22 June 2016

பார்க்கக் கூடாததைப் பார்த்தா ,இப்படித்தான்:)

 நல்ல வேளை,உருப்படியா வருதே :)           
                 ''ரயில் நேரத்தில் வருமா ?''
                ''வராது ,தண்டவாளத்தில் தான் வரும் !''

பழமொழி பொருத்தம்தானே :)
            '' என்னைப் பார்த்தா ,யானை வாங்க காசிருக்கு ,அங்குசம் வாங்க காசில்லைங்கிற பழமொழி ஞாபகம் வருதா ,ஏண்டா ?''
             ''புது பைக் வாங்கிட்டு ஹெல்மெட் வாங்க காசில்லைன்னு சொல்றீயே !''

பார்க்கக் கூடாததைப் பார்த்தா ,இப்படித்தான் :)
          ''உன் மனைவி உன் மூஞ்சியிலே குத்துவிடும் போது, டிவியிலே என்ன பார்த்துகிட்டு இருந்தே ? ''
           ''குத்துப் பாட்டுக்களைதான் !''
ருசி ....புரிந்ததும் புரியாததும் :)
வாய்க்கு ருசியா ஆயிரம் அரிசி ரகங்களை உண்டாலும் ...
வாய்க்கரிசி பாசுமதியா ,ரேசன் அரிசியா என்று  புரியப் போவதில்லை !

18 comments:

  1. ஹா ஹா ஹா ... வாய்க்கரிசியை வடிவுக்கரசி என்று படித்துவிட்டேன்

    ReplyDelete
    Replies
    1. வடிவுக்கு அரசியை இப்படி ஆக்கலாமா :)

      Delete
  2. ரசித்தேன் ஜி!

    மனைவியின் குத்துக்கு காரணம் புரிந்தது.

    கடைசித் தத்துவம் ரசிக்க வைத்தது.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீ ராம்ஜி ,உங்களையும் முந்திக் கொண்டு விட்டார் இன்னொரு ஸ்ரீ ராம்ஜி ,கவனித்தீர்களா :)

      சீனா தானா பார்க்கப் போய் காணாமல் போயிருப்பாரோ :)

      பந்தா பேர்வழின்னா ,அப்பவும் பாசுமதி போடச் சொல்லியிருப்பாரோ :)

      Delete
  3. Replies
    1. ரயில் நேரத்துக்கு வராவிட்டாலும் ,தண்டவாளத்தில் வருவதை ரசிக்க முடியுதா:)

      Delete
  4. 01. நல்ல பதில்
    02. ஆஹா...
    03. சரிதான்
    04. ஹாஹாஹா

    ReplyDelete
    Replies
    1. ஒன்று நிச்சயம் ,இன்னொன்று அநிச்சயம் :)
      ஹெல்மெட் வாங்கிய பலரும் போட்டுக் கொள்வதாய் தெரியலையே :)
      சரமாரி குத்துதான் :)
      பிணத்து வாயில் ஈ நுழைந்தாலும் தெரியவா போவுது :)

      Delete
  5. தண்ட(ம்)... வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறாமல் இருந்தால் சரி...!

    மாடு வாங்கிட்டு... சாட்டைக்குச்சி வாங்க முடியலைன்னு சொல்லுங்க...!

    ‘சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்... சிருக்கி சிருக்கி மக தானா போன டோய்...’ அப்பத்தான் குத்து...!

    வாய்க்கு(ம்) அரிசி... இதற்காகத்தானே ஆசைப்பட்டாய்...!

    த.ம. 5

    ReplyDelete
    Replies
    1. தண்டவாளத்தில் இருந்து ரயில் பிளாட்பார்மில் ஏறாமல் போனாலும் சரிதான் :)

      மாடு ,சாட்டைக் குச்சிக்குதானே கட்டுப்படும் ,மிகவும் அவசியமாச்சே :)

      சரியான குத்து (பாட்டு )தானே :)

      இதுக்கு ஆசைப் படவே வேண்டாம் ,எல்லார்க்கும் வாய்க்கும் :)

      Delete
  6. ரயில் நேரத்துக்கு தண்டவாளத்தில் வந்தால் சரிதான்
    ஹெல்மெட் வாங்காவிட்டால் என்ன தலைதானே உடையும்....!
    மனைவி என்ன பார்த்துக்கிட்டு இருந்தாள்
    வாய்க்கரிசியும் எதற்கு வேஸ்ட்

    ReplyDelete
    Replies
    1. இரண்டில் ஒன்றுதானே சாத்தியமா இருக்கு :)
      தலை போனாலென்ன சாகத்ததானே போகிறார் :)
      அழுதுக் கொண்டிருந்தார் சீரியலைப் பார்த்து :)
      அதானே ,ரேசன் அரிசியே பெஸ்ட்:)

      Delete
  7. குத்து பாட்டு பார்த்தா குத்து வாங்க வேண்டியதுதான்! பயண பாதிப்பு இன்னும் அகலவில்லை போல!

    ReplyDelete
    Replies
    1. சென்சார் செய்த பாட்டைக் கூட பார்க்கிற ,இந்த சுதந்திரம் கூட இல்லேன்னா எப்படி :)
      களைப்பு நீங்கி விட்டது ,கலாய்த்தல் தொடர்கிறது :)

      Delete
  8. நல்ல எச்சரிக்கை மனைவி இருக்கும்போது...பார்க்கக் கூடாததைப் பார்க்கக்கூடாது...

    ReplyDelete
    Replies
    1. இல்லாத நேரத்தில் எதை வேண்டுமானாலும் பார்த்துக்கலாமா :)

      Delete
  9. வாய்க்கரிசி.... செம தத்துவம்!

    ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. காலம் பூரா வேக வைத்து சாப்பிடுகிறோம் ,வேகாத அரிசிக்கு பெயர் மட்டும் வாய்க்கரிசியாம் ,என்ன நியாயம் ஜி :)

      Delete