3 July 2017

தனிக் குடித்தனம் போவதிலேயே குறி :)

படித்ததில் இடித்தது :)
             '' கண்ணே மணியே  என் வம்சம் தழைக்க வந்த GSTயேன்னு அவர் பாடுறாரே ,ஏன் ?''
               ''GST அமுலுக்கு வந்த நேரத்தில் பிறந்த  தன் குழந்தைக்கு GSTன்னு பெயர் வச்சிருக்காரே !''
            இடித்த செய்தியின்  தொடுப்பு ...பிறந்த குழந்தைக்கு GSTன்னு பெயர் வைத்த பெற்றோர் :)

உள்ளங்கை நெல்லிக் கனி போல :)    
           ''நான் மிதுன ராசி இல்லைன்னு எப்படி கண்டுபிடிச்சே ?''\
           ''அன்பும், புத்தி சாதுர்யமும் மிகுந்த மிதுன ராசி  நேயர்களே’ன்னு போட்டு  இருக்காங்களே  !''
தனிக் குடித்தனம் போவதிலேயே குறி :)
         ''ஜாதகப் பொருத்தம்  அருமையா  இருக்கு ,இப்போ எதுக்கு இன்னொரு ஜாதகத்தைத் தர்றீங்க?''
         ''இது என் அம்மா ஜாதகம் ....மாமியார் ,மருமகள் பொருத்தம் பார்த்து சொல்லுங்க !''

இதுக்குத்தான் படிக்கத் தெரியணும்னு சொல்றது :)
          ''இவ்வளவு நேரமா காலிங்  பெல்லை அடிச்சேனே ,உன் காதுக்கு கேட்கலையா ?''
          ''காலிங் பெல் வேலை செய்யாதுன்னு அது மேலே எழுதிப் போட்டிருக்கேனே ,உன் கண்ணுக்கு தெரியலையா ?''

சோறுன்னா மனுசன் சோழவந்தானுக்கே போறமாதிரி :)
           ''காக்கைங்க கண்ணுலேயே படமாட்டேங்குதே ,எங்கே போயிருக்கும் ?''
          ''வட இந்தியாவுக்குத்தான் !''

இளம் மனைவியின் கைமணம் :)
அடை போட்டதில் தேர் நின்றதோ இல்லையோ ...
என்னவள் வைத்த அடையினில் நின்றது ...
என் அடை தின்னும் ஆசை !

இந்த லிங்க் ...http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1465192செல் மூலமாய் 'தம'ன்னா  வோட் போடுவோரின் வசதிக்காக :)

36 comments:

  1. ஹலோ ஜீ வந்துட்டேன்.. வந்துட்டேன் :)

    ReplyDelete
    Replies
    1. நேற்றைக்கு வராத குறையே தெரியாத அளவுக்கு ,இன்னைக்கு முதலில் கமெண்ட்ஸ் போட்டு கலக்கிட்டீங்க ஜி :)

      Delete
  2. குழந்தையின் பெயர் GST ஆஆஆ...?? ஹாஹா

    ReplyDelete
    Replies
    1. FBன்னு கூட வைக்கலாம் FBல் இருநூறு கோடி பேர் சேர்ந்தாச்சுன்னு கொண்டாடிகிட்டு இருக்காங்களே:)

      Delete
  3. மிதுனராசி - நெத்தியடி காமெடி :)

    ReplyDelete
    Replies
    1. அன்பும், புத்தி சாதுர்யமும் அவருக்கு சம்பந்தம் இல்லாததாச்சே :)

      Delete
  4. காலிங் பெல் - மாஸ் மாஸ் :) :)

    ReplyDelete
    Replies
    1. வீட்டில் நுழைந்ததும் சண்டைப் போட்டால் இந்த மரியாதைதானே கிடைக்கும் :)

      Delete
  5. மாமியாரை யாரு மதிக்கிறார்கள் இப்போ ?

    ReplyDelete
    Replies
    1. மதிக்கிற மாதிரி நடிக்கவாவது செய்யலாமே :)

      Delete
  6. இப்போது புதுசாத் தெரிஞ்சாலும் அந்தப் பெயர் பின்னாட்களில் அந்தக் குழந்தைக்கு அர்த்தமில்லா ஒன்று!

    அப்போ எந்த ராசியும் எல்லோருக்குமே அப்படியே பொருந்தாதே!

    மா -ம ஜா பொருத்தம் கூடப் பார்த்துத் திருமணம் செய்வது நல்லதுதான் போல!

    காதும் கண்ணும்!

    வட போச்சே...

    பாவம்!

    ReplyDelete
    Replies
    1. ஏதாவது நிதிஉதவி கிடைக்கும்னு இந்த பெயரை வைத்திருப்பார்களோ:)

      எல்லாமே கப்சாதானே :)

      ஜாதகம் கூட பொய்த்துவிடுமே :)

      இரண்டுமே டேமேஜ்தானே:)

      விடுங்க ,அப்பமாவது கிடைச்சுதே :)

      அடை போச்சே :)

      Delete
  7. ஏன் பிறந்தாய் மகனே... ஏன் பிறந்தாயோ...? பிள்ளை பிறந்தாலும் இதுக்கும் ஜி.எஸ்.டி. கட்டவேண்டுமா வேண்டாமா என்று தெரியவில்லையே...!

    கன்னி ராசின்னு கண்டுபிடிச்சியா... இல்லையா...?!

    கண்ணாடியை வீட்ல வச்சுட்டு வந்துட்டேன் கண்ணாட்டி...!

    அட... வட இந்தியாவிற்கு... காக்கா வடையைச் சுட அல்ல... மழை பெய்வதால் தண்ணீர் குடிக்கச் சென்றிக்கும்...!

    அட... அடடா... அடை... மழைடா...!

    த.ம. 5

    ReplyDelete
    Replies
    1. அவருக்குப் பிறந்த மகனை ஏன் பிறந்தாயோ என்று நாம கேட்கமுடியாதே ?

      கன்னி ராசிக்கு கல்யாணம் நடக்கவே வாய்ப்பில்லைன்னு போட்டு இருந்ததே :)

      கண்ணாட்டியைப் பார்க்க வரும் போது கண்ணாடியை மறக்கலாமா :)

      இங்கேயே மழை வந்திருச்சே ,சீக்கிரம் திரும்பி வந்திடுமா :)

      நனைஞ்சுகிட்டே சாப்பிடுங்க :)

      Delete
  8. பிறந்த குழந்தைக்கு GSTன்னு பெயர் வைத்த பெற்றோர் :)//

    பெத்தவங்களை வதைக்காம இருந்தாச் சரி!

    ReplyDelete
    Replies
    1. ஊரே வதைப்படும் போது பெத்தவங்க தப்பிக்க முடியுமா :)

      Delete
  9. Replies
    1. மிதுன ராசி பலனை ரசிக்க முடியுதா :)

      Delete
  10. வம்சம் தழைக்க வந்தவரா இல்லை..........
    அன்பும் புத்தி சாதுர்யமும் இல்லைன்னு சொல்றீங்களா
    ஜாதகம் பொருந்தினால் மாமியார் மருமகள் சண்டை இருக்காதா
    படிக்கத் தெரியலையா கண் தெரியலையா
    யார் வீட்டுப் படையலுக்காவது போயிருக்கும்
    இப்பவும் அடை சுடுகிறார்களா

    ReplyDelete
    Replies
    1. GST வரியினால் லஞ்சத்தை வேண்டுமானால் தழைக்கச் செய்யலாமோ:)
      சம்பந்தமே இல்லைன்னு சொல்றேன் :)
      அப்படின்னு நம்புறாங்களே :)
      இப்படி எழுதி இருப்பார்ன்னு தெரியலே :)
      மற்ற நாட்களில் எச்சில் கையால் காக்கையை விரட்டாதவங்க வீட்டுக்கா :)
      அது விடை பெற்று ரொம்ப நாளாச்சே :)

      Delete
  11. மிதுன ராசியும் ஜி.எஸ்.டி-யும் நன்றாக உள்ளது

    ReplyDelete
    Replies
    1. ஆனால் இந்த GST,எந்த ராசிக்காரரையும் விடாது போலிருக்கே :)

      Delete
  12. சுவைத் தேன்!

    ReplyDelete
    Replies
    1. சோறுன்னா மனுசன் சோழவந்தானுக்கே போறமாதிரி.....பழமொழி சரிதானே :)

      Delete
  13. Replies
    1. இளம் மனைவியின் கைமணம் சூப்பர்தானே ஜி :)

      Delete
  14. தங்களின் நகைச்சுவை துணுக்குகளும் அதை மிஞ்சும் தலைப்புகளும் அருமை. அதுவும் அந்த மாமியாருக்கும் மருமகளுக்கும் ஜாதகப்பொருத்தம் பார்க்க சொல்வது மிக சிறுமை.

    ReplyDelete
    Replies
    1. மாமியார் மருமகளை மிஞ்சிவிடக் கூடாதுன்னு என்பதற்காக ஜாதகம் பார்க்கச் சொல்கிறார்களோ :)

      Delete
  15. கடந்த இரண்டு நாட்கள் குற்றாலத்தில் கழிந்து விட்டன
    ஓரிரு பதிவுகளைப் பார்க்காமல் விடடிருப்பேன் என நினைக்கிறேன்
    இனி தொடர்வேன்
    தம +1

    ReplyDelete
    Replies
    1. நானும் கடந்த வாரம் சென்று வந்தேன் அருமையான சீசன் ,அனுபவித்தேன் :)

      Delete
  16. ஜிஎஸ்டி....அஹஹ்ஹஹஹ் அனைத்தும் ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. மூன்றெழுத்தில் நாம் பெயரைச் சுருக்கமா சொல்வோம் ,அவர் பெயரே அப்படியாகிப் போச்சே :)

      Delete
  17. அட..அதுக்கும் கூட..சாதகம் பாப்பாங்ககளா....?????????????????

    ReplyDelete
    Replies
    1. ஜாதகப் பொருத்தப்படி உண்மையில் நடக்கும் என்றால் இதையும் பார்க்கலாமே :)

      Delete
  18. இது என் அம்மா ஜாதகம் ....மாமியார் ,மருமகள் பொருத்தம் பார்த்து சொல்லுங்க !''//

    அட இதுகூட நல்லா இருக்கே!

    ReplyDelete
    Replies
    1. இந்த பொருத்தம், நூற்றுக்கு ஒருவருக்கு இருக்குமா என்பதே சந்தேகம் தானே :)

      Delete