இது ஜோக்கில்லே ,உண்மையும் கூட :)
ஐஸ்வர்யாவை அறிமுகம் செய்த சங்கரை தெரியும் ,லங்கரைத் தெரிஞ்சுக்கலாமே !
வட இந்திய டூர் - பாகம் 2
முந்தைய பதிவில் வாகா பார்டர் சென்று பார்த்தோம் ,அடுத்ததா நாம செல்ல இருப்பது அதே பஞ்சாப்பில் இருக்கும் பொற்கோவிலுக்கு ! .
சீக்கியவரின் புனித தலமான அங்கே எல்லாரையும் அனுமதிப்பார்களா என்ற கேள்விக்கு கிடைத்த பதில் ...சாதி மதம் ,ஏழைப் பணக்காரன் என்று எந்த பேதமின்றி அனைவருக்கும் அனுமதி உண்டு என்றதால் ...இதோ இந்த முன் வாசல் வழியாக உள்ளே நுழைக்கிறோம் ...
உள்ளே நுழைந்ததும் கண்ணைப் பறிக்கும் தகதக தங்க நிறத்தில் கண்ணில் படுகிறது பொற்கோவில் ...
தெப்பக் குளத்தின் நடுவே கோவிலில் ஒரு பக்கம் மட்டுமே வாசல் .இரண்டு வரிசையாக மக்கள் ...ஒரு வரிசை மட்டும் வேகமாய் உள்ளே போய்க் கொண்டு இருந்ததால் அந்த வரிசையில் நான் நுழைந்தேன் ...
அங்கிருந்த தாடி வளர்த்து இடுப்பில் குர்பான் கத்தியுடன்இருந்த சீக்கிய பக்தர் ,என்னை அடுத்த வரிசைக்கு போகச் சொன்னார் ..காரணம் ,நான் நின்றது சீக்கியர்களுக்கு மட்டுமே உண்டான வரிசையாம் ...ஜாதி மத பேதம் இல்லாத இடத்தில் இப்படியுமா என்று பட்டது ..நம் கோவில் கர்ப்பக்கிரகத்தில் நுழைய வேறு மதத்தவர்களுக்கு அனுமதியே இல்லையே ..அதுக்கு இது பரவாயில்லை என்று மனதைத் தேற்றிக்கொண்டு உள்ளே நுழைந்தேன்...மூன்று மாடி அமைப்புடைய அந்த கோவிலில் சுத்தம் என்றால் அப்படி ஒரு சுத்தம் ...ஒரு சிலர் நடக்கக்கூட விடாமல் தரையை சுத்தம் செய்வதில் குறியாய் இருந்தார்கள் ..அது அவர்களுக்கு விதிக்கப் பட்ட தண்டனை என்றும் சொன்னார்கள் ,இப்படியும் நேர்ந்து கொண்டு சுத்தம் செய்வார்கள் என்றும் சொன்னார்கள் ...
உள்ளே எங்கேயும் உருவச் சிலை வழிபாடு இல்லை ,மத குருமார்கள் புனித நூலில் உள்ளதை ஓதிக் கொண்டு இருந்தார்கள் ,இருவர் பாடிக்கொண்டிருந்த பஜன் கீர்த்தனைகள் பொற்கோவில் வளாகம் முழுவதும் ஒலித்துக் கொண்டே இருந்தது !
இதுக்கு அப்புறம்தான் நமக்கு மிகவும் பிடித்த விஷயம் வருகிறது ,வேறொன்றுமில்லை , போஜனம்தான் !அந்த போஜனத்திற்கு பெயர் லங்கர் என்றார்கள் .பொற்கோவில் பின்புறம் இருக்கும் பெரிய ஹாலில் லங்கர் நடந்து கொண்டிருந்தது .லங்கரில் பரிமாறப் படுவது ரொட்டிதான் அதாவது சப்பாத்தி உடன் தாள்மக்கனி.(தாள்மக்கனி என்றதும் எனக்கு வந்த மாதிரி ,ஹிந்தி நடிகை மந்தாகினி உங்கள் நினைவுக்கு வரமாட்டார் என்று நம்புகிறேன் ) தினசரி லட்சம் பேருக்கு இங்கே இந்த தானம் கொடுக்கப் படுகிறதாம் லட்சத்தில் ஒருவராக நாங்களும் தின்று களித்தோம் .இங்கே ஒரு கண்டிஷன்,ரொட்டியை இரு கைகளையும் ஏந்தி நாம்தான் வாங்கிக் கொள்ளவேண்டும் ...
என்றும் அணையாத வள்ளலார் ஜோதியைப் போல் அங்கே பெரிய பெரிய அடுப்புகளில் சமையல் நடந்துக் கொண்டே இருந்தது ,பணியாளர்கள் சிலர்தானாம் ,எல்லா பணிகளையும் அங்கே வரும் பக்தர்கள் தான் செய்துக் கொண்டிருந்தார்கள் .காய்கறி நறுக்குவது ,எச்சில் தட்டு கழுவுவது போன்ற பல வேலைகளை நேர்ந்து கொண்டுவந்தவர்கள் செய்வதாக சொன்னார்கள் ..( நம் பக்தர்கள் நேர்த்திக்கடன் என்று மயிரைக் கொடுப்பார்கள் ,ஆட்டை அறுத்து
வயிறு புடைக்க தின்று தீர்ப்பார்கள் .அவர்கள் செய்வது அல்லவோ உண்மையான நேர்த்திக் கடன் ?)
பயணம் தொடரும் ...
=================================================================================
மஞ்சள் உதவுது திருமணத்திற்கும் திவாலுக்கும் !
''அவர் வியாபாரத்திலே திவால் ஆயிட்டார்னு சொன்னாங்க ,இப்ப பொண்ணோட கல்யாணத்தை ஆடம்பரமா செய்றாரே ,எப்படி ?''
''அந்த மஞ்சள் நோட்டீசில் சம்பாதித்ததை ,இந்த மஞ்சள் நோட்டீசில் செலவு பண்றார் !''
மக்களைக் காப்பதிலும் பூஜ்ஜியம்தானா ?
ஒவ்வொரு இயற்கை கோரத்தாண்டவமும் சொல்கிறது ...
முன் எச்சரிக்கை நடவடிக்கையில்...
இன்னும் இந்தியா 'பூஜ்ஜியம் 'கண்டுபிடித்த
மிதப்பிலேயே உள்ளது என்பதை !
''இனி மேல் அதிர்ச்சியான விஷயங்களை உங்க கணவரிடம் சொல்லக் கூடாது ,சரியா ?''
''நீங்க அவருக்கு போட்ட ஒரு ஊசியின் விலையே ஐம்பதாயிரம் ரூபாய் என்பதைக் கூடவா ,டாக்டர் ?''

|
|
Tweet |
01. ஊசியின் விலை ஆம்பதாயிரமாஆஆஆஆஆஆஆ
ReplyDelete02. நாளைக்கு வர்றேன் டூர் கதைக்கு..
03. நல்ல யோசனைதான்
04. உண்மைதான்
ஹார்ட் அட்டாக் வந்தால் உடனடியாக போடப்படும் ஊசியின் விலை அவ்வளவு தான் :)
Deleteஒண்ணும அவசரமில்லை :)
நாட்டிலே பலபேர்இப்படித்தானே பிழைத்துக் கொண்டு இருக்கிறார்கள் :)
இந்த லட்சணத்தில்வல்லரசு ஆகுமாம் :)
//நம் பக்தர்கள் நேர்த்திக்கடன் என்று மயிரைக் கொடுப்பார்கள், ஆட்டை அறுத்து தின்று வயிறு புடைக்க தின்று தீர்ப்பார்கள் .அவர்கள் செய்வது அல்லவோ உண்மையான நேர்த்திக் கடன்//
Deleteஉண்மையான வார்த்தை ஜி
தூய்மை இந்தியா திட்டம் என்று இதை வேண்டுமானால் சொல்லலாம் :)
Deleteஊசியின் காதில் ஒட்டகம் நுழைந்து விட்டதோ...?!
ReplyDeleteபசியைப் பஞ்சா(ப்) பறக்கவிடும் பொன்னாகப் பொதிந்த பொற்கோவில் பொன்றும் துணையும் புகழ்...!
மஞ்சள் பத்திரிக்கைதானே அவர் கொடுத்தது...?!
பூஜ்யத்தில் இருந்து கொண்டு ராஜ்யத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான்...!
த.ம. 3
ஆமாம் அந்த அதிசயமும் நடந்து விட்டது :)
Deleteதீவிரவாதிகள் பதுங்கிய இடமும் அதுதானா என்று எண்ணமும் வந்தது :)
ஆமாம் ஒண்ணு ஊருக்கு ,ஒண்ணு வீட்டுக்கு :)
என்னைக்கு புரிந்து கொள்ளப் போகிறதோ :)
ரசித்தேன் நண்பரே
ReplyDeleteதம +1
பொற்கோவில் அருமைதானே :)
Deleteஒரு ஊசி 50,000 ரூபாயா... அம்மாடி... படிக்கும் எனக்கே ஹார்ட் அட்டாக் வரும் போலவே...!!
ReplyDeleteஅனைத்தையும் ரசித்தேன் ஜி.
ஹார்ட் அட்டாக் வராம இருக்க எச்சரிக்கையா இருந்துக்குங்க :)
Deleteஎன்னது ஊசி விலை 50000 ருபாய் ஹார்ட் அட்டாக்
ReplyDeleteமஞ்சப் பத்திரிகை ஹஹஹஹ்
அனைத்தும் ரசித்தோம் ஜி
விலையைக் கேட்டாலே ஹார்ட் அட்டாக்கா :)
Deleteமஞ்சள் மங்களகரம்:)
ஊசியின் விலை தெரிந்தால் அவருக்கு உயிர் போய் விடலாம்
ReplyDeleteபொதுவாகவே சீக்கியக் கோவில்களில் லங்கர் உண்டு. குருத்துவாராவுக்கு ஆண்கள் போகும்போது தலையை கவர் செய்து கொண்டு போகவேண்டும்
தெரியாமலே இருக்கட்டும் :)
Deleteஆமாம் ,அதை சொல்லாமல் விட்டேனே :)
ஆஹா! ஐம்பதாயிரம் சொன்னா அதிர்ச்சியிலே போயிருவாரோ! சிலருக்கு ஆனந்த அதிர்ச்சியா கூட அமையலாம்!
ReplyDeleteஆனந்த அதிர்ச்சி ,செத்து பிழைத்து விட்டோம் என்றா :)
Delete//'அந்த மஞ்சள் நோட்டீசில் சம்பாதித்ததை ,இந்த மஞ்சள் நோட்டீசில் செலவு பண்றார் !''//
ReplyDeleteஎல்லாம் மஞ்சளின் மகிமை!!
சுவையான பயனுள்ள பயணக் கட்டுரை. நான் தொடர்வேன் பகவான்ஜி.
நமது முன்னோர்கள் தீர்க்கதரிசிகள் ,மஞ்சளின் மகிமையை உணர்ந்து சொல்லி இருக்கிறார்கள் :)
Delete,லங்கரைத் தெரிந்து கொண்டேன்.....
ReplyDeleteசீக்கிரமே அதை உண்ணும் பாக்கியம் வரட்டும் :)
Deleteபூஜ்யத்திலேயே இருக்கிறான் என்பதை சுட்டிகாட்டி விட்டீர்கள் நன்று
ReplyDeleteஇதுவும் பெருமைப் படக் கூடிய விஷயமா :)
Delete