அதுசரி
    யார் மூச்சு இருக்கும்வரை... ?

    ReplyDelete
    Replies
    1. இதிலே என்ன சந்தேகம் ,டாக்டருக்கு பிடிக்காத ஒரே வார்த்தை 'டிஸ்சார்ஜ்'ஆச்சே !
      நன்றி

      Delete
  2. தொழில் பக்தி அப்படி

    ReplyDelete
    Replies
    1. போட்ட முதலை வேற எப்படி எடுக்கிறது ?
      நன்றி

      Delete
  3. '[[மூச்சு இருக்கிறவரைக்கும் டிஸ்சார்ஜ் என்கிற பேச்சுக்கே இடமில்லைன்னு சொல்றாரே !'']]

    அவர் முட்டாள் டாக்டர்! நல்ல டாக்டர் என்றால் மூச்சு போனாலும், டிஸ்சார்ஜ் கிடையாது; எல்லா பணத்தையும் உருவும் வரைக்கும் No டிஸ்சார்ஜ் --இவன் தான் டாக்டர்!

    இது இந்த கால டாக்டர் ! இதில் தவறு ஒன்னும் இல்லை; இப்ப இருக்கும் டாக்டர்கள் எல்லாம் நம்ம பங்காளிகள் தானே: அவனும் நம்மில் ஒருவன். அவன் அப்படித்தான் இருப்பான்!

    தமிழ்நாட்டில் ஒருத்தனை ஒருத்தன் ஒ------ என்பது தான் எழுதப் படாத விதி! அப்புறம்? அப்புறம் என்ன விழுப்புரம்!

    இதான்பா வாழ்க்கை!

    ReplyDelete
    Replies
    1. ஒ....வாழ்க்கை தத்துவத்தை ஒரே வார்த்தையில் விளக்கிய நீங்க சாதாரண டாக்டரில்லை ...தத்துவ டாக்டர் !
      நீங்க சொன்ன மாதிரி 'நல்ல 'டாக்டர்களைப் பெற்று இருக்கும் நாங்கள் உண்மையில் எட்டு ஜென்மங்களில் புண்ணியம் செய்திருக்க வேண்டும் !
      நன்றி

      Delete
  4. Replies
    1. போட்டாச்சு .போட்டாச்சு ,அடுத்த வீட்டைப் பாருங்க ...அப்படித்தானே ?
      நன்றி

      Delete
  5. இப்போதைய டாக்டர்களின் அடையாளமாகிய நல்ல டாகடர்!!! டாக்டர்கள் டிஸ்சார்ஜ் என்ற வார்த்தையை அதுவும் இந்தக் கால கட்டத்தில் சொல்லுவது மிக அரிது! இனி எந்த ட்ரீட்மெண்டும் பயனில்லை வீட்டுக்கு கொண்டு செல்லுங்கள் என்பது போன்ற வாக்குகள் உங்கள் காதில் விழுந்தால் சொல்லுங்கள்! அந்த டாக்டருக்கு ஒரு பாராட்டு விழாவே நடத்தலாம்!! பிணத்தையே பணம் கட்டினால் தான் "டிஸ்சார்ஜ்" என்று சொல்லும் 5 ஸ்டார் ஆஸ்பத்திரிகள் தானே!! அதனால் இவர் "practical" டாக்டர்தான்!!!

    ReplyDelete
    Replies
    1. பிணத்திற்கும் ஸ்கேன் எடுக்கிற கூத்தெல்லாம் இங்கே நடக்கிறதே !
      பிணத்தை வைத்துக்கொண்டு பேரம் ,நாடு வெளங்கும் ?
      நன்றி

      Delete
  6. Replies
    1. போட்டாச்சுன்னு ஒரு தரம் கேட்டா காதுலே தேன் வந்து பாயிறமாதிரி இருக்கு ,இரண்டு தரம் சொன்னா நல்லாவா இருக்கு ?
      நன்றி

      Delete
  7. சிறந்த (தொழில்) மருத்துவர்...!

    ReplyDelete
    Replies
    1. இருந்து விட்டு போகட்டும் ,தொழில் தர்மத்தையாவது காப்பாற்ற வேண்டாமா ?
      நன்றி

      Delete
  8. இப்போது பல மருத்துவமனைகளில் இப்படி நடக்கிறது தான் சோகம்...

    ReplyDelete
    Replies
    1. ஜனங்களால் தெய்வமாய் மதிக்கப்படுபவரே இப்படி செய்தால் என்னதான் செய்வது ?
      நன்றி

      Delete