19 July 2017

செவ்'வாய் 'தெரியும், செவ்வாய் தோஷமா :)

  இருந்தாலும் இவ்வளவு தன்னடக்கம் கூடாது :)           
                 '' அவருக்கு  'வாடா 'ன்னு கூப்பிடப் பிடிக்காது ,சரி ..அவரோட    பையன்  வேலையில் இருக்கிற  ஊர்ப் பெயரைக் கேட்டீங்களா ?''
                 ''விஜயவாங்கன்னு சொல்றாரே !''

பெண்டாட்டி மேலே அவ்வளவு நம்பிக்கை :)            
               ''தினமும் முதலில் காக்கைக்கு வைத்து விட்டுச் சாப்பிடுறீங்களே ,முன்னோர்கள்  மேலே அவ்வளவு பாசமா  ?''

                ''அட நீங்க ஒண்ணு, அந்த காக்காவுக்கு  எதுவும் ஆகுதான்னு  பார்க்கத்தான்  !''

செவ்'வாய் 'தெரியும், செவ்வாய் தோஷமா :)  
             '' என் பொண்ணுக்கு வரன் ஒண்ணுமே அமையாம தள்ளிப் போய்கிட்டே இருக்கே ,என்ன செய்யலாம் ?''
               ''ஜவ்வாய் தோஷம் இருக்குதான்னு பாருங்க !''
பெண்டாட்டியை விட்டுக்  கொடுக்கலாமா :)
            ''ரயில் கிளம்பியதில் இருந்து, உங்க மனைவி தொணதொணன்னு பேசிக்கிட்டேதான் வர்றாங்க  ,எனக்கு புரியாத மொழி வேற ... 
தலை வலிக்குதே  சார் !''
            ''வலிக்காதா பின்னே ?புரியுற எனக்கே தலைவலிக்குதே !''

சிற்பியின் குற்றமா ,கடவுளின் குற்றமா ?
          எல்லோரும் வணங்கும் கடவுளை வடிக்க 
          எந்த சிற்பியாலும் முடியவில்லை !

மொபைல்வாசிகள், தமிழ்மண வாக்களிக்க  இதோ லிங்க் ..http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1466824

25 comments:

  1. விஜயவாங்க.... ஹா ஹா ஹா

    ஜவ்வாய் தோஷம் கல்யாணத்துக்குப் பிறகுதான் தெரியும்!

    ReplyDelete
    Replies
    1. ஆந்திரா அரசாங்கத்திடம் பெயரை மாற்றச் சொல்லுவாரோ :)

      ஆணுக்கா பெண்ணுக்கா :)

      Delete
  2. இவருக்கு விஜய்ன்னு சொன்னாலே பிடிக்காதாமே...! ‘வாடா’ சொல்லாம... காலை எடுத்துட்டு வட மதுரைன்னு சொன்னா மதுரைக்காரருக்குப் பிடிக்குமோ என்னவோ...?!

    ஆக காக்கா ஆ(க்)கச் சிறததா ஆயிடுச்சு...!

    கல்யாணத்தை ஜவ்வாய் இழுக்காதிங்க...!

    புரியாத மொழிய பேசக் கத்துக்கிட்டாய்... சீக்கிரம் பெரிய மனுஷியா ஆயிடுவா...!

    இல்லாததை வடிக்கச் சொன்னா அவங்களும் எவ்வளவுதான் கஷ்டப்படுவாங்க... நீங்களே சொல்லுங்க...!

    த.ம. 4











    ReplyDelete
    Replies
    1. வைகை வட கரைப் பக்கம் வாழும் எனக்கும் பிடிக்கும்னு உங்களுக்கு எப்படி தெரிந்தது :)

      பரிசோதனைக்கு எலி என்பார்கள் ,இவருக்கு காக்கா :)

      ஆமா ,காலத்தே பயிர் செய்ன்னு சொல்லியிருக்காக :)

      காதுலேயே நுழையலே,கற்றுக்கிறதா :)

      அதைதான் சொல்ல வந்தேன் ,சாணியைப் பிடிச்சு வச்சாலும் பிள்ளையார்ன்னு சொல்றது நல்லாவா இருக்கு :)

      Delete
  3. நல்லவேளை ''விஜயா வாடி''னு சொல்லவில்லை.

    ReplyDelete
    Replies
    1. அது ,வீட்டிலே குழப்பத்தை உண்டாக்கும் வம்பா ஆயிடுமே :)

      Delete
  4. அனைத்தையும் ரசித்தேன், வாங்க...அதிகமாகவே.

    ReplyDelete
    Replies
    1. இதை வாங்கலாம் ,கடன்தான் வாங்கக் கூடாது :)

      Delete
  5. விஜயவாங்க ஹஹஹஹஹ...

    ஜவ்வாய் தோஷம்...ஹாஹாஹா..

    காகம் கினிபிக் ginipig ஆயிடுச்சே....

    அனைத்தும் ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. கினிபிக் என்பது சோதனை எலியா ஜி :)

      Delete
  6. // ''விஜயவாங்கன்னு சொல்றாரே !''//

    கொஞ்சம் மறை கழன்றதோ!?

    ReplyDelete
    Replies
    1. இதிலென்ன கொஞ்சம் :)

      Delete
  7. பேஷ் பேஷ்... செவ்வாய் தோஷம் போயி ''ஜவ்வாய் தோஷம்மா...?????

    ReplyDelete
    Replies
    1. அதுதானே சரியான சொல் :)

      Delete
  8. ''விஜயவாங்கன்னு சொல்றாரே !''
    நல்ல மரியாதை
    அனைத்தும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. இப்படி சொல்லிச் ரயில் டிக்கெட் கேட்டால் கிடைக்குமா :)

      Delete
  9. சிற்பியின் குற்றமா ,கடவுளின் குற்றமான்னு சொல்லவே இல்லையே :)

    ReplyDelete
  10. "பெண்டாட்டியை விட்டுக் கொடுக்கலாமா" - ரசித்தேன்.
    'சிற்பி கடவுள்' - சிந்திக்க வைத்தது
    மற்றவற்றை ஏற்கனவே படித்திருக்கிறேன் (விஜயவாங்க ஒரு படத்தில் வந்தது).
    த. ம +1

    ReplyDelete
    Replies
    1. அடடா ,விஜயவாங்க எனக்கு முன்பே வந்து விட்டதா :)

      Delete
  11. இரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. முன்னோர்கள் மேல் உள்ள பாசம் வியக்க வைத்ததா ?

      Delete
  12. விஜயவாங்கநல்லாஇருக்கு

    ReplyDelete
    Replies
    1. பெயரை மாற்றிவிடச் சொல்வோமா :)

      Delete
  13. சிற்பி சிந்திக்க வைக்கிறது

    ReplyDelete
    Replies
    1. சிந்தித்தால் சிரிப்பு வரணுமே :)

      Delete