26 June 2016

மாப்பிள்ளையால் செய்ய முடிந்ததும்,முடியாததும் :)

 இதுக்கு சீல்  வைக்கிறது  யாரு :)               
               ''ரேசன் கடைக்கு  வந்து தராசையே பார்க்காத மாதிரி  உற்று உற்றுப்  பார்க்கிறீங்களே ,ஏன் ?''
                ''ஐந்து கிலோ சீனிக்கு ஐந்தரைக் கிலோ போடுறீங்க ,அதை வெளியே எடைப் போட்டா நாலரைக் கிலோதானே இருக்கு ?''

மாப்பிள்ளையால் முடிந்ததும்,முடியாததும் :)
                ''நான் செய்றது எல்லாமே தலைக்கீழா இருக்கா ,என்ன மாமா சொல்றீங்க ?''
            '' என் பொண்ணு முழுகாம இருந்தா பரவாயில்லை,போட்ட நகைங்க எல்லாம் அடகு வச்சு  முழுகிப் போச்சுன்னு சொல்றீங்களே !''

 மனைவி செலவாளின்னா பணத்தை எடுத்துதானே ஆகணும்:)
        ''என்னங்க ,பவித்ராங்கிற என் பெயரை ஏன் மாத்திக்கச்  சொல்றீங்க ?''
         ''பணத்தை வித் ரா பண்ணி முடிய மாட்டேங்குதே !''

காலம் செய்த கோலமடி !
ஆட்டோமேடிக் வாட்ச் வந்ததால் ... 
ஆட்காட்டி விரலும் ,கட்டை விரலும் செய்த வேலை நின்றுபோனது !
செல் போனில் டயம் தெரிவதால் ...
வாட்ச் வாங்குவதே  நின்று போனது !

18 comments:

  1. என்ன ஒரு திறமை!

    என்ன ஒரு கொடுமை!

    என்ன ஒரு பெருமை!

    ஆனாலும் வாட்ச் இல்லாமல் முடிவதில்லை!

    ReplyDelete
    Replies
    1. மகளிர் குழுவுக்கு இந்த திறமை எப்படி வருகிறதோ :)
      மாப்பிள்ளை டாஸ்மாக் பிரியரா இருப்பாரோ :)
      பெருமையும் பணியுமாம் ...:)
      பழக்கத்துக்கு அடிமைகள் தானே நாம் :)

      Delete
  2. ஐந்து கிலோ சீனிக்குதான் ஐந்தரைக் கிலோ போட்டேன்ல்ல... அதுல அரை கிலோ கழிச்சிக்கங்க... கூட்டிக் கழிச்சு பாருங்க கணக்கு சரியாத்தான் வருமுன்னு பார்க்கிறேன்...!

    ஒங்க பொண்ணு முழுகாம இருக்க... மருத்துவச் செலவுக்காக வச்ச நகைதான் முழுகப்போவுது...!

    பணம் இன்னைக்கு வரும்... நாளைக்குப் போகும்... பணம் என்னடா பணம் பணம்...!

    ஆவதும் அழிவதும் எல்லாம் ‘மணி’தானே...!

    த.ம. 3

    ReplyDelete
    Replies
    1. அவங்க தகிடுதத்தம் தெரிஞ்சு போச்சு ,அடுத்த தடவை ஐந்தரைக் கிலோ போடச் சொல்லணும் :)
      நல்ல காரியத்துக்கு உதவினா சரிதான் :)
      குணமும் நிரந்தரமா இருக்குமா :)
      ஆக்குவதும் அழிப்பதும்கூட மணிதான் :)

      Delete
  3. அடகு வைத்த நகைகள் முழுகாமல் இருக்க... என்று போஸ்டர் ஒட்டியிருப்பதை அந்த மாமனார் பார்க்க வில்லையோ???

    ReplyDelete
    Replies
    1. மீண்டும் மீட்க அவர்தான், மீண்டும் அழ வேண்டியிருக்கும்னு பார்க்காமல் போய் விட்டார் :)

      Delete
  4. 01. கூடுனதுக்கு சந்தோஷப்படுவோம், குறைஞ்சதுக்கு வருத்தப்படுவோம் ரெண்டும் சமமாயிடுமே...
    02. அதானே இவனெல்லாம் எப்படி.....
    03. கல்யாணத்துகு முன்பே தெரியலையா ?
    04. உண்மைதான் ஜி

    ReplyDelete
    Replies
    1. நானும் சந்தோசப் படுவேன் ,உங்களின் த ம வாக்கு விழுந்தால் :)
      பிள்ளைப் பெக்கப்போறானோ பேக்கப் ஆகப் போறானோ :)
      செலவு செய்யும் போதுதானே உறைக்குது :)
      சுவிஸ் வாட்ஸ் கம்பெனி எல்லாம் இருக்கா :)

      Delete
    2. எனது ஓட்டு காலையிலேயே விழுந்து விட்டதே ஜி

      Delete
    3. நேற்றைய பார்வைகளின்எண்ணிக்கை 1052 ஆனால் வாசகர் பரிந்துரைக்கு வருவதற்குள் தாலி அறுந்து விட்டது இப்போ கணக்கு டாலி ஆயுடுச்சு ,நன்றி :)

      Delete
  5. செல்ஃபோன் வந்தாலும் வாச்சின் மகிமை தனிதான் ஜி...

    பவித்ரா வித்ரா ஹஹஹஹஹ்

    ரசித்தோம்...ஜி

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ,கையில் கட்டியிருக்கும் வாட்ச் தனி கெட்டப்பை தருகிறது :)

      Delete
  6. ஐந்தரைக்கு நாலரைதான் வருகிறதா ஒரு கிலோவின் மாயம் என்ன. உற்று நோக்கினால் தெரியுமோ
    போட்ட நகைக்கு கணக்குக் கேட்கிறாரா மாமனார் .
    இருப்பது செலவுக்குத்தானே
    கடிகாரம் கட்டினால் காலத்தையே கட்டிய நினைப்பு சிலருக்கு

    ReplyDelete
    Replies
    1. தராசில் அவர்கள் செய்திருக்கும் தந்திரம் தெரியமால் போகுமா :
      அதானே ,அது யானை வாய் கரும்பாச்சே :)
      வரவுக்கு செலவு வந்தால் எங்கே போவது :)
      அதானே ,அது நடக்கிற காரியமா :)

      Delete
  7. சுவையான ஜோக்ஸ்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மாப்பிள்ளை செய்தது தவறுதானே :)

      Delete
  8. அனைத்தும் ரசித்தேன்...

    ReplyDelete
    Replies
    1. காலம் செய்த கோலதை ரசிக்க முடியுதா :)

      Delete