29 September 2013

பூவின் மணம் பூவையருக்கு இல்லையென்றாலும் ....!

உள்ளூறும் ஓர் திரவம்  பூவிதழ்களின் வழியே 
வியர்வை போல் வெளியேறி ஆவியாகும் போது
நறுமணமாகிறது நம் நாசிக்கு  ...
மனிதனுக்கு இப்படியோர் இயற்கை மணம் இல்லைதான் ...
உழைப்பினால் உண்டாகும் வியர்வை நாறலாம்...
பூவின் மணத்திலும்மேன்மையானதுஅந்த நாற்றம் ...
அதுதான் வீடும் நாடும் மணக்க காரணம் !

14 comments:

  1. Replies
    1. நீங்கள் எங்களைப் போன்றோரை உற்சாகப்படுத்த உழைக்கும் உழைப்பும் அருமைதான் !
      நன்றி தனபாலன் ஜி !

      Delete
  2. உழைப்பின் மேன்மையை
    அருமையாகச் சொன்னீர்கள்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் உழைப்பும் என்னை உற்சாகப் படுத்துகிறது ரமணி ஜி !
      நன்றி !

      Delete
  3. உழைப்பாளியின் வியர்வை காயும் முன் அவனின் கூலியை அளித்துவிடு - நபி மொழி

    ReplyDelete
    Replies
    1. உண்மையான வாசகம் ...மதங்களை கடந்து அனைவரும் கடைப் பிடிக்கவேண்டிய நெறி !
      நன்றி அஜிஸ் ஜி !

      Delete
  4. உழைப்பாளியின் வியர்வை காயும் முன் அவனின் கூலியை அளித்துவிடு - நபி மொழி

    ReplyDelete
    Replies
    1. அந்த கூலிதான் உழைப்பாளியின் வியர்வையைத் துடைக்கும் ,அவனை சந்தோசத்தில் மிதக்க செய்யும் அற்புத கம்பளம் இல்லையா அஜிஸ் ஜி ?
      நன்றி !

      Delete
  5. உழைப்பாளியின் வியர்வை காயும் முன் அவனின் கூலியை அளித்துவிடு - நபி மொழி

    ReplyDelete
    Replies
    1. சம்பாதிக்க வியர்வை சிந்தும் உழைப்பாளியின் வயிற்றில் அடிப்பவர்கள் பாவத்தை சம்பாதிக்கிறார்கள் என்றும் சொல்லலாம் !
      நன்றி அஜிஸ் ஜி !

      Delete
  6. உழைப்பாளியின் வியர்வைக்கு மணம் அதிகம் தான்....

    ReplyDelete
    Replies
    1. இதை சொல்வதற்கு பொருத்தமானவர் நீங்கள்தான் ...காரணம், உங்கள் இன்றைய பதிவில் கண்ணைக்கவரும் பூக்களைப் போட்டு அசத்தி உள்ளீர்களே !
      நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete