18 June 2016

சைட் அடிக்காதே ...எச்சரிக்கும் நிறம் :)


இவரோட கொள்கைப் பிடிப்பு  யாருக்கு வரும் :)
             ''பிச்சைப் போடும் போது இடது கையை  பின்னாலே  வைச்சுக்கிறீங்களே ,ஏன்?''
             ''வலது கை கொடுப்பது  இடது கைக்கு தெரியக் கூடாதுன்னு நம்புகிறவன் நான்  !''

எளனியிலே நிறைய தண்ணி இருக்கணும்னு ஆர்டர் ,ஏன் ?
            ''நம்ம கணேஷ் வழுக்கை தலையால் நமக்கு ஒரு வகையிலே  லாபமா ,எப்படி ?''
            ''இளநீர் குடிக்கப் போனா 'நல்ல வழுக்கையா வெட்டுங்க 'ன்னு  சொல்ல விடாமல் , அவனே ஆர்டர் பண்ணிடுறானே !''

சைட் அடிக்காதே ...எச்சரிக்கும் நிறம் !
வேறெந்த நிறத்தைவிட ...
வெகுதூரத்திலும்  தெரியும் 'மஞ்சள் 'மகிமை யை ...
நமது முன்னோர்கள் உணர்ந்துதான் 
தாலிக் கயிறில்  மஞ்சள் பூசினார்களோ ?

9 comments:

  1. மூன்றையும் ரசித்தேன் ஜி!

    ReplyDelete
  2. கைதானே கொடுக்கிறீர்கள்...! கை கொடுக்கும் கை...!

    “தென்னை இளநீரின் பதமாக ஒன்று நான் தரவா இதமாக...” கடைக்காரின் கேள்விக்கென்ன பதில்...!

    மஞ்சள் கயிறு... மாஞ்சா கயிறாகுமுன்னு தெரியாதோ...!

    த.ம. 2

    ReplyDelete
  3. 01. ஒரு கை ஒடிந்தவன் என்ன செய்வான் ?
    02. முன்னெச்சரிக்கைவாதி
    03.ஸூப்பர் ஜி

    ReplyDelete
  4. இப்போது அப்படியான எச்சரிக்கை இல்லையே.....

    ReplyDelete
    Replies
    1. காலக்கொடுமை ...வேறென்ன சொல்ல :)

      Delete