3 June 2016

ம'னை 'வி என்றாலே சந்தேகம்தானா :)

நாணயம் உள்ளவர்கள் வருந்த மாட்டார்கள் :)               
                 ''நாணயங்கள் ஒழிந்ததால்  ,அந்த டாக்டர் வருத்தப் படுகிறாரா ,ஏன்  ?''
                 '' காசை  விழுங்கிட்டான்னு  எந்த கேஸுமே இப்போதெல்லாம் வர்றதில்லையாமே!''
தலைவர் பேச்சில் உள்குத்து தெரியுதே :)
               ''கண்ணகி பரம்பரையில் வந்தவர்கள் நாம்னு தலைவர் அடிக்கடி சொல்றாரே ,ஏன் ?''
                ''தன்னைக் கைது செய்தால் ஊரே எரியும்னு மறைமுகமா சொல்றாரோ ?''
ம'னை 'வி என்றாலே சந்தேகம்தானா :
         " மனைவிக்கு எத்தனை சுழி'ன' போடணும்னு அவர் கிட்டே  கேட்டது தப்பா போச்சா ,ஏன் ! "
         " முதல் மனைவியா,  இரண்டாவது மனைவியான்னு  கேட்கிறாரே  !''
படிக்காவிட்டால் காசு போய்விடும் :)
          ''புத்தகத்திலே  செல்லுபடி தேதின்னு புதுசா போட்டு இருக்காங்களே ,ஏன் ?''
          ''மேஜிக் மாஸ்டர் எழுதிய அந்த புத்தகத்தை  பத்து நாள்லே படிக்கலேன்னா , எழுத்துக்கள் மாயமா மறைங்சுடுமாம் !''
ஆணின் ஆசைக்கும் எல்லை உண்டா ?
தான் விரும்பும் ...
பெண்ணின் மனதில் உள்ளதை படமாய் பார்க்க நினைக்கிறது ...
அவள் கனவினை 'வீடியோ 'வாய்  பார்க்க நினைக்கிறது !

12 comments:

  1. 01. கவலை அவருக்கு...
    02. நிறையப்பேரு இப்படித்தான் பேசுறாங்கே....
    03. நாலு சுழி போடலாம்
    04. அடடே இப்படியுமா ?
    05. ஸூப்பர் உண்மை ஜி

    ReplyDelete
    Replies
    1. இருக்கத்தானே செய்யும் :)
      நான் கூடவா :)
      நாலு பேர் கடைசியில் அல்லவா தேவைப்படுவார்கள் :)
      உடனே படிக்க வைக்க இதானே வழி:)
      நிறைவேறாத எண்ணம், அப்படித்தானே :)

      Delete
  2. நாணயம் இல்லாத நாணயம் இதுதானோ...?

    ஊரை எரித்து உலையில் போட்டது கண்ணகிதானே...!

    எதற்கெடுத்தாலும் சந்தேகம்தானா...?

    இந்த வருஷம் அந்த புத்தகத்தையே எங்களுக்குப் பாடமா வைங்க...!

    வாய்‘தா’ கேக்க வேண்டியதுதானே...!

    த.ம. 3

    ReplyDelete
    Replies
    1. நாணயங்களை ஒழித்த அரசும் நாணயமா நடந்துக்கிற மாதிரி தெரியலே :)

      தனி மனித பிரச்சினைக்காக ஊரை எரிப்பது எப்படி நியாயமாகும் :)

      சந்தேகம் என்னும் சரக்கு ...:)

      பத்து நிமிஷத்தில் படித்து,வருஷம் முழுதும் ஞாபகத்தில் இருக்குமா :)

      அடிக்கடி வாய்தா கேட்பது ஆபத்தாச்சே :)

      Delete
  3. நாணயமான அரசு!

    என்ன ஒரு சாதுர்யம்! புரியறவங்களுக்குப் புரியும்!

    அப்போ மூன்றாது மனைவிக்குத்தான் மூணு சுழி போட முடியும்!

    ஆ!

    ம்ம்...

    ReplyDelete
    Replies
    1. அதனால்தான் ஏழைகளிடம் சில்லரையும் இருக்ககூடாதுன்னு நினைக்கிறதோ :)

      கொடியோடு வா என்றால் ,தடியோடு வர்றவங்களுக்கு புரியாமல் போகுமா :)

      இது தர்மமில்லை:)

      வாங்கிட்டு படிக்காமல் இருப்போர் கவனம் தேவை :)

      அடுத்தவர் கனவை பார்ப்பதே சாத்தியம் இல்லாத விஷயமாச்சே:)

      Delete
  4. கேஸூவராதேன்னு கவலை...

    தலைவர்கள் பேச்சில் எப்போமே உள்குத்து இருக்கும்.. ஆனா...வலி மட்டும் அவர்களுக்கில்லை...

    மனைவியின் கணக்கு எத்தனையோ அத்தனை சுழி போட்டால்....போச்சு மற்றவர்கள் அறிந்து கொள்வார்கள் அல்லது அரிந்து கொல்வார்கள்

    மாஜிக் மாஸ்டரே புத்தகத்தை வச்சுக்கிட்டா...வசதியா போயிடும்..ஹிஹி....

    பார்த்த பின்னாடி ஏன்டா பார்க்க ஆசைப்பட்டோம்னு ஆகிடுச்சுன்னா பரவாயில்லை....செயல் படுத்தாமல் சும்மா..ஆ...பார்த்தா எப்படி...?

    ReplyDelete
    Replies
    1. நேற்று .என் தள பார்வைகளின் எண்ணிக்கை 715,இன்று அதை தாண்ட வேண்டுமே என்று நானே நினைக்கும் போது ,புவ்வாவுக்கு தொழில் செய்யும் அவர் கவலைபடத்தானே செய்வார் :)

      வலி சுமக்கத்தான் மக்கள் இருக்கிறார்களே :)

      தசரதனுக்கு அறுபதாயிரம் மனைவிகளாமே ,அவறென்ன செய்வார் :)

      எழுத்து போனாலென்ன ,நோட்டா பயன்படுத்திக்கலாமே :)

      இப்படி ஒரு ஆபத்து இருக்கா ?அப்படின்னா ,சும்மா இருப்பதே சுகம் :)

      Delete
  5. சில்லறை கேஸை மட்டும் பார்க்கிற டாக்டர்னா கஷ்டம்தான்! சிறப்பான ஜோக்ஸ்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நோட்டு முழுங்கிற டாக்டர்கள் பாடு பரவாயில்லை ,இவர் என்ன செய்வார் ,பாவம் :)

      Delete
  6. அடடே..இப்படியும் சுழி பொடலாம் போலிருக்கே....!!!

    ReplyDelete
    Replies
    1. சொல்லாமலே ,இரண்டாவது மனைவி என்பது புரியும் என்றால் ,இன்னொரு மனைவியும் வருவாரே :)

      Delete