1 June 2016

இந்த படத்தில் கமல் 'லிப் லாக் ' சீன் இல்லாமல் போகுமா :)

லேப்டாப்பை  விட செல்போன்  மோசமா :)                   
                  ''இனிமேல் ,மாணவர்கள் செல்போனைப் பள்ளிக்குக் கொண்டு வந்தால் பறிமுதல் செய்யப் போறாங்களாமே !''
                  ''லேப் டாப்பைக்  கொடுத்துட்டு செல்போனைப் பறிப்பது எந்த வகையில் நியாயம் ?''
வியாபாரியிடம் மனித நேயத்தை எதிர்பார்க்கலாமா :)
                 '' அந்த ஆட்டோ டிரைவரை , டாக்டர்   ஏன் அடிச்சு விரட்டச் சொல்றார் ?''
                  ''உங்க கிளினிக் வாசலில்  'பிரசவத்துக்கு இலவசம் 'னு  எழுதிப்  போட முடியுமான்னு கேட்டாராம் !''
இந்த படத்தில்  கமல் 'லிப் லாக் ' சீன் இல்லாமல் போகுமா :)
            '' கமல் சின்னப் பையனா இருக்கும் போது நடிச்ச  களத்தூர் கண்ணம்மா படத்தோட பார்ட் 2 வந்தால் என்ன பெயர் வைக்கலாம் ?''
              ''பெருங்களத்தூர் கண்ணம்மா !''
சோமலிங்கம் மகன் மாரின்னா ..சோமாறின்னு கூப்பிடலாமா ?
                ''ஏண்டா பாலு ,உன்னை ஸ்கூலில் சேர்க்கும் போதே ,உங்கப்பா சேவியர் ,உன்பேரை சே .பாலுன்னு  தமிழ்லே  பதிஞ்சது நல்லதா போச்சா ,ஏன்  ?''
                ''ஆமா ...X .பாலுன்னா ,சில  அகராதிகள் ,அப்பன் பெயர் தெரியாதான்னு கேட்டு இருப்பாங்களே !''
சிலர் நெஞ்சு முழுவதும் நஞ்சு ...காரணம் ?
எல்லோருக்கும் பிறப்பின்போதே ...
வெளியே தெரியும் நஞ்சுக்கொடி வெட்டப்பட்டுவிடும் !
ஒரு சிலருக்கு மட்டும் ...
நஞ்சுக் கொடி நெஞ்சுக்குழி வரை 
வேர்விட்டு பரவிவிடுமோ ?
மேற்கண்ட கருமை நிற  பதிவுக்கு ,சக பதிவர்கள் தந்த ரசனையான பின்னூட்டம்......
Jeevalingam Kasirajalingam
வயிற்றில தான்
தொப்புள் கொடி
நெஞ்சில வேர்விடுவது
காதல் கொடியோ?
Bagawanjee KAஆஹா ,இது அதை விட அருமையாய் இருக்கே !
Chokkan Subramanianஅந்த பார்ட்-2வில், நீங்கள் ஜெமினி கணேசனாக நடிக்கப் போகிறீர்களாமே, அப்படியா!!!
Bagawanjee KAஜோக்காளி கணேசன் என்று வேண்டுமானால் நடிக்கிறேன் ,அதுக்கு முன்னாலே, அந்த டேட்டில் பாலிவுட் கால்ஷீட் கொடுத்து இருக்கிறேனா என்று செக் பண்ணிக்கிறேன் !
Chokkan Subramanian"//பாலிவுட் கால்ஷீட்//" - இதெல்லாம் உங்களுக்கு ரொம்ப டூ,த்ரீ மச்.
Bagawanjee KAஎன் கூட நடிக்கிற ஹீரோயின் யார்னு தெரிஞ்சா ,'டூ மச்'சுக்கு பதில், மச்சமுள்ள ஆள்தான்னு நினைப்பீங்க !
King Rajவாச ரோஜா வாடிப்போலாமா? என்பதை இப்படிச்சொன்னார்களாம். "வா சரோஜா வாடிப் போலாமா?" .அந்த கதையா இல்ல இருக்கு சோமாறி x எல்லாம்.!
Bagawanjee KAஅடடா ,இந்த கதை அருமையா இருக்கே !
ஜீவலிங்கம் காசி ராஜலிங்கம் கவிதை பாடுகிறார் ,நீங்கள் கதை சொல்லுறீங்க ..நான் கொடுத்துதான் வைத்திருக்கணும்,இப்படிப் பட்ட சிந்தனை சிற்பிகளின் கருத்துரை பெற !
கோவை ஆவி//சோமலிங்கம் மகன் மாரின்னா ..சோமாறின்னு கூப்பிடலாமா //அப்போ குப்புசாமியின் மகன் ரங்கன் குரங்கனா? ;-)
திண்டுக்கல் தனபாலன்...அட...!
Bagawanjee KAஒண்ணு மட்டும் நல்லாத் தெரியுது ,யார் எந்த பெயரை மகனுக்கு வைக்க கூடாது என்று !
அட போடும் அளவிற்கு ,குரங்கன் நல்லாத்தான் இருக்கு ஆவி ஜி !
Mythily kasthuri renganஎன் கிளாஸ் ல அம்மு தேவி என்றொரு மாணவி , அவளை பசங்க எல்லாம் அ மூதேவி என்றே கூப்பிட்டு வம்பிளுப்பார்கள்:))) நலமா பாஸ்?
Bagawanjee KAமூதேவி என்றாலும் அருமை ...நீயா நானாவில் சொல்வது போல் ..அடுத்து அடுத்து என்று சொல்லத் தோன்றுகிறது !
என் நலத்திற்கு என்ன குறைச்சல் ?தினசரி மொக்கைப் போட்டு ஐநூறு பேரின் கழுத்தை அறுப்பதில் இருந்தே தெரியவில்லையா ?


12 comments:

  1. Replies
    1. கருத்து உரையாடலையும் தானே :)

      Delete
  2. கொடுத்ததெல்லாம் கொடுத்தார் அவர் யாருக்காகக் கொடுத்தார்‘... ஒருத்தருக்கா கொடுத்தார் இல்லை ஊருக்காகக் கொடுத்தார்...! ‘செல்’லும் இடமெல்லாம் தனக்கு நிகரில்லை என வெற்றி முரசு கொட்டிவரும்... ‘செல்’லுடன் செல்லாதே...!

    ‘பிற சவத்திற்கு’ இலவசம் என்று எழுதிப் போடலாமாம்...!

    ‘கொளத்தூர் கண் அம்மா...!’ என்று வைக்கலாமா...?

    சே...பா... சேப்பா வர்றாருன்னு எல்லாம் சொல்றாங்க...!

    ‘நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் - பெண்ணே நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்...’ என்றது இதைத்தானா...?

    த.ம. 1

    ReplyDelete
    Replies
    1. செல்லுடனே திரிந்தாலும் ஜோள்ளுடனே திரியாதேன்னு சொல்லலாமா :)

      ராசியான டாக்டர் போலிருக்கே :)

      கொளத்தூர் கண்மாய் என்று கூட வைக்கலாமே :)

      அது சரி நாமதான் 'சேப்'பா இருக்கணுமோ :)

      கொடியும் தீயைப் பற்ற வைக்குமா :)

      Delete
  3. லேப்டாப் வந்ததால் இந்த சிக்கல்?

    ReplyDelete
    Replies
    1. செல்போனில் பேசிகொண்டிருந்தால் கூட தெரிந்து விடும் ,மடியில் வைத்துக் கொண்டு லேப்டாப்பில் படம் பார்த்தால் வெளியே தெரியாதே ,எது மோசம் :)

      Delete
  4. ஹாஹாஹா! சூப்பர் ஜோக்ஸ்!

    ReplyDelete
    Replies
    1. மருத்துவம் வியாபாரமானது சோகம் தானே ஜி :)

      Delete
  5. 01. இதுக்கு அது பரவாயில்லையோ....
    02. பின்னே விரட்டாமல் என்ன செய்வார்
    03. ஹாஹாஹா ஸூப்பர் தலைப்பு
    04. உண்மைதானோ..
    05. ஹாஹாஹா கதகளிதான் போங்க...

    ReplyDelete
    Replies
    1. சின்னது மோசமா ,பெரியது மோசமா :)
      விஷ ஊசி குத்தாமல் போனாரே :)
      சின்னப் பையனாய் இருக்கையில் செய்யாத வேலையாச்சே இது :)
      இனிசியல் உன்னுது ,பிள்ளை என்னுதுன்னு பெண்டாட்டி சொன்னால் என்னாகும் :)
      கதகளியில் இந்த அபிநயம் உண்டோ :)

      Delete
  6. 1. அதானே....

    2. பேர்கள் ஹஹாஹ்ஹ்ஹ..

    அனைத்தும் ரசித்தோம் ஜி...

    ReplyDelete
    Replies
    1. இதுவும் அதானி குருப்பின் சதியா இருக்குமோ :)

      இவ்வளவு ரசனையான பின்னூட்டமிட்ட பஞ்ச பதிவர்களுமே இப்போது 'ஆக்டிவ்'வாக இல்லை !வலைப்பூ பக்கம் வருவதே பஞ்சமாகி விட்டது :)

      Delete