21 June 2016

பெண்டாட்டி கைமணம் புரிந்தது :)

               ''நாலு  நாள் ரயில் பயணம் போயிட்டு வந்ததில் இருந்து ,உன்  புருஷன் அதிகப் பிரியமா இருக்காரா ,எப்படி ?''
               ''ரயில்வே கேண்டீன்  அயிட்டம் டேஸ்ட் அப்படி !''
இந்த பையன் பரீச்சையிலும்  'முட்டை' தான் எடுப்பான் :)
             ''கோழி முட்டையிட்டு அடை காத்து குஞ்சு பொறிக்கும்னு சொன்னா, என் பையன் நம்ப மாட்டேங்கிறான்டி  !''
         ''எப்படி நம்புவான் ?நாமதான் முட்டையை  வடைச் சட்டியில் பொறித்து சாப்பிடக் கொடுத்து  விடுகிறோமே !''

நாய் வாலை நறுக்கி ,நாய்க்கே சூப்பு வைக்கலாமா ?
              '' கப்புலே வைச்ச சூப்பை ஒருசொட்டு விடாமே நக்கி நக்கி குடிக்கிற அந்த நாய்க்கு, உண்மை தெரிஞ்சா ...உன்னைக் கடிச்சே கொன்னுடுமா ,ஏன் ?''
               ''அதோட வாலை நறுக்கி வச்ச சூப் ஆச்சே !''

மனைவியும் மனோரஞ்சிதப் பூதான் !
காதலி மனைவியானதும் புரிந்தது ...
அவள் மனோரஞ்சிதப்பூவின் ஜாதியென்று !
தள்ளி நின்று ரசித்தபோது ...மணந்தாள் !
மணமான நெருக்கத்தில் தந்தாள் ...
தலைச்சுற்றலையும் மயக்கத்தையும் !


21 comments:

  1. அனைத்தையும் ரசித்தேன் ஜி.

    நீல நிறம். பயணத்திலிருந்து திரும்பி விட்டீர்கள் போல!

    ReplyDelete
    Replies
    1. நீல நிறம்தான் பயண நீளத்தைக் குறைத்து விட்டது :)

      Delete
  2. நிழலின் அருமையை தெரிய வைத்த வெ(ர)யில் பயணம் வாழ்க...!

    அப்ப... பையன் பொறியியல் வல்லுனரா வருவான்னு சொல்லுங்க...!

    தலை இருக்க வால் ஆ(ட்)டக்கூடாதில்ல...!

    இப்ப... மனைவிக்குத்தான் தலைச்சுற்றலும் வாந்தியும் மயக்கமுமாம்...!

    த.ம.1





    ReplyDelete
    Replies
    1. வெயிலும் தேவையா இருக்கே :)

      அவிச்ச முட்டையை தின்னா என்னாவான் :)

      நல்ல வேளை,நாய்க்கு பதிலா இவர் குடிக்காம போனாரே :)

      ஒவ்வொரு விசைக்கும் எதிர் விசை உண்டுதானே :)

      Delete
  3. 01. பயண அனுபவத்தை தடொங்கிட்டீங்க போலயே....
    02. குழப்பம்தான் வரும்
    03. ங்கிட்டு பீகார் போயிட்டு வந்தீங்களோ.....
    04. ஸூப்பர் கவிதை ஜி

    ReplyDelete
    Replies
    1. டீ, காப்பிக் கூடப் போடத் தெரியலை ,நம்ம ரயில்வே கேன்டீன்காரங்களுக்கு :)
      முட்டையில் உயிர் இருப்பது தெரியாமல் ,முட்டைமேலே உயிராய் இருக்கானே :)
      நல்ல வேளை சொன்னீங்க ,இனிமேல் போவதாய் இல்லை :)
      படிச்சாலே மயக்கம் வந்திருக்கணுமே:)

      Delete
  4. //அதிகப் பிரியமா...//

    அடிக்கடி ரயில் பயணம் நல்லதுன்னு தெரியுது!

    ReplyDelete
    Replies
    1. யாருக்கு ?சுமாராக சமைக்கத் தெரிந்த மனைவிமார்களுக்கு :)

      Delete
  5. வீட்டில் பெண்டாட்டி கைமணம் புரிந்தது சரி... ஹோட்டலில்... கைமணம்???

    ReplyDelete
    Replies
    1. ஹோட்டலில் மோசம் என்றால் வேறு நல்ல ஹோட்டலைத் தேடிக்கலாம் ,சுற்றுலாவை மேம்படுத்த வேண்டிய ரயிலில் சாப்பாடு இவ்வளவு மோசம் என்றால் ,ஓடும் ரயிலில் இருந்து குதிக்கவா முடியும் :)

      Delete
  6. Replies
    1. பெண்டாட்டி கைமணம் அருமைதானே :)

      Delete
  7. அனைத்தையும் ரசித்தேன். கைமணத்தை சற்றே அதிகமாக.

    ReplyDelete
    Replies
    1. கட்டியவள் கைமணம் போல் வேறேதும்வருமா :)

      Delete
  8. அனைத்தும் அருமை சார்...

    ReplyDelete
    Replies
    1. மணமான நெருக்கத்தில் தந்தாள் ...
      தலைச்சுற்றலையும் மயக்கத்தையும் !
      இந்த வரிகளின் அர்த்தம் புரிந்ததா ஸ்ரீராம்ஜி :)

      Delete
  9. ஹாஹாஹா! பயணத்தையே குறைக்க செய்த ரயில்வே சமையல்! நஷ்டம் அவங்களுக்குத்தான்! லாபம் எங்களுக்கு! தினம் புதுசு புதுசா ஜோக் கிடைக்குமே!

    ReplyDelete
    Replies
    1. வலையுலகத் தொடர்பு இல்லாமல் எதையோ இழந்தது போல் இருந்தது !செல் மூலமாய் ,நன்றின்னு ஒருதரம் போட்டால் மூன்று தரம் பப்ளிஷ் ஆனது :)வழக்கமான மறுமொழியை டைப் செய்ய முடியாமல் போனது ,வருத்தம் அளிக்கிறது !

      Delete
  10. சுவைத்தேன்

    ReplyDelete
    Replies
    1. ரயில்வே கேண்டீன் அயிட்டங்களை சுவைக்க முடியவில்லையே அய்யா :)

      Delete
  11. ரயில் கேட்டரிங் மோசம்தானே ?உங்க அனுபவம் எப்படி :)

    ReplyDelete