20 June 2016

காதல் வந்தால் கவிதை எப்படி:)


 அதெல்லாம் அந்த காலம் :)            
            ''ஒலி கேட்டேன்  வழி கொடுத்தேன்   கொலுசு சத்தம்னு  நான் எழுதியது ,ரொம்ப காலத்துக்கு முந்தின்னு  எப்படி கண்டுபிடிச்சே ?''  
             ''இப்போதான் ஏர் ஹாரன் அடித்தாலும் உன் காதுலே விழ மாடேங்குதே !'' 

வீட்டுச் சண்டையை நாட்டுச் சண்டை ஆக்கலாமா ?
            ''அரசே,பக்கத்தில்  இருப்பது எல்லாம் நட்பு  நாடுகளாச்சே ,வம்புச் சண்டைக்கு ஏன்  போகணும் ?''
                ''அந்தப்புரத்தில் நடக்கிற சக்களத்தி சண்டையை காணச்  சகிக்கலையே !''

காதல் வந்தால் கவிதை எப்படி?
மண்ணில் விழும் விதைகள் யாவும் முளைப்பதில்லை ...
காதலில் விழும் மனதில் எல்லாம் கவிதை முளைக்கிறதே ,எப்படி ?

13 comments:

  1. அதுக்கும் வயசாகுதுல்ல...! காது கேக்காது...!

    வந்த சண்டைய விடனுமுல்ல...!

    பயிர்கள் முளைக்கிற போதே களைகள் முளைப்பதில்லையா...?!

    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. காது கேட்குது ரசனைதான் காணாம போயிடிச்சு :)

      அரசரே ,அந்தப் புரத்தை தாரை வார்த்து விடுவாரோ :)

      களைகளும் ரசிக்கும்படியா இருக்கே :)

      Delete
  2. ஹா.... ஹா.... ஹா....

    மாத்து மாத்துன்னு மாத்தி யோசிக்கிறாரா மன்னவர்?!!

    எப்படி?


    ReplyDelete
    Replies
    1. அந்தப்புரத்தில் மாத்து வாங்கி முடியவில்லையோ :)

      Delete
  3. Replies
    1. ஹாரன் சத்தம் அருமைதானே :)

      Delete
  4. 01. நல்ல கண்டுபிடிப்பு
    02. இதுக்கெல்லாம் போரா ?
    03. ஸூப்பர் ஜி

    ReplyDelete
    Replies
    1. கொலுசு சத்தம் வயசுலே மட்டும்தான் கேட்குமோ :)
      பெரிய அக்கப் போரா இருக்கே :)
      உங்களுக்கும் கவிதை பூத்து இருக்கா :)

      Delete
  5. அங்கேயும் பல விதைகள் முளைப்பதில்லை.. அப்படியும் மீறி முளைத்தால் சங்கர் கௌசல்யா போல முறித்து விடுவடுகிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. முறித்தாலும் ,உலகம் அவர்கள் காதலை மறக்கவில்லையே :)

      Delete
  6. கவிதை வருமா காதலில்[[ ரசித்தேன் ஜீ!

    ReplyDelete
    Replies
    1. நானும்உங்கள் வலைப்பூவில் ,காதல் என்ற உணர்வு ஒருவனுக்கோ ,யுவதிக்கோ ,உள்ளத்தில் காதல்வேதம் என பூப்பது எப்போது ? என்கிற உங்களின் ஆராய்ச்சியை ரசித்தேன் :)

      Delete