26 September 2013

கல்யாண மொய் மணி ஆர்டரில் வந்திருந்தா வருத்தமில்லே!

''தந்தி சேவையை பத்து வருசத்திற்கு முன்னாடியே நிறுத்தி தொலைச்சிருக்கணும்னுவருத்தப் படுறீங்களே ,ஏன் ?''
''அப்போ நடந்த என் கல்யாணத்திற்கு முப்பது வாழ்த்து தந்தி வந்தது ...நான் இன்னும் இருபது வாழ்த்து தந்தி அனுப்ப வேண்டி இருக்கே !''

14 comments:

  1. Replies
    1. ஆளுக்கொரு ஒரு வருத்தம் ,இவரோட வருத்தத்தை நினைச்சா நமக்கே வருத்தமாத்தான் இருக்கு !
      நன்றி குமார் ஜி !

      Delete
  2. ஏன் வெறும் 3-4 வரிகளோடு ? இன்னும் எழுதலாமே!
    எத்தனை வலைகளை வாசிக்கிறீர்கள் ஜடியாவுக்கா பஞ்சம்.!...
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் தெரிஞ்சுப் போச்சா ...நான் வாசிக்கிறதெல்லாம்?
      ஜோக்காளி பிறந்து பத்து மாதம்தான் ஆகிறது .இப்போதுதான் நடக்க ஆரம்பித்து இருக்கிறான் ...உங்களின் கையைப் பிடித்துக் கொண்டு ஓராண்டு முடிவில் நிறைய நடக்க ஆரம்பிப்பான் !
      நன்றி கொவைக்கவி அவர்களே !

      Delete
  3. அடடா.....

    அதான் மெயில் இருக்கே! :)

    ReplyDelete
    Replies
    1. நம்மாளு செய்முறையை வந்த விதத்திலேயே செய்ய வேண்டுங்கிற 'நல்ல ' குணம் உடையவர் ஆச்சே !
      நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete
  4. Replies
    1. மொய்யை மெய்யா செய்யணும்னு நினைக்கிறதை பாராட்டியே ஆகணும் !
      நன்றி தனபாலன் ஜி !

      Delete
  5. இவங்களெல்லாம் வருத்தப்பட ஏதுமில்லையேன்னு
    வருத்தப்படுகிற சங்கத்தைச் சேர்ந்தவர்களாய்
    இருப்பார்களோ ?

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமா !சக உறுப்பினர்களின் வருத்தத்தில் பங்கெடுக்க வேண்டியது நம்ம கடமை ஆச்சே!
      நன்றி ரமணி ஜி !

      Delete
  6. மொய்யுக்கு மொய் – கேள்விப்பட்டு இருக்கிறேன். மணியார்டரில் வந்த மொய்யிற்கு மணியார்டர் மூலமே திரும்ப செய்ய வேண்டும் என்ற கவலை உங்களுக்கு.

    ReplyDelete
  7. நம்மாளுக்கு மொய் செய்யணும்னு கவலை கிடையாது .வாழ்த்து தந்தி அனுப்பின வெறும்பயகளுக்கு வெறும் தந்தி அனுப்ப முடியாமப் போச்சேங்கிற வருத்தம் தான் !
    நன்றி தமிழ் இளங்கோ அய்யா !

    ReplyDelete