29 July 2017

ஊருக்கு ஒண்ணை வச்சிகிட்டு ,இப்படியா பேசுவது :)

படித்ததில் இடித்தது :)
                ''உழவுத் தொழிலே நசிந்து போச்சுங்கிறதை நம்பாம இருந்தீங்களே ,இப்போ எப்படி மாறினீங்க ?''
               ''இந்த விளம்பரத்தைப் பார்த்துதான் !''
இடித்த செய்தி .....ஏர் உழும் பயிற்சி வகுப்பு :)
பேப்பர் பேனா பென்சிலுக்கு செலவே  செய்யாதவரோ :)          
             ''ஓய்வு வாழ்க்கை கஷ்டமா இருக்கா ,ஏன் ?''
             ''குண்டூசியைக் கூட காசு கொடுத்து வாங்க வேண்டியிருக்கே!''

ஊருக்கு ஒண்ணை வச்சிகிட்டு ,இப்படியா  பேசுவது :)
          '' அஞ்சலி செலுத்தும் கூட்டத்தில் ,தலைவர் என்ன தப்பா பேசிட்டார் ,இப்படி கல்லைக் கொண்டு எறியுறாங்க ?''
           ''நான் வாழும் காலத்தில் அவரும் வாழ்ந்தார் என்பது  நமக்கெல்லாம் பெருமைதானேன்னு உளறிட்டாராம்!'' 

போலி டாக்டரா இருப்பாரோ :)
          ''மாசமா இருக்கிற எனக்கு நிறைய இரும்புச்சத்து மாத்திரைக் கொடுக்கிறீங்களே ,ஏன் டாக்டர் ?''
          ''நீங்கதானே பிறக்கிற குழந்தை 'துரு துரு'ன்னு இருக்கணும்னு சொன்னீங்க !''

பிள்ளைங்களுக்கும் இந்த நோய் தொடராமல் இருக்கணும் :)
           ''ஜோடிப்பொருத்தம் சூப்பர்னு சொல்றீங்களே ,ஏன் ?''
           ''தூக்கத்திலே  எழுந்து  நடந்தாக்கூட அந்த தம்பதிகள் ஜோடியா நடக்கிறாங்களே !''

டிக்கெட் எடுக்காமலும் இந்த ஊருக்குப் போகலாமே :)
பஸ் படிக்கட்டிலே தொங்குபவர்கள் டிக்கெட் எடுக்கிறார்கள் ....
ஆனால் போய் சேரும் இடம்தான்  சிலநேரம் மாறிவிடுகிறது !

மொபைல்வாசிகள், தமிழ்மண வாக்களிக்க  இதோ லிங்க் ....http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1467682


27 comments:

  1. உழுவதற்கு நீர் இல்லை. அதனால் அப்புறம் நிலமும் இல்லை. என்ன செய்ய...

    ஓய்வுக்குப் பின்னான வாழ்க்கை... அது என்னவோ நிசம்தாங்க!

    கடைசித் தத்துவம்... :)))

    ரசித்தேன் ஜி.

    ReplyDelete
    Replies
    1. நீர் இல்லையென்று கண்ணீர்தான் வருகிறது :)

      ஓய்வு காலத்தை இனிமையுடன் கழிப்பதும் அவரவர் கையில்தான் :)

      கடைபிடிக்கத்தான் ஆளில்லை :)

      Delete
  2. Replies
    1. ரொம்ப பிஸியா ஜி :)

      Delete
  3. மேலே பையன் துரு துருன்னுதான் நிற்கிறான்.

    ReplyDelete
    Replies
    1. அவன் பண்ற சேஷ்டை தாங்க முடியலியாம் :)

      Delete
  4. ஜோடிப்பொருத்தம் சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. வீட்டிலே கொள்ளைக் காரன் புகுந்து விடப் போகிறான் :)

      Delete
  5. துருதுர்வும், ஜோடிப்பொருத்தமும் சூப்பர்.

    தம 5

    ReplyDelete
    Replies
    1. இந்த வயசிலேயே இம்புட்டு அறிவாளியா இருக்கானே :)
      விடிவதற்குள் வாக்கிங் முடிந்து விடுமா:)

      Delete
  6. மாடு வதை சட்டமுன்னு உள்ள புடுச்சுப் போடுறதுக்குத் திட்டமா...?!

    காச வாங்கித்தான் பழக்கம்... கொடுத்துப் பழக்கமில்ல... எது வாங்கனுமுனாலும் இப்ப காசு கொடுக்க வேண்டி இருகே... கஷ்ட காலம்...!

    ‘யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலை...!’

    ஏன் டாக்டர் நீங்க ‘திரு...திரு...’ன்னு முழிக்கிறிங்க...!

    நல்லாப் பாருங்க... தாலிக் கயித்தக் கழட்டி புருஷனோட கையோட அவ கையையும் சேத்துக் கட்டிப் போட்டிருக்கா...!

    எங்க போனாலும் காசு கொடுக்கலைங்கிற அவப் பெயர் வந்திடக் கூடாதில்ல...!

    த.ம. 6



    ReplyDelete
    Replies
    1. மெதுவா சொல்லுங்க ,காவிகளின் காதில் விழுந்து விடப் போகிறது :)

      குண்டூசிக்கும் நாதி இல்லாம போச்சே :)

      நாம எங்கே இருக்கோம்னு அவருக்கும் தெரியலே :)

      இம்புட்டு துருதுரு ன்னு இருந்த முழிக்கத் தானே செய்வார் :)

      இதுவும் நல்லாத்தானே இருக்கு :)

      சரி சரி மேலே வரப் பாருங்க :)

      Delete
  7. ஓய்வுக்குப் பின்'னான வாழ்க்கை குத்தும் தானோ..(துளசி:.அடுத்த வருடம் ஓய்வாச்சே...,,,,,,)

    துரு துரு..ஹாஹா ரசித்தோம்ஜி

    ReplyDelete
    Replies
    1. வாங்கி வாங்கி சிவந்த கரங்களுக்கு வேண்டுமானால் குத்தும் :)

      துரு துரு பையனின் சேஷ்டைசூப்பர்தானே :)

      Delete
  8. ஏர் உழவு பயிற்சியா ? அதிர்ச்சி தகவல்

    ReplyDelete
    Replies
    1. தங்கத் தமிழ் நாட்டுக்கு வந்த சோதனையா இது :)

      Delete
  9. பிறக்கிற குழந்தை 'துரு துரு'ன்னு...//

    பொடியன் தன்னோட உயரத்துக்கு மேல் பீச்சியடிக்கிறானே!!!

    ReplyDelete
    Replies
    1. அவனாலே முடியுது செய்கிறான் :)

      Delete
  10. தெருவுக்கு ஒன்னு வச்சிருந்தாலும் அதுவும் வளர்ச்சி தானுங்களே.............

    ReplyDelete
    Replies
    1. மிதமான
      வளர்ச்சி இல்லே ,அபரிமிதமான வளர்ச்சி :)

      Delete
  11. ரசித்தேன்.

    த.ம. 15-ஆம் வாக்கு.

    ReplyDelete
    Replies
    1. இன்றைய கிழமையை jokkaali sunday ஆக்கியதற்க்கு நன்றி ஜி :)

      Delete
  12. உழவுப் பயிற்சிக் கட்டணம் - காலத்துக்கேற்ப எல்லாம் மாறுகிறது. ஆனால், உழுவது பயிற்சிகொடுத்து வரும் கலையா? (இதேபோல் விவசாயம் செய்ய ஏதேனும் படிப்பு இருக்கிறதா?. B.Sc Agri என்று சொல்லாதீர்கள். இதுமாதிரி ஒருவார, இரண்டுவாரப் பயிற்சி)

    'குண்டூசி'- செம ஜோக். ஆபீசில் வேலைபார்ப்பவர்கள் அனேகமாக எல்லோரும் செய்வதுதான் இது.

    த ம

    ReplyDelete
    Replies
    1. வேளாண்மைக் கல்லூரியில் விசாரித்தால் தெரியும் :)

      குற்ற உணர்வு குத்தாதோ :)

      Delete
  13. ஏர் உழ பயிற்சி தரும் கொடுமையையுமா :)

    ReplyDelete
  14. ஏர் உழுவது என்ன ஏட்டுச் சுரைக்காயா
    அவர் என்ன அரசு ஊழியரா
    அவருக்குப் பெருமைதானே என்று இருந்திருக்க வேண்டுமோ
    கருவிலே துரு வா
    உயிரிலும் உணர்விலும் பிரியாதவர்கள்
    போகுமிடம் பற்றி நினைப்பதே இல்லை

    ReplyDelete
    Replies
    1. அப்படித்தானே ஆகிப் போச்சு :)
      எல்லா ஆபீசிலும் இது நடக்கக் கூடியது தானே :)
      குடிகாரன் இவன் காலத்தில் வாழ்ந்தது அவருக்குப் பெருமையா :)
      கருவிலே திரு உடையார் என்றல்லவா சொல்வார்கள் :)
      செத்தாலும் ஜோடியாக சாவார்களோ :)
      அது சரி ,பயணம் எங்கே போனாலென்ன ,பாதை நூறு ஆனாலென்ன :)

      Delete