21 July 2017

மனைவி 'மை லார்ட்'டிற்கும் மேல் :)

பக்தி மனசிலே இருந்தா போதும் :)
             ''சுகர்  இருக்கிற உங்களுக்கு வாய் அடக்கம் வேண்டாமா ....மயங்கி விழும் அளவுக்கு அப்படியென்ன சாப்பிட்டீங்க ?''
              ''சாமி பிரசாதமாச்சேன்னு அரை லட்டுதான் சாப்பிட்டேன் !''


மந்திரின்னா  பொது அறிவு வேணாமா :)
        ''இலவச வேட்டி சேலை வாங்க வந்த நெரிசல்லே சிக்கி நாலு பேர் இறந்ததுக்கா ,மந்திரி டிஸ்மிஸ் ஆனார்  ?''
        ''அதுக்காக இல்லை ...'கியூ'பிரிவு  போலீசார் வரிசையை ஒழுங்குபடுத்தலைன்னு  கண்டனம் தெரிவிச்சாராம் !''

கடிபட விரும்பும் நல்ல உள்ளம் :)
      ''வாங்கின புதுச் செருப்பை எதுக்கு ரிடர்ன் பண்றீங்க ?''
     ''புது செருப்புன்னா கொஞ்சமாவது கடிக்க வேண்டாமா ?''
காதல் கடிதங்களை வைத்திருக்கலாமா :)
            ''நான் எழுதிய காதல் கடிதங்களை ,இப்போ நம்ம பையன் படிச்சிட்டான்னு எப்படி சொல்றே ?''
           ''மொக்கைன்னு தெரிஞ்சும் மோசம் போயிருக்கியே அம்மான்னு கிண்டல் பண்றானே !''

மனைவி 'மை லார்ட்'டிற்கும் மேல் :)
       வாய்தா ...
       கோர்ட்டில் கேட்க முடிந்த வக்கீலாலும்
       வீட்டில் மனைவியிடம் கேட்க முடிவதில்லை !

மொபைல்வாசிகள், தமிழ்மண வாக்களிக்க  இதோ லிங்க் ..http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1467006

30 comments:

  1. சாமி பிரசாதம் சாப்பிட்டால் சாமி பார்த்து கொ"ல்லு"ம்

    ReplyDelete
    Replies
    1. இன்னும் அரை லட்டு சாப்பிட்டால் சாமியே அழைத்துக் கொள்ளும் :)

      Delete
  2. சாமி பிரசாதம் அருமை
    அரை லட்டு என்பதை
    ஆறு லட்டுதான் என இருந்தால்
    இன்னும் சிறப்பாக இருக்குமோ

    ReplyDelete
    Replies
    1. டயாலிசிஸ் செய்துக் கொள்ளும் அவருக்கு ஒரு விள்ளலே அதிகம் ஆச்சே :)

      Delete
  3. சாமி விருப்பப்பட்டு ஒரு லட்டு கொடுத்து ஒங்கள அழைச்சிட்டுப் போலாமுன்னு நெனச்சா... அரை லட்டு சாப்பிட்டா எப்படி...?

    மந்திரி மேலதான் அந்த நாலு பேரும் விழுந்து கிடந்தாங்களாம்... மந்திரிய எந்திரிக்கவே விடலையாம்...!

    டிஸ்கவுண்ட் 80% போடுறப்பவே... இது புது செருப்பான்னா யோசிக்க வேண்டாமா...?!

    ‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லைன்னு...’ மொக்கைன்னு தெரிஞ்சும் மோசம் பண்ண அதையே ஜெராக்ஸ் எடுத்திட்டுப் போறானே...!

    வீட்டில் மனைவியிடம் ‘வாய்... தா’ன்னு கேக்க வேண்டியதுதானே...!

    த.ம. 4



    ReplyDelete
    Replies
    1. லட்டு வடிவத்தில் எமன் வர ஆரம்பித்து விட்டாரா :)

      அவரையைச் சேர்த்துக் கொண்டு போயிருக்கலாமே :)

      இது மூளைக்கு கடிக்கலையே :)

      மொக்கைகள் தொடர்கதையோ :)

      அதையும் தர மறுக்கிறாளே :)

      Delete
  4. // வீட்டில் மனைவியிடம் கேட்க முடிவதில்லை//

    கேட்கவேண்டியதுதானே. வக்கீலுக்கு வாய் நிறையக் கொழுக்கட்டையா என்ன!!!

    ReplyDelete
    Replies
    1. கோர்ட்டில்தான் வாய் கிழிய பேச முடியுதாம் :)

      Delete
  5. மனைவி மை லார்டுக்கும் மேலே மிக நன்று

    ReplyDelete
    Replies
    1. பைசா கொடுத்தாலும் சாதகமா தீர்ப்பு சொல்ல மறுக்கிறாளே :)

      Delete
  6. Replies
    1. கடிக்காட்டி அது புது செருப்பு இல்லையாமே :)

      Delete
  7. Replies
    1. காதல் கடிதங்களுக்கு கிடைத்த மரியாதையைப் பார்த்தீங்களா ஜி :)

      Delete
  8. அரைலட்டு மயக்கம் போட வைக்குதே
    மற்றவையும் ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. இதில் இன்னொரு லட்டுக்கு ஆசைப் படலாமா இவர் :)

      Delete
  9. மனைவிக்கும் மை-லார்டுக்கும் இருக்கிற ஒரே வித்தியாசம் - மை லார்ட் அப்பப்ப வாய்தா கொடுப்பார்; மனைவி நேரடியா ஜட்ஜ்மெண்ட்தான்! :-)

    ReplyDelete
    Replies
    1. பொய் சாட்சிக்கு வேலையே இல்லை என்றால் அது நல்ல தீர்ப்பு தானே ஜி :)

      Delete
  10. அனைத்தும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. நேற்று ,அழகர்கோவிலில் அலுவலக நிமித்தமாய் பணி ,உங்க நினைவுதான் வந்தது :)

      Delete
  11. இதிலிருந்து என்னா..தெரியுதன்னா....கோர்ட்டும் வீடும் ஒன்னுல்ல என்று தெரிகிறது....

    ReplyDelete
    Replies
    1. சாட்சி உண்மையோ பொய்யோ அங்கே ஜெயித்து விடலாம் ,வீட்டில் அது நடக்கவே நடக்காது :)

      Delete
  12. நல்லாத்தான் இருக்கு. அரை லட்டா ஆளை வீழ்த்திவிடும்? த ம +1

    ReplyDelete
    Replies
    1. சர்க்கரை நோயாளிக்கு அது அதிகம்தானே :)

      Delete
  13. Replies
    1. கியூ பிரிவு போலீஸின் அலட்சியம் தவறுதானே :)

      Delete
  14. Replies
    1. லட்டு இனிக்குதா:)

      Delete

  15. தமிழ் மணம் - 19
    மிக மிக நன்றாக உள்ளது நகைச் சுவைகள்...
    வாய்தா இல்லை
    மை லோட்..
    https://kovaikkothai.wordpress.com/

    ReplyDelete
    Replies
    1. வாய்தா என்பதால் வக்கீலைச் சொன்னேன் ,இது எல்லா கணவன்மார்களுக்கும் பொருந்தும்தானே :)

      Delete