பல் சொத்தையை சிமெண்ட் பூசி அடைக்கலாமென
நமக்கு புரியும்படி சொல்லி ...
அதற்கு ஐநூறு ரூபாய் செலவாகும்
எனக் கூறும் மருத்துவரிடம் ...
இதுக்கு ஒரு டீஸ்பூன் அளவு சிமெண்ட் கூட தேவைப் படாதேயென சொல்லமுடியாது ...
ஐநூறை அவர் கேட்கவில்லை ,அவர்மூலமாய்
நன்கொடை வசூல் பண்ணும்
|
|
Tweet |
ஆனாலு சுவத்துல பூசூறா மாதிரி அவ்வளவு ஈசி இல்லீங்களே இது? அவரோட வேலைக்கு குடுக்கறத விட அவரோட படிப்புக்குத்தான காசு குடுக்கறோம்? கவர்மென்ட் காலேஜ்லதா படிச்சிருந்தாலும் ப்ரைவேட் காலேஜ்ல படிச்சிருந்தாலும் எல்லாருமே ஒரே மாதிரியான ஃபீஸ்தான வாங்குறாங்க?
ReplyDeleteநீங்கள் சொல்வது சரிதான் ... செல்போனின் எடை நூறு கிராம் கூட தேறாது,விலையோ பல ஆயிரம் ரூபாய்!மெடீரியல் காஸ்ட் குறைவுதான் ,நாம் தரும் விலை டெக்னாலஜிக்கு என்பதைப் போல, பல் மருத்துவருக்கு நாம் தரும் கட்டணம் கல்லூரி நிறுவனர் வாங்கிய சிமெண்ட் மூட்டைக்கு கொடுப்பதைப் போலத்தான் இல்லையா ஜோசப் ஜி ?
Deleteநன்றி !
ஓ... அப்படி போகுதா கணக்கு?
ReplyDeleteடாக்டர் மொத்தமா கொடுத்து படிக்கிறார் ,நம்மகிட்டே கொஞ்சம் கொஞ்சமா வசூல் பண்றார் ...கொஞ்சமென்ன ?அதிகமாவே வசூல் பண்றார் ,இல்லையா அஜிஸ் ஜி ?
Deleteநன்றி !
டாக்டர்கிட்ட எப்படி சொல்லமுடியும் சிமெண்டின் விலையை... ஹா.ஹா..
ReplyDeleteநோயாளி புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சிமெண்ட்என சொன்னாலும் மருத்துவர் பயன்படுத்துவது ஒருவித வாக்ஸ்!விலை ஜாஸ்தியாய் இருக்கலாம் !
Deleteநன்றி கருண் ஜி !
சிமெண்ட் விலை ரொம்பவே ஜாஸ்தி.... :)
ReplyDeleteகுடுத்ததெல்லாம் திருப்பி வசூல் பண்ண வேண்டாமா.
சொத்தைப் பல்லை பிடுங்கி கொள்ள வந்தவரின் , சொத்தை பிடுங்கிக் கொள்ளாமல் இருந்தால் சரி !
Deleteநன்றி வெங்கட் நாகராஜ் ஜி !