13 June 2016

அய்யாவுக்கு இருக்கு ஆப்பு:)!

அது மல்டி ஸ்பெசாலிட்டி  ஆஸ்பத்திரியா இருக்குமோ :)           
          ''அந்த கண்டக்டருக்கு வாய்க் கொழுப்பு ஜாஸ்தியா ,ஏன் ?''
          ''லட்ச லட்சமா வச்சுகிட்டு இருக்கிறவங்க ,இந்த ஆஸ்பத்திரி ஸ்டாப்பிலே இறங்குங்கன்னு சொல்றாரே !''

அய்யாவுக்கு இருக்கு ஆப்பு :)
          ''அம்மா .நம்ம வேலைக்காரி பெயர் சித்ராதானே ?''
           ''ஆமாண்டா கண்ணு ,எதுக்கு கேட்குறே ?''
         ''சித்தின்னு சுருக்கமா கூப்பிட்டா  போதும்னு அப்பா ஏன் சொல்றாரு ?''

லைப் லாங் கியாரண்டி...
முதலில் உருவாகி கடைசியில் நிற்பது !
அதன் கியாரண்டி காலம் கூடுவதும் குறைவதும் ...
லைப் பார்ட்னரைப் பொறுத்து !

19 comments:

  1. 01.ஹாஸ்பிட்டல்காரருக்கு சொந்தமோ...
    02. சித்ராவுக்கும், சித்திக்கும் மூன்றெழுத்துதானே...
    03. ஸூப்பர் ஜி

    ReplyDelete
  2. ‘எல்.எம்.சி.’ன்னு பேரு இதுக்குத்தானோ...? நோயாளி எப்படியும் பிழைக்க வாய்ப்பில்லை... தப்பித் தவறிப் பிழைத்தாலும் பில்லைப் பார்த்தால் போய் சேர்ந்துதானே ஆகனும்...!

    சித்தின்னா கூப்பிடச் சொல்றாரு... சித்தன் போக்கு சிவன் போக்குன்னு அலையுறாரு... வரட்டும் மொத்தி எடுத்து... சித்தம் தெளிய வைக்கிறேன்...!

    லைப் பார்ட்னர்... லைப்ப பார்ட் பார்ட் பிரிச்சு மேய்றாரே...!

    த.ம. 2



    ReplyDelete
  3. சித்தி ஜோக் எவர்க்ரீன்!

    ReplyDelete
  4. மூன்று ஜோக்குகளும் முத்துக்கள்.

    அந்தக் காலத்துலேயே தஞ்சை கான்வென்ட் அருகே ஒரு தியேட்டர் இருந்தது. 11 ம் நம்பர் பஸ்ஸில் வரும் கண்டக்டர் தன நகைச் சுவையால் பயணிகளை ஈர்த்தவர்.

    ஒரு நாள்.....

    அந்த பஸ் அந்த நிறுத்தம் வந்த வுடன்,

    சினிமா பைத்தியம் எல்லாம் இங்கே இறங்குங்க.

    என்றார்.

    எஸ். சினிமா பைத்தியம் அன்று தான் ரிலீஸ் ஆகி இருந்தது.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
  5. ஆப்பு வாங்கப்போற அய்யா... அந்தய்யாவா? இந்தய்யாவா??

    ReplyDelete
  6. சித்ரா சித்தியாவது ரசிக்க வைக்கிறது

    ReplyDelete