5 July 2017

இளம்மனைவியின் முதல் வார்த்தை :)

முதல் விமானப் பயணத்தில் மானத்தை வாங்கலாமா :)
             ''இப்போ எதுக்கு ஏர் ஹோஸ்டசை கூப்பிடச் சொல்றே ?''
             ''சைடு  ஜன்னல் கண்ணாடிக் கதவைத் திறக்கத்தான் !''  

அதே தொழில்தான் ,பெயர்தான் வேறு :)           
               ''கொள்ளை அடித்த காசிலே  மருத்துவக்கல்லூரி தொடங்கிட்டாராமே,அவர் ?'' 
              ''இனிமேல் சட்டத்துக்கு உட்பட்டு கொள்ளை அடிக்க பிளான் பண்ணிட்டார் !''

எங்குமிருப்பது காக்கா மட்டுமா,காக்கா பிடிக்கிறவங்களும்தான் :)
           ''மரத்தடியிலே பைக்கை நிறுத்தினாலே ,காக்கா அசிங்கம் பண்ணிடுதே !''
          ''ஆமா ,காக்கா இல்லாத இடமும் இல்லை ,அது 'கக்கா 'பண்ணாத பைக்கும் இல்லை ! ''

உண்மையை மறைக்காத மனைவி :) 
           ''மனிதனைப் போலவே  கரடி குறட்டை விடும்னு,  ஆராய்ச்சியிலே கண்டுபிடிச்சு  இருக்காங்களாமே  ?''
           ''இதுக்கு ஏன் ஆராய்ச்சி ? நீங்க தூங்குறதைப் பார்த்தா அப்படித்தானே இருக்கு ?''

 அதிசயப் பிறவிகள் :)
            ''என்னடி சொல்றே .உன்  இரட்டைக் குழந்தை போல் ,  யாருக்கும் இதுவரைப் பொறக்கலையா ,எப்படி ?''
           ''முதல் பையன் பிறந்த மூன்று மாதம் கழித்து அடுத்தவன் பிறந்தானே !''
இளம்மனைவியின் முதல் வார்த்தை :)
அம்மா என்பது குழந்தையின் முதல் வார்த்தை ...
 தனிக்குடித்தனம் என்பது இளம் மனைவியின் முதல் வார்த்தை !

இந்த லிங்க் ...http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1465383செல் மூலமாய் 'தம'ன்னா  வோட் போடுவோரின் வசதிக்காக :)

37 comments:

  1. #Rajeevan RamalingamTue Jul 04, 12:29:00 am
    மொபைல்வாசிகளுக்கான தமன்னா எங்க ஜீ?#

    உங்கள் வசதிக்காகவே,இன்று பதிவை அட்வான்ஸ் பண்ணிட்டேன் ,சரிதானே ரஜீவன் ஜி :)

    ReplyDelete
    Replies
    1. இன்னிக்கு நீங்க கொர்கொர்ர்ரா ரஜீவன் ஜி :)

      Delete
  2. காற்று வரலைனா... கண்ணாடியை திறந்து வைக்கலாம் தப்பில்லை.

    ReplyDelete
    Replies
    1. பிறகெதுக்கு அதை திறக்க முடியாதபடி செய்து இருக்காங்க :)

      Delete
  3. மனைவியின் முதல் வார்த்தை அருமை
    வாழ்ழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. நாளைக்கு நாமும் மாமியார் ஆவோம் என்ற எண்ணமே கொஞ்சமும் இல்லையே :)

      Delete
  4. ரசித்தேன் ஜி. எங்கள் தளத்தில் தமிழ்மணம் பட்டையைக் காணோம்!

    ReplyDelete
    Replies
    1. இதுக்கு எந்த ஏரியா போலீஸ் ஸ்டேசனில் புகார் தர முடியும் :)

      Delete
  5. Replies
    1. மனைவியின் உண்மையான வார்த்தையை ரசிக்க முடியுதா:)

      Delete
  6. சைடு கண்ணாடிக் கதவைத் திறங்க... விமானம் பறக்கிறமாதிரியே தெரியல... நிக்கிறமாதிரிதான் தெரியுது... அதான் எட்டிப் பாக்கணும்...!

    சட்டம் என் கையில்...!

    அய்ந்தறிவை மட்டும் சொல்லி என்ன பிரயோஜனம்...!

    ரொம்பத்தான் கரடி விடுறீங்க...!

    ஓடி ஒழிந்து விளையாடுறானாம்...!

    ‘குடி’ தனம் செய்வேன் என்பது கணவனின் முதல் வார்த்தை...!

    த.ம. 5

    ReplyDelete
    Replies
    1. உண்மையில் நிற்கிற மாதிரிதான் தோன்றும் ,விமானம் ஏறும்போதும் இறங்கும்போது மட்டுமே அடி வயிற்றில் ஒரு சின்ன ஜெர்க் :)

      அப்படிச் சொன்ன நீதிபதியே ஆறுமாசம் சிறையில் :)

      அதானே,வேல் கம்பு குத்தாத எல்லா இடத்திலும் ஆறறிவு ஒண்ணுக்குப் போவுதே :)

      நீங்க கரடி விடுறீங்க ,உங்களைப் பார்த்து கரடி குறட்டை விடுதோ:)

      தாமதமாய் பிறந்த இளையவன் தானே :)

      வீடு விளங்கிடும் :)

      Delete
  7. // '' சட்டத்துக்கு உட்பட்டு இனிமேல் கொள்ளை அடிக்க பிளான் பண்ணிட்டார் !''//

    சட்டம் இதையெல்லாம் சட்டை பண்ணாது!

    ReplyDelete
    Replies
    1. சட்டத்தை சட்டைப் பண்ணாமல் ,கோடிக்கணக்கில் நன்கொடை வாங்கும் எத்தனை கல்வித் தந்தைகள் சிறைக்குச் செல்கிறார்கள்:)

      Delete
  8. Replies
    1. கல்வித் தந்தைகளின் சேவையை ரசிக்க முடியுதா :)

      Delete
  9. Replies
    1. குழந்தையின் முதல் வார்த்தை மட்டும்தானே இனிமை :)

      Delete
  10. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  11. ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. எங்குமிருப்பது காக்கா மட்டுமா,காக்கா பிடிக்கிறவங்களும்தான் என்பது உண்மைதானே :)

      Delete
  12. இரசிப்பேன் முதல் வார் த்தை

    ReplyDelete
    Replies
    1. நம்ம மருமகள் சொன்னா ரசிக்க முடியுமா அய்யா :)

      Delete
  13. Replies
    1. கரடி குறட்டை தேவையில்லாத ஆராய்ச்சிதானே :)

      Delete
  14. அய்யோ..இளம் மனைவியின் முதல் வார்த்தை பல குடும்பங்களுக்கு ஆகாதே......

    ReplyDelete
    Replies
    1. ஆகாது என்றாலும் நடைமுறையில் அதுதானே ஜெயிக்குது :)

      Delete
  15. இரட்டையர்கள் மெடிக்கல் மிராக்கிள்

    ReplyDelete
    Replies
    1. தமிழ்மண வாக்கை போட மறக்கும் அளவுக்கு உங்களை அது செய்திருக்கே ,உண்மையிலேயே மெடிக்கல் மிராக்கிள்தான் :)

      Delete
  16. மனைவியின் முதல் வார்த்தை அற்புதம்

    ReplyDelete
    Replies
    1. காதுலே தேன் பாயுதா :)

      Delete
  17. சிங்கப்பூராக இருந்தால் காகம் பற்றிய கவலை வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. அந்த ஊர் முன்னேறத்தைப் பார்த்தால் அங்கே காக்கா பிடிக்கும் ஆட்களும் இருக்க மாட்டார்கள் என்றே நம்பத் தோன்றுகிறது :)

      Delete
  18. மனைவியின் முதல் வார்த்தைப் படி இப்போது தனிக்குடித்தனம் தானே! கல்யாணம் ஆனால் அவர்கள் வேறு ஊரில் மாமனார், மாமியார் வேறு ஊரில் தானே இருக்கிறார்கள்.
    விடுமுறைக்கு மட்டுமே வருகிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஒரே ஊரில் என்றாலே தனிக் குடித்தனம் தான் ,வெளியூரில் வேலை என்றால் லாட்டரி தான் :)

      Delete
  19. ஏர் கண்ணாடி.. திறப்பதா ஹஹஹ..
    ரசித்தோம் ஜி.

    ReplyDelete
    Replies
    1. AC காற்று அவருக்கு ஒத்துக்காது என்பதால் ,இயற்கைக் காற்றைத் தேடுகிறாரோ :)

      Delete