10 June 2016

பெண்டாட்டி கிளி மாதிரி இல்லைன்னா :)

 அன்பார்ந்த வலைப் பூ உறவுகளே ...        
            ஜோக்காளி இரு வார சுற்றுலாப் பயணம் செல்வதால் ,இனி ,மினி மீள் பதிவுகள் மட்டுமே வெளியாகும் ,வழக்கம் போல்  ஆதரவு  தர வேண்டுகிறேன்.நேரம் கிடைக்கும் போது நிச்சயம் பின்னூட்டப் பதில் தருவேன் ! 

பெண்டாட்டி கிளி மாதிரி இல்லைன்னா  :)
             ''கிளி மாதிரி பெண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரி ஒருத்தியை வச்சுக்கிறது தப்புதானே ?''
             ''இதிலே என்ன சந்தேகம் ?''
              ''எனக்கு அமைஞ்சதே குரங்கு மாதிரி ,நான் கிளி மாதிரி ஒருத்தியை வச்சுக்கிறதில் தப்பிருக்கா ?''

ஜெயிக்கப் போறது யாரு :)
          ''மாப்பிள்ளே ,என் பொண்ணுக்கு வாய் கொஞ்சம் நீளம் ,பக்குவமா நடந்துக்குங்க !''
         ''கவலையே படாதீங்க மாமா ,எனக்கும் கை கொஞ்சம் நீளம் !''

கிரிக்கெட்டை விட சியர்ஸ் கேர்ள்களின் டான்ஸ் பெட்டர் :)
கிரிக்கெட் ஜென்டில்மேன் கேம் தான் ...
நாட்டுக்காக விளையாட வேண்டியவர்கள்தான் ...
நோட்டுக்காக விளையாட ஆரம்பித்து விட்டார்கள் !

12 comments:

  1. சுற்றுலா வெற்றிகரமாக அமைய எமது வாழ்த்துகள் ஜி

    01. இந்த கேள்வி நியாயமாகத்தான் இருக்கு.
    02. பய, சமாளிச்சுடுவான்
    03. அவர்களும் கூத்தாடிகள் வகைதான்.

    ReplyDelete
  2. இருவாரம் ஒய்வு கிடைக்கிறதா? பலே... வாழ்த்துகள்.

    என்னவொரு கொனஷ்டையான வாதம்!

    ஹா.... ஹா... ஹா...

    இவர்கள் நோட்டுக்காக விளையாடுகிறார்கள். கர்ல்ஸ் பாட்டு இல்லாமலேயே ஆடுகிறார்கள்!

    ReplyDelete
  3. குரங்கிலிருந்து பரினாம வளர்ச்சிதானோ மனிதன்...?!

    மாப்பிள்ளே ,என் கத்திக்கு வேலை வச்சிடாதிங்க... இப்பவே கத்திச் சொல்லிட்டேன்...!

    ‘நோட்டா’வில போட வேண்டியதுதான்...!

    தங்களின் சுற்றுலாப் பயணம் இனிதாக அமைய வாழ்த்துகள்.

    த.ம. 2



    ReplyDelete
  4. //'கவலையே படாதீங்க மாமா ,எனக்கும் கை கொஞ்சம் நீளம் !''// அப்புடிபோடு

    ReplyDelete
  5. கனவனுக்கு கிளி சரின்னா... மனைவியும் ஒரு ஹீரோவை வச்சுக்கிறது தப்பில்லைதானே.....

    ReplyDelete
  6. கனவனுக்கு கிளி சரின்னா... மனைவியும் ஒரு ஹீரோவை வச்சுக்கிறது தப்பில்லைதானே.....

    ReplyDelete
  7. சூப்பர் ஜோக்ஸ்! சுற்றுலா சிறக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete