9 June 2016

சினிமா கவர்ச்சி யாரை விட்டது :)

 நமக்கு தேவை பணம்தானே:)          
               ''தலைவரே ,5௦௦ கோடிக்கு ஆசைப் பட்டு  அந்த அணியில் சேர்ந்தோமே ,ஒரு தொகுதியிலேயும் ஜெயிக்க முடியலியே !''
                ''ஜெயிச்ச பிறகு சம்பாதிக்க வேண்டியதை ,ஜெயிக்காமலே சம்பாதிட்டோமேன்னு சந்தோசப் படுங்க !''


ஆறடி நிலமே சொந்தமடா :)            
             ''செத்து போன உங்க வீட்டுக் கோழியைப்  புதைக்கவா , இவ்வளவு பெரிய குழி வெட்டுறீங்க ?''
            ''என்ன செய்றது ,செத்த கோழி உங்க வயிற்றிலே இருக்கே !''

 நகையும் ,லோனும் கொடுத்தா வேண்டாம்னா இருக்கு ?           
         ''நீங்க கேட்ட ஜூவல் லோன் பணத்தை எதுக்கு நகைங்க மேலே வைச்சு தரச்சொல்றீங்க ?''
        ''நீங்கதானே நகைங்க மேலே லோன் தரப்படும்னு சொன்னீங்க ?''

 வெங்காயம் நறுக்கித் தந்த வெறுப்போ :)
      ''ஏன்யா சர்வர் ,சாம்பாரிலே அழுகிப் போன வெங்காயமா கிடக்கு  ,கூப்பிடுய்யா உங்க முதலாளியை !''
      ''கொஞ்சம் பொறுங்க ..வீட்டுக்குச் சாப்பிடப் போயிருக்கார் !''
சினிமா கவர்ச்சி யாரை விட்டது :)
சினிமாவின் வலிமை அபரிமிதமானது ...
'திரைப் படச் சுருளை தீக்குச்சிகளுக்கு தின்னக் கொடுப்போம் 'என்ற 
கோபக்கார கவிஞனைக் கூட பாடல்  எழுதவைத்து 
தேசிய விருது வாங்கிக் கொடுக்கும் !

12 comments:

  1. ஜெயிச்ச பிறகு அவ்வளவுதான் சம்பாதிக்க முடியுமா என்ன!

    ஏன்?


    ஹா.... ஹா.... ஹா...

    //வீட்டுக்கு சாப்பிடப் போயிருக்கார்//

    சரிதான்!

    ம்ம்...

    ReplyDelete
    Replies
    1. தோற்று சம்பாத்தித்தது போதாதா :)

      அடுத்த வீட்டுக் கோழி அவர் வயிற்றுக்குள் இருக்கே :)

      இப்படியும் ஆசை :)

      அவர் மட்டும் தப்பிக்கணும் :)

      நல்லா சம்பாதிக்கட்டுமே ,எழுத்தாளர்களுக்கு பெருமைதானே :)

      Delete
  2. தெருக்கோடிக்கு வந்தாச்சு... அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டாச்சு...!

    கோழி குருடானாலும் குழம்பு ருசியா இருக்கே...!

    நகையை விட பணம் மேலானதுன்ன காட்டத்தான்...!

    அழுகிப் போன வெங்காயமா கொடுத்தது அவுங்க வீட்டுக்காரம்மாதான்...!

    வைரத்தை வைரத்தால்தானே அறுக்க முடியும்...!

    த.ம. 2





    ReplyDelete
    Replies
    1. பழம் நழுவி பாடையில் விழுந்து விட்டதோ :)
      ஓசி கோழின்னா ருசியா இருக்கத்தானே செய்யும் :)
      அப்படியே ஆகட்டும் :)
      ஓ நல்லது மட்டும் வீட்டுக்கா :)
      அடடா ,இப்படியுமா பொருத்தமா சொல்ல முடியும் :)

      Delete
  3. Replies
    1. சின்ன வெங்காயம் டேஸ்ட்தானே :)

      Delete

  4. ''ஜெயிச்ச பிறகு சம்பாதிக்க வேண்டியதை ,ஜெயிக்காமலே சம்பாதிட்டோமேன்னு சந்தோசப் படுங்க !''/ எப்படி.?
    ஒரு கோழியின் மதிப்பு ஆறடி நிலமா ?
    நகையும் லோனுமா ,நகைக்கு லோனா.
    இது கொஞ்சம் பழசில்ல/
    !'





    '

    /
    ''

    ReplyDelete
    Replies
    1. மூன்றாம் அணி என்பதே aடீமோட b டீம் என்பது சரியாக போச்சே :)
      பக்கத்துக்கு வீட்டு கோழியை அவர் அடித்த் சாப்பிட்டு விட்டார் என்பதை மறைமுகமா சொல்ல வந்தேன் :)
      ஒரே குழப்பமாயிருக்கே :)
      கொஞ்சம் இல்லே ,நகை ரொம்பவே பழசு :)

      Delete
  5. 01. உண்மையான வார்த்தை
    02. குழப்பமாக இருக்கே... ?
    03. உண்மைதான்
    04. விபரமான முதலாளி
    05. அருமை ஜி

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கு கிடைக்க வேண்டியதை கட்சிகள் பங்கு பிரித்துக் கொள்கிறார்களே என்று மூன்றாம் அணியை புறக்கணித்து விட்டார்களோ :)
      உங்களுக்குமா :)
      லோனும் கொடுத்து நகையும் கொடுத்தா வங்கி திவால்தான்:)
      இல்லேன்னா பிழைப்பை ஓட்ட முடியுமா :)
      அவர் காட்டுலே மழைதான்:)

      Delete
  6. ஜெயிச்சு சம்பாதிக்கறதைவிட தோத்து சம்பாதிக்கிறது தான் இப்ப பேஷன் போல! அருமையான நகைச்சுவைகள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. அரசியல்லே இப்படியும் நடக்கும் :)

      Delete