சிறிய வயதில் காது குத்திய போது ...
தோடு வாங்கித் தராமல்
'வெளக்கமாத்து 'குச்சி குத்தி
ஏமாற்றிய அப்பாதான் ...
திருமணத்திற்கு மகளுக்கு தொண்ணூறு பவுன் நகையும்
மாப்பிள்ளைக்கு வைர மோதிரம் ,செயின் ,
பிரெஸ்லெட்டும் போட்டு அழகு பார்க்கிறார் !
தோடு வாங்கித் தராமல்
'வெளக்கமாத்து 'குச்சி குத்தி
ஏமாற்றிய அப்பாதான் ...
திருமணத்திற்கு மகளுக்கு தொண்ணூறு பவுன் நகையும்
மாப்பிள்ளைக்கு வைர மோதிரம் ,செயின் ,
பிரெஸ்லெட்டும் போட்டு அழகு பார்க்கிறார் !
|
|
Tweet |
வழக்கமா... நல்லது நடக்கட்டும்ன்னு சொல்வீங்க ?நிறைய விலைப் போட்டு மருமகனை வாங்குவதில் உங்களுக்கு உடன்பாடு இல்லை போலிருக்கிறதே !
ReplyDeleteநன்றி தனபாலன்ஜி !
மணவிழா என்பதே வியாபாரம் போல் தான் ஆகிவிட்டதே!
ReplyDeleteதங்களை பதிவர் சந்திப்பில் சந்தித்தபோது ..தங்களின் வெனிஸ் பயண அனுபவங்களை சுவையாக கூறினீர்கள் ,மறக்க முடியவில்லை !ஆனால் அங்கேகூட மணவிழா இப்படி வியாபாரம் ஆவதை பார்த்து இருக்க மாட்டீர்கள் ,சரிதானே அய்யா ?
Deleteநன்றி !
அது ஒரு காலம். இது ஒரு காலம்!!
ReplyDeleteஅது ஒரு காலம் ,இது ஒரு காலம் ...முடிஞ்சு போச்சுன்னே வச்சுக்குவோம் !ஒரு சிலர் 'தோடு' விடுவதை ,அதாவது 'காது குத்து'வதை விடும் காலம் எப்போ வரும் மேடம் ?
Deleteகாது குத்துனதுக்கு..சாரி ...கமென்ட் போட்டதிற்கு நன்றி ராஜி மேடம் !
தற்போதை தகப்பனார்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்...
ReplyDeleteஇவ்வளவு கொடுத்தும் கூட இன்னும் நிறைய குடும்பங்களில் பிரச்சனைகள் இருந்துக்கொண்டே இருக்கிறது...
ஆயிரம் காலத்துப் பயிர் இப்படி கண்ணெதிரே கருகிப் போய் கொண்டிருப்பதை காண்பதற்கு சகிக்கவில்லை ...ஓவர்டோஸ் உரம்போட்டால் பிரச்சினைகள் கூடுமே தவிர குறையாது போலிருக்கிறதே !
Deleteநன்றி சௌந்தர்ஜி !
திருமணச் சந்தை!
ReplyDeleteமாட்டு சந்தையை விட மோசம் திருமணசந்தை !மாட்டை விற்பவர்கள் கூட கைகளை துண்டால் மறைத்துக் கொண்டு விலை பேசுவார்கள் !
Deleteநன்றி குட்டன்ஜி!