சொன்னால் மட்டும் போதுமா :)
''நீங்களே டாக்டர் ,காய்ச்சல்னு எதுக்கு அடுத்த டாக்டரிடம் போறீங்க ?''
''செல்ப் மெடிஸின் சாப்பிடுறது தப்பாச்சே !''
முறைப் பொண்ணு அவ்வளவு லட்சணம் போலிருக்கு !
''ஓடிப் போற நம்ம பின்னாலே யாரோ தொடர்ந்து வர்ற மாதிரி இருக்கே !''
'' முறைப் பையன்தான் ,நீங்ககூட என் கழுத்துலே மூணு முடிச்சு போட மாட்டீங்கன்னு சந்தேகப் பட்டு பின்னாடியே வர்றார் !''
சென்ற 2014 வருடம் ,வலையுலகத்தை கலக்கிய தொடர் பதிவு ....நினைவுக்கு வருகிறதா ?என் பதிவினில் அதிகபட்ச கமெண்ட்களைப் பெற்றது அந்த பதிவு என்பதால் மீள்பதிவு செய்து மகிழ்கிறேன் ,ரசித்து மகிழ நீங்கள் தயாரா :)
மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் ....
(பத்து கேள்விகள் தொடர் பதிவு )
தொடர் பதிவாய் வலம் வந்த பத்து கேள்விகளின் மூலவர் அமெரிக்காவாழ்'மதுரைத் தமிழன் 'என்று நினைக்கிறேன் ...அவரின் இந்த கேள்விகளில் மாட்டிக்கொண்ட சகோதரி அம்பாளடியாள் அவர்கள் ,ஒரிஜினல் மதுரைவாழ் தமிழனான என்னிடம் கேள்விகளை தள்ளிவிட்டார் ...தான் பெற்ற இன்பம் (?)பெறுக இவ்வையகம் என்ற அவரின் பரந்த மனப்பான்மைக்குவாழ்த்துக்கள் !
சரி ,கேள்விகளைப் பார்ப்போமா ?இதென்ன கொடுமையா இருக்கு ?விருப்பமான ஐந்து கேள்விகளுக்கு பதில் சொன்னால் போதாதா ?
பத்துக்கும் பதில் சொல்ல வேண்டி இருக்கே !
1. உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக்கொண்டாட விரும்புகிறீர்கள்?
வழக்கம் போல மறந்துதான் !
2. என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
நீச்சலை ...ஏனென்றால் கற்றுக்க வேண்டியது கடல் அளவு இருக்கே !
3. கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?
தாலிக் கட்டின நேரத்திற்கு முன்புதான் !கிணறு என்று தெரிந்தே குதிக்கிறோமே என்று !
4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?
பவரா ?அது போன நாளைத்தான் வருசா வருஷம் திருமண நாள்னு கொண்டாடிக் கிட்டே இருக்கேனே !
5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன?
குழந்தைகளுக்கா .கல்யாணத்திற்கு வந்தவங்களுக்கா ?
6. உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?
உலகெங்கிலும் உள்ள பிரச்சினை ..இணையத்தில் என் மொக்கைகளையும் உங்களைப் போன்றவர்கள் படிக்க வேண்டியிருக்கே !இதைத் தீர்க்க ஒரே
வழி...இணையத்தை முடக்கி விடுவதுதான் !,ஏனென்றால் அது இருக்கும் வரை என் கையை கட்டிப் போடமுடியாதே !
7. நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
நான் கேட்காமலே எல்லோரும் அதைதானே செய்துக் கொண்டிருக்கிறார்கள் ?
8. உங்களைப் பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?
காமெடி பீசுக்கு இதுவும் விளம்பரம்தானே என்று நினைச்சுக்குவேன் !
9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
என்ஜாய் ...மனைவி ஊருக்கு...இல்லை இல்லை ...உலகத்தை விட்டே போயிட்டா என்று !என் நண்பர்
என்னை போலவே படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறாரே !
10. உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
அதாவது மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் தானே ?இப்ப செய்வதைத்தான் செய்துக்
கொண்டிருப்பேன் ..உங்க கழுத்தை அறுத்துக் கொண்டு !
அப்பாடா ...ஒரு வழியாய் பதில் சொல்லியாகி விட்டது ....:)
பயணிகளுக்கு இது வசதிதானே ?
''அந்த வீடியோ கோச் பஸ், மினி தியேட்டர் மாதிரியே இருக்கு !''
''ஆடியோ வீடியோ அவ்வளவு நல்லா இருக்கா ?''
''அது மட்டுமில்லே ,கண்டக்டர் இடைவேளை நேரத்திலே முறுக்கு ,கோன் ஐஸ் எல்லாம் வித்துக்கிட்டு வர்றாரே !''
ஹீரோக்கள் எல்லாம் வில்லனுக்கு முன்பே போய் சேர்ந்து விட்டார்கள் !
படத்திலே வில்லனாய் இருந்தாலும் ...
நிஜத்திலே அவரும் ஹீரோதான் !
எமனைக்கூட நெருங்க விடாமல் நீண்ட நாள் வாழ்ந்தார் ...
MN நம்பியார் !
|
|
Tweet |
01. வெவரமான டாக்டர்.
ReplyDelete02. முன்னெச்சரிக்கைகாரிதான்
03. ஸூப்பர் கேள்வி பதில் ஜி
04. அம்மா முறுக்கா ?
05. உண்மையில் ஹிரோதான்
அதான் செல்ப் மெடிஸின் வேணாங்கிராறோ:)
Deleteகழுத்துலே தாலி விழுந்தா சரிதான் :)
பதிலைக் கண்டு பிடிக்க உதவிய கேள்விக்குத்தான் நன்றி சொல்லணும் :)
விற்றால் தப்பா :)
ஜீரோக்களுக்கு புரிய மாட்டேங்குதே :)
என் பொண்டாட்டிதான் ஒரு நல்ல டாக்டரா பாருங்க... அப்பத்தான் காய்ச்சல் குணமாகும்ன்னு சொல்றா...! அவ பேச்சத் தட்ட முடியுமா...?
ReplyDeleteமுந்தானையில முடிச்சுப் போட்டது அவருக்குத் தெரியாதில்ல...!
முத்துக்கு முத்தாக... பத்துக்கு பத்தாக...!
இந்த பஸ்தான் தீயா வேலை செய்யும்...! படுத்துக்கிட்டே போய்ச் சேரலாம்...!
காலனே வாடா... உன்னைக் காலால் மிதிக்கிறேன்...!
த.ம. 2
மனைவியே டாகடர் மேல் அம்பிகை இல்லா தீர்மானம் கொடு வந்து விட்டார்களா :)
Deleteதெரியாமலே போனால் நல்லது :)
கேள்வி பதில் பிறந்து வந்தது சொத்தைக்கு சொத்தாக :)
எங்கே போய் சேரலாம் விளக்கமாச் சொல்லுங்க :)
எமனுக்கு mn அழைப்பா :)
மக்கள் அனைவரும் செல்ப் மெடிஸின்தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்!!
ReplyDeleteமீள் கேள்வி பதிலையும் ரசித்தேன்.
டாக்டரிடம் போனாலே ஐந்நூறு செலவாகி விடுகிறதே :)
Deleteஅனேகமாக டாக்டர்கள் தங்களுக்குத் தாங்களே மருத்துவம் பார்ப்பதில்லை
ReplyDeleteதாலிகட்டி ஓடறோமோன்ன பயத்திலா.?
மீள் கேள்வி பதிலும் நன்றாகத்தான் இருக்கிறது......!
தியேட்டருக்கு வெளியே தானே விற்பனை
அது ஏனென்று தெரியவில்லையே :)
Deleteபயமா ,இன்றாவது தாலி ஏறணுமே என்ற எதிர்பார்ப்பு :)
மறக்க முடியாத கேள்விகளா ,பதில்களா :)
விற்பனை அமோகம்தான் ,டிக்கெட் கட்டணத்தை விட :)
மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் .... மனைவி வச்சு இருக்கிறவங்க சொல்ல வேண்டிய பதிலு.. அதனால் இந்த பத்த கேள்விக்கும் பதிலுக்கும் எனக்கு பொருந்தாது... தட்ஸ்ஆல்......
ReplyDeleteகொடுத்து வச்ச மகராஜன்னு உங்களைத்தான் சொல்லணும் :)
Deleteநகைச்சுவையுடன் அழகான கருத்து கோர்வை நன்று
ReplyDeleteபத்தாவது கேள்விக்குரிய பதிலை ரசிக்க முடியுதா ,குப்புசாமி ஜி :)
Deleteடாக்டரே அப்படிச் சொல்லுறாரு ஆனா ஜி ம்ம்க்கள் தங்களுக்குத் தாங்களே டாக்டராகித்தான் இருக்காங்க
ReplyDeleteமீள் பதிவான கேள்வி பதிலை மீண்டும் ரசித்தோம்.
எம் என் நம்பியார் சூப்பர்...
மருத்துவம் என்பது மேட்டுக்குடி மக்கள் மட்டுமே சமாளிக்கக் கூடியதாக மாறி வருகிறது :)
Deleteஉண்மை வாழ்க்கையில் ஹீரோக்களுக்கு வில்லன்கள் தேவலைதானே :)
ReplyDeleteடெல்லியில் உண்டா இப்படி வீடியோ கோச் பஸ்:)
ReplyDelete